Published:Updated:

`விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவினால் ரூ.5,000 சன்மானம்!' – பட்ஜெட்டில் அசத்திய முதல்வர் நாராயணசாமி

Puducherry Chief Minister Narayanasamy
Puducherry Chief Minister Narayanasamy

`விபத்தில் சிக்கியவர்களை உடனே மருத்துவமனையில் சேர்ப்பவர்களுக்கு 5,000 ரூபாய் சன்மானம் கொடுக்கப்படும்' என அறிவித்திருக்கிறார் முதல்வர் நாராயணசாமி.

புதுச்சேரியில், கடந்த 26-ம் தேதி முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்றுவருகிறது. நாடாளுமன்றத் தேர்தல் அறிவிப்பால் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படாத நிலையில், கடந்த மார்ச் மாதம், இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து, இன்று 8,425 கோடி ரூபாய்க்கான பட்ஜெட்டை நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதல்வர் நாராயணசாமி பேரவையில் தாக்கல்செய்தார்.

Puducherry Chief Minister Narayanasamy
Puducherry Chief Minister Narayanasamy
Kuruzthanam

அதில், ``குறுவை சம்பா சாகுபடி செய்யும் நெல் விவசாயிகளுக்கு 10,000 ரூபாய் மானியம், சிறுதானியப் பயிர்களுக்கு, ஏக்கர் ஒன்றுக்கு ரூ.2,000 மானியம், கரும்பு சாகுபடி விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 மானியம், தோட்டப்பயிர் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.10,000 மானியம், தென்னை சாகுபடி விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ஆண்டுதோறும் ரூ.3,000 மானியம் வழங்கப்படும். விவசாயத் தொழில் தொடங்குவதற்காக 5 லட்சம் ரூபாய் கடன் வழங்கப்படும் என்பதோடு, விவசாயிகளுக்கான புதிய காப்பீட்டுத் திட்டம் இந்த ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படும்'' என்று அறிவித்திருக்கிறார்.

தொடர்ந்து, ''புதுச்சேரி மாநிலத்தில், விபத்தில் சிக்கியவர்களை உடனே மருத்துவமனையில் சேர்ப்பவர்களுக்கு, 5,000 ரூபாய் சன்மானம் வழங்கப்படும்'' என அறிவித்தார் முதல்வர் நாராயணசாமி.

அதேபோல காமராஜர் கல்வி நிதியுதவி திட்டத்துக்கு 41 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது என்றும் மீன்பிடி தடைக்கால நிவாரணம் 5,500 ரூபாயிலிருந்து 6,500 ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது என்றும், மீனவர்களுக்கான மழைக்கால நிவாரண நிதி 2,500 ரூபாயிலிருந்து 3,000 ரூபாயாக உயர்த்தப்பட்டிருக்கிறது என்றும் அறிவித்துள்ளார்.

Puducherry Budget
Puducherry Budget

மேலும், "அரசு பள்ளிகளில் நீட் பயிற்சி தேர்வு மையங்கள் அமைக்கப்படும். மதுபான விலையை அறிந்து கொள்ள புதிய செயலி அறிமுகப்படுத்தப்படும்" எனத் தெரிவித்தவர், `` ரூ.983 கோடி மதிப்பில் ஜப்பான் அரசு புதுச்சேரியில் தெரு விளக்குகளை சூரிய ஒளி விளக்குகளாக மாற்றித் தர முன்வந்துள்ளது. புதுச்சேரி அரசு பழைய மகப்பேறு மருத்துவமனை வளாகத்தில் யோகா மையம் உள்ளிட்ட வாழ்வியல் பயிற்சி மையம் அமைக்கப்பட உள்ளது. ரூ.13 கோடியில் ஆரம்ப சுகாதார மையங்களை தரம் உயர்த்த மத்திய அரசு நிதி வழங்கியுள்ளது. செப்டம்பர் 1-ம் தேதி முதல் மருத்துவ காப்பீட்டு திட்டம் அமலுக்கு வருகிறது" என்றவர், ``சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதி 2 கோடியாக உயர்த்தப்படும்'' என்றும் அதிரடியாக அறிவித்தார்.

பின் செல்ல