Published:Updated:

`தடைசெய்யப்பட்ட லாட்டரி; மோசடியில் 2 பேர் கைது' - திருச்சியில் நூதன முறை லாட்டரி விற்பனை படு ஜோர்!

மூன்று நம்பர் லாட்டரிச் சீட்டில் கடைசி ஒரு நம்பர் இருந்தால் 100 ரூபாய், இரண்டு நம்பர் இருந்தால் 1,000 ரூபாய், மூன்று நம்பரும் இருந்தால் 25,000 ரூபாய் பரிசு எனச் சொல்லி ஏழைக் கூலித் தொழிலாளர்களைக் குறிவைத்து நடத்துகிறார்கள்.

லாட்டரிச் சீட்டுக்கு அடிமையான ஏழை மக்கள் பலர் தங்கள் அன்றாட வருமானத்தையும், வாழ்நாள் சேமிப்பையும் இழப்பதாகவும், இதனால் பலர் தற்கொலை செய்துகொள்வதாகவும் நாலாபுறமும் குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணமாக இருந்து வருகின்றன. ஆனாலும், லாட்டரி விற்பனை அமோகமாகத்தான் நடந்துகொண்டிருந்தது.

வாட்ஸ் அப் மூலம் லாட்டரி விற்பனை!
வாட்ஸ் அப் மூலம் லாட்டரி விற்பனை!

ஏழை மக்களின் குடும்பப் பொருளாதாரம் வெகுவாக சீர்குலைந்து, பெண்கள் மத்தியில் இதற்குக் கடுமையான எதிர்ப்பு கிளம்பவே, 2003-ம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா லாட்டரிச் சீட்டுக்குத் தடை செய்தார். தமிழ்நாட்டு லாட்டரிச் சீட்டுக்கு மட்டுமல்லாமல் பிற மாநிலங்களுடைய லாட்டரிச் சீட்டுகளைத் தமிழகத்தில் விற்கவும் தடை விதிக்கப்பட்டது.

கழுத்தை நெரிக்கும் கள்ள லாட்டரி... கண்டுகொள்ளாத அரசு!

ஆனாலும், லாட்டரி விற்பனை நின்றபாடில்லை. கேரளா, பூடான் லாட்டரி விற்பனை படு ஜோராக நடந்துகொண்டிருக்கிறது என்று ஜூனியர் விகடனில் கவர் ஸ்டோரி வெளியானதற்குப் பின்பு, தமிழகம் முழுவதும் போலீஸார் அதிரடியாக ரெய்டு நடத்தி சிலரைக் கைது செய்து, சிறையில் அடைத்தனர். ஆனாலும், லாட்டரி விற்பனை நின்றபாடில்லை.

இந்த நிலையில், தடை செய்யப்பட்ட லாட்டரி சேட்டை வாங்கியதுடன் மட்டுமல்லாமல், அதற்கான தொகையைக் கேட்டு நபர் ஒருவர் ரகளை செய்த சம்பவம் திருச்சியில் அரங்கேறியிருக்கிறது. திருச்சி உறையூர் பகுதியைச் சேர்ந்தவர் மணவாளன். இவர் உறையூர் நவாப் தோட்டம் பகுதியைச் சேர்ந்த ராமலிங்கம், வாத்துக்காரத் தெருவைச் சேர்ந்த செந்தில்குமார் ஆகியோரிடமிருந்து கேரளா லாட்டரி சீட் வாங்கியிருக்கிறார். அந்த டிக்கெட்டுக்கு ஆயிரம் ரூபாய் பரிசு விழுந்திருக்கிறது.

