Published:Updated:

ஆழ்துளைக் கிணறு, புயல், மின்னல், பூகம்பம்!- பேரிடர் காலங்களில் பாதுகாத்துக் கொள்வது எப்படி?

பேரிடர் காலங்களில் பாதுகாத்துக் கொள்வது எப்படி என்பது தொடர்பாக மதுரையில் மெகா விழிப்புணர்வு நிகழ்ச்சி தொடக்கம்!

பேரிடர் விழிப்புணர்வு
பேரிடர் விழிப்புணர்வு

பேரிடர் காலத்தில் மக்கள் தங்களை எப்படி காத்துக்கொள்ள வேண்டும் என்பது பற்றிப் பேரிடர் மெகா விழிப்புணர்வு பயிற்சி முகாமை தமிழகத்தில் ஐந்து மாவட்டங்களில் நடத்துவதாக அறிவித்துள்ள அரசு, முதல் நிகழ்வை இன்று மதுரையில் தொடங்கியுள்ளது.

ஆர்.பி.உதயகுமார்
ஆர்.பி.உதயகுமார்

ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து குழந்தை சுஜித் பலியானதற்குப் பின் மக்கள் மத்தியில் ஓர் அச்சம் ஏற்பட்டுள்ளது. அதே நேரம், குழந்தையைக் காப்பாற்றும் அளவுக்கு நவீன வசதிகள் அரசிடம் இல்லை என்பதும் விமர்சிக்கப்பட்டு வருகிறது.

இந்த எண்ணத்தை மாற்றும் வகையிலும் புயல், மழை போன்ற இயற்கைச் சீற்றங்களின்போதும் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியைத் தொடங்கியுள்ளனர்.

பேரிடர் ஒத்திகை
பேரிடர் ஒத்திகை

இன்று காலை பத்து மணிக்கு ராஜா முத்தையா மன்றத்தில் இந்நிழ்ச்சியைத் தொடங்கி வைத்த பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், மீட்புப்படையினரின் பல்வேறு ஒத்திகை அரங்குகளைப் பார்வையிட்டார். இந்நிகழ்வில் மக்கள் திரளாகக் கலந்து கொண்டுள்ளனர்.

குளம், குட்டை, ஆழ்துளைக் கிணறு, பாதாளச் சாக்கடை, வெள்ளம், புயல், மின்னல், பூகம்பம் போன்ற காலங்களில் எப்படியெல்லாம் மக்கள் தற்காத்துக்கொள்ள வேண்டும். அரசு தரப்பில் என்னவெல்லாம் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்பது பற்றி டெமோ செய்து காட்டப்பட்டது.

ஆர்.பி.உதயகுமார்
ஆர்.பி.உதயகுமார்
ஈ.ஜெ.நந்தகுமார்

அடுத்ததாக திருச்சி, சென்னை, திருவள்ளூர்,காஞ்சிபுரத்தில் இதேபோன்ற மெகா பேரிடர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், தேசிய, மாநிலப் பேரிடர் மீட்புப்படையினர், தீயணைப்புத்துறை, காவல்துறை, சுகாதாரத்துறை, செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் தன்னார்வ அமைப்புளைச் சேர்ந்தவர்கள் போன்றோர் இந்நிகழ்வில் பங்கெடுத்துள்ளனர்.