Published:Updated:

பிரதமரின் வரிச் சீர்திருத்தம் எப்படி? - புதிய பெட்டியில் பழைய சரக்கா?

Modi
பிரீமியம் ஸ்டோரி
Modi

வருமானம் இருந்தும் வரி செலுத்தாமல் முறைகேடு செய்வது இனி சாத்தியமற்றது!

பிரதமரின் வரிச் சீர்திருத்தம் எப்படி? - புதிய பெட்டியில் பழைய சரக்கா?

வருமானம் இருந்தும் வரி செலுத்தாமல் முறைகேடு செய்வது இனி சாத்தியமற்றது!

Published:Updated:
Modi
பிரீமியம் ஸ்டோரி
Modi
கொரோனாவால் பாதிக்கப்பட்ட இந்தியாவை மறுகட்டமைப்பு செய்வதற்கு மத்திய அரசு முயற்சி செய்துவருகிறது. இதற்காக, வரி செலுத்துவதை எளிமையாக்கவும், நேர்மையாக வரி செலுத்துவோரைக் கௌரவிக்கவும் நேரடி வரி நிர்வாகத்தில் சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.

அரசின் இந்தத் திட்டத்துக்கு ‘வெளிப்படையான வரி விதிப்பு’ (Transparent Taxation - Honoring the Honest’) எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை ஆகஸ்ட் 25-ம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளது.

பிரதமரின் வரிச் சீர்திருத்தம் எப்படி? - புதிய பெட்டியில் பழைய சரக்கா?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

முகமறியா கணக்காய்வு மற்றும் முறையீடு!

இதுவரை, அந்தந்த நகரத்திலுள்ள வருமான வரி அலுவலகத்தில் இருந்து வரி செலுத்துவோரின் வரிக் கணக்குகள் சரிபார்க்கப்படும். முறைகேடுகள் ஏதாவது கண்டறியும்பட்சத்தில் வரி செலுத்தாதவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்படும். ஆனால், இனி ஒருவர் வரி செலுத்தும்போது அதை ஆய்வு செய்யும் அதிகாரி, நாட்டின் வேறு ஏதாவது ஒரு மண்டலம் அல்லது பகுதியைச் சேர்ந்த, முகமறியாத நபராக இருப்பார்.

உதாரணத்துக்கு, தற்போதுள்ள நடைமுறையின்படி, சென்னையில் தனியார் துறையில் பணிபுரியும் ஒருவரின் வருமான வரிக் கணக்கு தாக்கலை யார் மதிப்பீடு செய்ய வேண்டும் என்பதை இனி தொழில்நுட்பம்தான் தேர்வு செய்யும். அவர் ‘வரைவு மதிப்பீடு’ செய்வார். இந்த வரைவு, வேறொரு நகரில் உள்ள இன்னோர் அலுவலருக்குச் செல்லும். இவர் மதிப்பீட்டு ஆணை வழங்குவார்; இதைத் தொடர்ந்து மூன்றாவதாக ஒரு நகரில் உள்ள ஓர் அலுவலர் அதை ரிவ்யூ செய்வார்.

இனி கணினி மூலமாகவே வரி செலுத்துவோருக்கு நோட்டீஸ் அனுப்பப்படும். இவ்வாறு அனுப்பப்படும் நோட்டீஸுக்கு வரி செலுத்துவோர், அலுவலகத் துக்கு வராமல், அதிகாரி யாரையும் சந்திக்காமல் நேரடியாக மின்னஞ்சல் மூலமாக பதிலளிக் கலாம். இதில், வரி செலுத்து வோருக்கும் வருமான வரித் துறைக்கும் இடையே அதிகாரி களின் தலையீடு எதுவும் இருக்காது. இதே வழியில்தான் ‘முகமறியா முறையீடு’ம் (Faceless appeal) இருக்கும்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

வரி செலுத்துவோர் கெளரவமாக நடத்தப்படுவர்

`முகமறியா கணக்காய்வு’ திட்டத்தை அறிமுகம் செய்த பிறகு, வரி செலுத்து வோருக்கான சாசனம் (Tax Payers’ Charter) என்ற ஒன்றையும் பிரதமர் மோடி வெளியிட்டுள்ளார்.