திருச்சி
திருச்சி

அதை மணவாளன், ராமலிங்கம், செந்தில்குமார் ஆகியோரிடம் கேட்டிருக்கிறார். அப்போது அவருக்கு 200 ரூபாய் பரிசுத் தொகை மட்டும் கொடுத்துவிட்டு, மீதி தொகை 800 ரூபாயைக் கொடுக்காமல் ஏமாற்றியிருக்கின்றனர். அதனால் ஆத்திரமடைந்த மணவாளன், இதுகுறித்து உறையூர் போலீஸாரிடம் புகார் செய்திருக்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

புகார் கொடுக்க வந்த மணிவண்ணனை விசாரித்த போலீஸார், ``லாட்டரி டிக்கெட் விக்கிறதே தப்பு. இதுல லாட்டரியில விழுந்த பணத்தை கொடுக்கலைன்னு எங்ககிட்டயே புகார் கொடுக்க வருவீங்களான்னு" லாட்டரி டிக்கெட் வாங்கிய மணவாளனைக் கடுமையாக எச்சரித்ததோடு, லாட்டரி டிக்கெட் விற்பனை செய்த செந்தில் குமார், ராமலிங்கம் ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து செல்போன், லாட்டரி சீட்டு விற்ற தொகையைப் பறிமுதல் செய்திருக்கின்றனர்.

திருச்சியில் லாட்டரி சீட்டுகள் விற்பனை படுஜோர்
திருச்சியில் லாட்டரி சீட்டுகள் விற்பனை படுஜோர்

திருச்சியில் லாட்டரி விற்பனை எப்படி நடக்கிறது என்பதை அறிந்துகொள்ள, இதைப் பற்றி விவரம் தெரிந்த சிலரிடம் விசாரித்தோம். ``மூன்று நம்பர் லாட்டரிச் சீட்டில் கடைசி ஒரு நம்பர் இருந்தால் 100 ரூபாய், இரண்டு நம்பர் இருந்தால் 1,000 ரூபாய், மூன்று நம்பரும் இருந்தால் 25,000 ரூபாய் பரிசு எனச் சொல்லி ஏழைக் கூலித் தொழிலாளர்களைக் குறிவைத்து நடத்துகிறார்கள். 30 ரூபாய், 60 ரூபாய், 120 ரூபாய் என்ற விலைகளில் நாள் ஒன்றுக்கு லட்சக்கணக்கில் விற்பனை நடந்து வருகிறது.

முட்புதர்கள், ஆள்நடமாட்டம் குறைவான பகுதிகள், ஊருக்கு ஒதுக்குப்புறமான பகுதிகளில் அதிகமாக விற்கப்படுகிறது. இது கேரள லாட்டரி என்பதால் காலை முதலே விற்பனையைத் தொடங்கி விடுகிறார்கள். முன்பு போல், லாட்டரியை கடைகளில் வைத்து விற்பனை செய்வதில்லை. டெக்னாலாஜி வளர வளர இவர்களும் தொழிலை அப்டேட் செய்து கொண்டே செல்கிறார்கள். டிக்கெட் வேண்டும் என்றால் வழக்கமான வாடிக்கையாளர்கள் போனில் நம்பரைச் சொன்னால் போதும்.

லாட்டரி சீட்டுகளுடன்
லாட்டரி சீட்டுகளுடன்

முகவர் வாடிக்கையாளரின் பெயருடன் அந்த நம்பரையும் எழுதி வைத்துக் கொள்வார். வாட்ஸ் அப்பில் அந்த எண்ணுடைய போட்டோவை அனுப்புவார். பணத்தைக் கூகுள் பே மூலமாக அனுப்பிவைக்க வேண்டும். நேரில் செல்பவர்களுக்கு எண்ணை பேப்பரில் எழுதிக்கொடுப்பார். ரெகுலர் கஷ்டமர்களுக்கு வசூல் செய்வதற்காகவே, வேலையில்லாமல் சுற்றும் இளைஞர்கள் இதற்குப் பயன்படுத்தப்படுகிறார்கள். மாலை 3 மணிக்குக் கேரளாவில் ரிசல்ட் வெளியாகிவிடும். அதனை இணையதளம் மூலமாகத் தெரிந்துகொண்டு பரிசுத்தொகை பெற்றுச் செல்வார்கள். இப்படி தான் எல்லா இடங்களிலும் விற்பனை நடைபெறுகிறது" என்றனர்.

ஊரடங்கிலும் முடங்காத ‘மூணு சீட்டு’ லாட்டரி! - நடுத்தெருவுக்கு வரும் குடும்பங்கள்...
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு