மத்திய அரசின்மீது கொரோனா காலத்திலும் சர்ச்சைகள் ஏராளம். அந்த வகையில் பிரதமர் மோடி அறிவித்த ‘PMCARES’ திட்டமும் கடும் சர்ச்சைகளைக் கிளப்பியிருக்கிறது.

PMCARES திட்டத்தை, மத்திய தணிக்கைக் குழுவால் தணிக்கை செய்ய இயலாது. அது தனியார் டிரஸ்ட்டின்கீழ் இயங்குகிறது. அதற்கு வரும் பணத்தை, தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் கண்காணிக்க இயலாது. நாடாளுமன்ற உறுப்பினர்கள்கூட அதுகுறித்து கேள்வி எழுப்ப முடியாது... இப்படி நீள்கின்றன சர்ச்சைகள்.

உண்மை நிலவரம் என்ன? மத்திய தணிக்கைக் குழுவால் PMCARES-ஐ தணிக்கை செய்ய இயலாது என்பது உண்மைதான். ஆனால், ‘தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் அந்த அமைப்புக்கு யாரெல்லாம் நன்கொடை அளித்துள்ளார்கள், யாருக்கெல்லாம் உதவி சென்றிருக்கிறது உள்ளிட்ட தனிநபர் விவரங்களையெல்லாம் பெற முடியுமா, பெற முடியாதா?’ போன்ற கேள்விகளுக்கான பதில்களுக்கு நாம் இன்னும் சில காலம் காத்திருக்க வேண்டும். ஏனெனில், இது ஆரம்பக்கட்ட நிலையில் இருக்கிறது. PMCARES-ஐ நாம் கேட்க வேண்டிய அனைத்து கேள்விகளையும், 1948-ம் ஆண்டு நேருவால் ஆரம்பிக்கப்பட்ட ‘PMNRF’ மீதும் எழுப்ப வேண்டும்.

ஆம்! இந்தியா சுதந்திரம் அடைந்த காலம் முதல் இதுபோன்ற திட்டங்களில் போதிய வெளிப்படைத்தன்மை இல்லை. பாகிஸ்தானில் இருந்து புலம்பெயர்ந்த மக்களுக்காக 1948-ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட PMNRF, படிப்படியாக இயற்கை பேரிடர், மனிதத் தவறுகளால் நடக்கும் பேரிடர் போன்ற விதங்களில் பயன்படுத்தப் பட்டது. பிரதமர், துணைப் பிரதமர், காங்கிரஸ் தலைவர், நிதியமைச்சர், டாடா குழும நிர்வாகி உள்ளிட்ட ஆறு பேரை உள்ளடக்கிய குழு சொல்லும் பரிந்துரைகளின்படி நிதியை பிரதமர் செலவிடுவார். 1985-ம் ஆண்டு ராஜீவ் காந்தி காலத்தில்தான், இதன் முழு அதிகாரமும் பிரதமருக்குக்கீழ் கொண்டுவரப்பட்டது. பரிந்துரை குழு இருந்தாலும், பிரதமர் வைத்ததுதான் சட்டம். 2019 டிசம்பர் வரையில் அதன் கணக்குகள் ஆடிட் செய்யப்பட்டிருக்கின்றன. அதில் இன்னும் செலவு செய்யாமல் இருக்கும் தொகை 3,800 கோடி ரூபாய்!

‘தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் தங்களுக்குக் கொடுத்த நன்கொடையாளர்களையோ, தாங்கள் உதவிய மனிதர்களின் பெயர்களையோ வெளியிட நிர்பந்திக்க முடியாது’ என அறிவித்தது PMNRF. 2018-ம் ஆண்டு மே மாதம் இதுகுறித்து தொடரப்பட்ட வழக்கின் அடுத்தகட்ட விசாரணை, வரும் ஜூலை மாதம் நடக்கவிருக்கிறது.

PMNRF போலவே பொதுமக்கள், நிறுவனங்கள், அயல்நாட்டில் வசிப்பவர்கள் என யார் வேண்டுமானாலும் PMCARES-க்கு நன்கொடை அளிக்கலாம். PMCARES-ல் தலைவராக பிரதமர் இருக்கிறார். மூவர் குழுவில் பாதுகாப்பு அமைச்சர், நிதி அமைச்சர், உள்துறை அமைச்சர் இருக்கின்றனர். தவிர சுகாதாரம், சட்டம், அறிவியல் போன்ற துறைகளிலிருந்து மூவரை குழுவில் சேர்க்க பிரதமருக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. PMNRF போலவே PMCARES-க்கும் பட்ஜெட்டில் எந்த ஒதுக்கீடும் கிடையாது.

தற்போது மோடி ஆரம்பித்திருக்கும் PMCARES-க்கு, கடந்த மூன்று வாரங்களில் மட்டும் சுமார் 7,000 கோடி ரூபாய் நன்கொடை வசூலாகியிருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஆனால், நேரு காலத்தில் ஆரம்பிக்கப்படட PMNRF-ல் அரசு அதிகாரிகளின் சம்பளம், வளர்ச்சி நிதிக்கென ஒதுக்கிவைத்த தொகை போன்றவற்றை நன்கொடையாகப் பெற முடியாது. பொதுமக்கள், பெருநிறுவனங்கள் மட்டுமே PMNRF-ல் நன்கொடை செலுத்த முடியும். பட்ஜெட் அல்லது அரசு சார்ந்த நிறுவனங்களில் இருக்கும் பணத்தை PMNRF-ல் சேர்க்க முடியாது.

ஆனால், தற்போது மோடி ஆரம்பித்திருக்கும் PMCARES-க்காக அரசு ஊழியர்களின் சம்பளம் வரையில் கைவைத்திருக்கிறது மத்திய அரசு. கிட்டத்தட்ட கட்டாய வசூல். மத்திய அரசின்கீழ் இயங்கும் பல நிர்வாகங்கள் ஒரு நாள் ஊதியத்தை தன்னார்வத்துடன் வழங்குவதாக அறிவித்துள்ளன. நன்கொடை கொடுக்க விருப்பமில்லாத ஊழியர்கள் விண்ணப்பம் ஒன்றை எழுதி அனுப்ப வேண்டுமாம். வருவாய்த் துறை ஒருபடி மேலே போய், அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை ஒவ்வொரு மாதமும் ஒரு நாள் சம்பளத்தை அனுப்புவதாக அறிவித்துள்ளது.

இதுபோக மக்கள் வளர்ச்சி நிதியிலும் கை வைத்திருக்கிறார்கள். நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியை 2022-ம் ஆண்டு வரை அனைத்து உறுப்பினர்களுக்கும் ரத்துசெய்து உத்தரவிட்டிருக்கிறது மத்திய அரசு. பா.ஜ.க-வில் இருக்கும் அனைத்து எம்.பி-க்களும் அவர்களது நிதியிலிருந்து ஒரு கோடி ரூபாயை வழங்குவார்கள் என அறிவித்தார் கட்சியின் தலைவர் ஜே.பி.நட்டா. ராஜ்நாத் சிங்கின் பாதுகாப்பு அமைச்சகத்தின்கீழ் இயங்கும் துறைகளில் இருந்தும் 500 கோடி ரூபாய் வசூலித்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

திட்டத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை; எதையும் கேள்வி கேட்கக் கூடாது என்பதே ஜனநாயகத்துக்கு விரோதமானது. இதில் ஊழியர்களின் கருத்தைக் கேட்காமல் சம்பளத்தில் கை வைப்பதும், மக்களுக்கான தொகுதி வளர்ச்சி நிதியைத் தட்டிப் பறிப்பதும் எந்த வகையில் நியாயம்?

இதுதொடர்பாக பா.ஜ.க மாநிலச் செயலாளர் கே.டி.ராகவனிடம் கேட்டோம். ‘‘அரசு ஊழியர்களிடம் கட்டாயமாக சம்பளம் பிடித்தம் செய்யப்படுகிறது என்பதெல்லாம் வாட்ஸப் வதந்தி. அதை எவரும் நம்ப வேண்டாம். PMCARES என தனியாகத் தொடங்கப்பட்டதற்கு காரணம் இருக்கிறது. ஏற்கெனவே உள்ள PMNRF என்பது நேரு காலத்தில் கொண்டுவரப்பட்ட திட்டம். அதில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒருவரும் டாடா குழுமத்தைச் சேர்ந்த ஒருவரும் உறுப்பினராக இருப்பது வழக்கம். ஆனால், PMCARES-ல் பிரதமர் தலைவராக இருப்பார். மேலும் பாதுகாப்புத் துறை, உள்துறை, நிதித் துறை அமைச்சர்கள் மட்டும்தான் உறுப்பினர்களாக இருப்பார்கள். இது ஒரு கமிட்டியாகச் செயல்படுகிறது’’ என்றார்.