Published:Updated:

`புலிட்சர் பரிசு வாங்க செல்லவிருந்த என்னை டெல்லியில் தடுத்து நிறுத்தினர்’ - காஷ்மீரி பத்திரிகையாளர்

சன்னா இர்ஷாத் மட்டூ

தன்னை வெளிநாடு செல்ல அனுமதிக்கவில்லை என காஷ்மீரி பத்திரிகையாளர் சன்னா இர்ஷாத் மட்டூ குற்றம்சாட்டியுள்ளார். கடந்த ஜூலை மாதமும் இது போன்று தடுத்து நிறுத்தப்பட்டதாகவும், அதற்கும் தகுந்த விளக்கம் அளிக்கப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

`புலிட்சர் பரிசு வாங்க செல்லவிருந்த என்னை டெல்லியில் தடுத்து நிறுத்தினர்’ - காஷ்மீரி பத்திரிகையாளர்

தன்னை வெளிநாடு செல்ல அனுமதிக்கவில்லை என காஷ்மீரி பத்திரிகையாளர் சன்னா இர்ஷாத் மட்டூ குற்றம்சாட்டியுள்ளார். கடந்த ஜூலை மாதமும் இது போன்று தடுத்து நிறுத்தப்பட்டதாகவும், அதற்கும் தகுந்த விளக்கம் அளிக்கப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

Published:Updated:
சன்னா இர்ஷாத் மட்டூ

சிறந்த பத்திரிகையாளருக்கு வழங்கப்படும் உயரிய விருது புலிட்சர் பரிசு. இந்த ஆண்டு காஷ்மீரி பத்திரிகையாளர் சன்னா இர்ஷாத் மட்டூ அந்த விருதுக்குத் தேர்வாகியிருக்கும் நிலையில், அவர் அமெரிக்காவுக்குச் செல்ல அக்டோபர் 18-ம் தேதி விமான நிலையத்துக்குச் சென்றிருக்கிறார். ஆனால், அவரை அமெரிக்காவுக்குச் செல்லவிடாமல் அதிகாரிகள் தடுத்துள்ளனர். சன்னாவை வெளிநாட்டுக்குப் போக அனுமதிக்காமல் தடுப்பது இது இரண்டாம் முறை.

இது குறித்து அவர் தன் ட்விட்டர் பக்கத்தில், "நான் புலிட்சர் விருதைப் பெறுவதற்காக நியூயார்க் நகருக்குச் செல்ல, டெல்லி விமான நிலையத்துக்கு வந்தேன். ஆனால் நான் அங்கு தடுத்து நிறுத்தப்பட்டேன். அமெரிக்க விசா மற்றும் டிக்கெட்டை வைத்திருந்தபோதிலும் சர்வதேச அளவில் பயணம் செய்யத் தடைவிதிக்கப்பட்டது” என்று பதிவிட்டிருக்கிறார்.

சன்னா இர்ஷாத் மட்டூ
சன்னா இர்ஷாத் மட்டூ

கடந்த மே 2022-ல், ஃப்ரீலான்ஸ் புகைப்படக் கலைஞரான சன்னா மட்டூ, மறைந்த புகைப்படக் கலைஞர் டேனிஷ் சித்திக், அமித் டேவ், அட்னான் அபிடி உள்ளிட்ட ராய்ட்டர்ஸ் குழுவுடன், இந்தியாவில் ஏற்பட்டுள்ள கோவிட்-19 நெருக்கடியைப் பற்றி புகைப்படங்கள் எடுத்திருக்கிறார். ராய்ட்டர்ஸ் வெளியிட்ட தனது படைப்புகளுக்காக, ஃபீச்சர் ஃபோட்டோகிராபி (Feature photography) பிரிவில் புலிட்சர் பரிசை வென்றார் சன்னா.

ஆனால் கடந்த ஜூலை மாதம், செரண்டிபிட்டி ஆர்லஸ் மானியம் (Serendipity Arles) 2020- ன் 10 வெற்றியாளர்களில் ஒருவரான சன்னா, புத்தக வெளியீடு மற்றும் புகைப்படக் கண்காட்சிக்காக பாரீஸுக்குச் செல்லும் போது தடுத்து நிறுத்தப்பட்டதாகத் தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

சன்னா இர்ஷாத் மட்டூ
சன்னா இர்ஷாத் மட்டூ

அதோடு அதிகாரிகள் தன்னைத் தடுத்து நிறுத்துவதற்கு எந்தக் குறிப்பிட்ட காரணத்தையும் கூறவில்லை என்று சன்னா அப்போது `தி வயர்’ ஊடகத்திடம் தெரிவித்திருந்தார். அப்போது அவர் அளித்த பேட்டியில், ``என்னைத் தடுப்பதற்காக எஸ்எஸ்பி சிஐடி மற்றும் காஷ்மீரின் சில அதிகாரிகளிடமிருந்து அவர்களுக்குத் தகவல் வந்தது என்றனர். எனக்கு எதிராக ஏதாவது வழக்கு இருக்கிறதா என்று நான் அவர்களிடம் கேட்டேன், ஆனால் அவர்கள் எப்ஐஆர் எதுவும் இல்லை என்றும், காவலில் வைப்பதற்கு எந்தக் காரணமும் இல்லை என்றும் சொன்னார்கள்” என்று சன்னா கூறியிருந்தார்.

இதையடுத்து கடந்த அக்டோபர் 18-ம் தேதி அமெரிக்காவுக்குச் செல்ல விமான நிலையத்துக்குச் சென்றபோது அவர் தடுத்து நிறுத்தப்பட்டதாக, தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். "இந்த விருது வழங்கும் விழாவில் கலந்துகொள்வது என் வாழ்நாளில் எனக்குக் கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு" என்றும் எழுதியிருந்தார்.