Modi
Modi

இதன்படி, குற்றங்களைக் கண்டுபிடிக்கும் காவல்துறை பணியைச் செய்துகொண்டிருக்கும் வருமான வரித்துறை, வரி வசூலிப்பதற்கான பணியை மட்டுமே இனி செய்யும். வேண்டிய விவரங்களைச் சேகரித்துக்கொண்டு, அதன் அடிப்படையில் அவருக்கு வரிக் கட்டுப்பாடு (tax liability) எவ்வளவு என்று நிர்ணயிப்பது மட்டுமே வரித்துறையின் பணியாக இருத்தல் வேண்டும். மாறாக, குற்றவாளியைப்போல் ஒருவரை நடத்துதல் அவரின் தன்மானத்துக்கு இழுக்கு சேர்ப்பதாகும். இதை இந்தச் சாசனம் நன்கு தெளிவுபடுத்தியிருக்கிறது.

வெளிப்படைத்தன்மை அதிகரிக்கும்!

‘‘வரித்துறையில் கொள்கை சார்ந்த நிர்வாகம், மக்களின் நேர்மைக்கு மதிப்பளித்தல், புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துதல், திறமையான நடவடிக்கைகள் ஆகிய நான்கு முக்கிய சீர்திருத்தங்கள் தேவை. அதனால்தான், தற்போதைய வரிச் சீர்திருத்தம் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது.

சதீஷ்குமார், கோபாலகிருஷ்ண ராஜு
சதீஷ்குமார், கோபாலகிருஷ்ண ராஜு

நடைமுறையில் இருக்கும் தற்போதைய வரி விதிப்பு முறை ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்டது. எனவே, வரி விதிப்பு முறையில் அடிப்படையிலும் அமைப்பிலும் சீர்திருத்தம் கொண்டுவர வேண்டியுள்ளது. சில மாதங்களுக்கு முன்னதாக, வரி செலுத்துவதில் உள்ள பிரச்னைகளுக்கு நீதிமன்றத்துக்கு வெளியே தீர்வுகாணும் நடைமுறை அண்மையில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் பலனாக, குறுகிய காலத்தில் மூன்று லட்சம் வழக்குகள் முடித்து வைக்கப்பட்டிருக்கின்றன. தற்போதைய வரிச் சீர்திருத்தத்தாலும் முறைகேடுகள் நீங்கி, வெளிப்படைத்தன்மை அதிகரிக்கும்” என்பது வருமான வரித்துறை அதிகாரிகளின் கருத்தாக இருக்கிறது. என்றாலும், இப்போது அறிவிக்கப் பட்டிருப்பதில் புதிய விஷயம் எதுவும் இல்லை. ஏற்கெனவே சொல்லப்பட்ட விஷயங்களை மீண்டும் புதிதாகச் சொல்வதுபோல சொல்லியிருக்கிறார்கள். இதைப் பொறுத்தவரை, புதிய பெட்டியில் பழைய சரக்குத்தான் என்று சொல்ல வேண்டும் என்கிறார்கள் வேறு சிலர்.

இந்த வரிச் சீர்திருத்தங்கள் குறித்து ஆடிட்டர் சதீஷ்குமார், ‘‘நீதிமன்றத்துக்குப் போகாமல், வழக்குகளை முடிக்க முடியாது. அதுபோலவே வரித்துறை சார்ந்த அலுவலகங்களுக்குப் போகாமல் வரி முறையீடுகளை ‘முகமறியா கணக்காய்வு’ மூலம் செய்ய முடியாது. இப்படிச் சொல்வதால், நான் இந்தத் திட்டத்துக்கு எதிரானவன் என நினைக்க வேண்டாம். சம்பளதாரர்கள் மற்றும் ரூ.50 லட்சத்துக்கு குறைவான முதலீடு கொண்ட நிறுவனங்களுக்கு இந்தத் திட்டம் ஏற்புடையது. பொதுவாகவே, வரி முறையீட்டில், அத்துறை சார்ந்த அதிகாரிக்கு வரி முறையீடு செய்பவர் பல விளக்கங்களைத் தர வேண்டியிருக்கும். சில விஷயங்களைத்தான் ஆவணங்கள் முலமாக அதிகாரிகளுக்கு விளக்க முடியும். பல விஷயங்களை நேரில் பார்த்துப் பேசும் போதுதான் எடுத்துச் சொல்லி புரியவைக்க முடியும். இப்படி இருக்கும்போது, எல்லாவற்றையும் முகம் பார்க்காமலே செய்வது சிரமத்துக்குதான் வழி வகுக்கும்” என்றார்.

பிரதமரின் வரிச் சீர்திருத்தம் எப்படி? - புதிய பெட்டியில் பழைய சரக்கா?

ஆடிட்டர் கோபாலகிருஷ்ண ராஜுவிடம் இதுபற்றி பேசினோம். “அரசின் இந்த வரிச் சீர்திருத்தங்கள் வரவேற்கத்தக்க ஒன்று. மற்ற துறைகளை விடவும், வரித்துறையில்தான் அதிகமான வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும். அந்த வெளிப்படத்தன்மை இருந்துவிட்டாலே, வரி செலுத்துபவர்கள் தானாக முன்வந்து வரி செலுத்துவார்கள். அதனால்தான் அதில் அரசு முனைப்புக் காட்டுகிறது. அதற்கான நடைமுறைகளில் ஒன்றுதான் இந்த ‘முகமறியா கணக்காய்வு மற்றும் முறையீடு’ திட்டம்.

இன்றைய நிலையில், 138 கோடி மக்களில் 122 கோடி மக்களுக்கு ஆதார் இருக்கிறது. 45 கோடி மக்களுக்கு மட்டும்தான் பான் கார்டு இருக்கிறது. பான் இருக்கக்கூடியவர்களில் 5 கோடிக்கும் குறைவானவர்கள் வரி செலுத்த தகுதி இருந்தும் வரி செலுத்துவதில்லை. இப்படி வருமானம் இருந்தும் வரி செலுத்தாமல் முறைகேடு செய்வது இனி சாத்தியமற்றது. ‘முகமறியா கணக்காய்வு’ மூலம் வரி முறையீடு செய்பவர்களும் அதிகாரிகளும் சந்திக்கத் தேவையில்லாமல் போகும்போது, அந்த இடத்தில் முறைகேடுகள் இல்லாமல் போகிறது. நேர்மை இல்லாத அதிகாரிகளையும், நேர்மையானவர்களாக மாற்றக்கூடிய வகையில்தான் இந்தத் திட்டம் வடிவமைக்கப் பட்டிருக்கிறது. லஞ்சம் வாங்கவோ, ஊழல் செய்யவோ இந்த வரிச் சீர்திருத்தத்தில் இடமில்லை. அதிகாரிகளும் நேர்மையாக இருப்பார்கள், வரி செலுத்துபவர்களும் நேர்மையாக நடத்தப்படுவார்கள்” என்றார்.

இந்தப் புதிய சீர்திருத்தத்தால் வரி செலுத்துவோரின் சிரமங்கள் குறையுமா என்பது போகப் போகத்தான் தெரியும்!

ட்விட்டர் சர்வே!

பிரதமரின் இந்த அறிவிப்புகள் குறித்து, மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை தெரிந்துகொள்ள விகடன் ட்விட்டர் பக்கத்தில் சர்வே ஒன்றை நடத்தினோம். அதில் 40.37% பேர் இந்தத் திட்டத்தை வரவேற்றிருக்கிறார்கள். சர்வே முடிவுகள் இனி...

பிரதமரின் வரிச் சீர்திருத்தம் எப்படி? - புதிய பெட்டியில் பழைய சரக்கா?