Election bannerElection banner
Published:Updated:

அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 60-ஆக உயர்வு! - முதல்வரின் அறிவிப்புக்கு அரசு ஊழியர்கள் சங்கம் கண்டனம்

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை 60-ஆக உயர்த்தி முதலமைச்சர் அறிவித்ததற்கு அரசு ஊழியர்கள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது.

தமிழக முதலமைச்சர் இன்று (25.02.2021), சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அரசு ஊழியர்களின் பணி ஓய்வு வயதை, 60-ஆக உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டிருப்பதற்கு, தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது.

அன்பழகன்
அன்பழகன்

இது குறித்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க நாகை மாவட்டச் செயலாளர் அன்பழகன் நம்மிடம் பேசும்போது,``இளைஞர்களின் வேலைவாய்ப்பைப் பறிக்கும்விதமாக, தமிழக அரசின் இந்த அறிவிப்பு இருக்கிறது. அரசுத் துறைகளில் சுமார் நான்கரை லட்சம் பணியிடங்கள் தொடர்ந்து காலியாக இருக்கும் நிலையில், இப்படிப்பட்ட அறிவிப்பு இளைஞர்கள் மத்தியில் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதுபோல் இருக்கும். எந்த அரசு ஊழியர் அமைப்பும் இந்தக் கோரிக்கையை தமிழக அரசிடம் முன்வைக்கவில்லை.

புதிய பென்ஷன் திட்டம் ரத்து செய்யப்பட வேண்டும். தொகுப்பு முறையை ரத்து செய்து, வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும். இது போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ச்சியான போராட்டம், வேலைநிறுத்தம், முற்றுகைப் போராட்டம் ,உண்ணாவிரதம் போன்றவற்றில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொடர்ந்து போராடிக்கொண்டிருக்கின்றனர்.

அரசு ஊழியர்களின் இந்தக் கோரிக்கைகளைப் பரிசீலிக்காமல், அவர்களை அழைத்துப் பேசாமல், தான்தோன்றித்தனமாக ஓய்வு வயதை உயர்த்தி அறிவித்திருப்பது, ஒட்டுமொத்த அரசு ஊழியர்கள் மத்தியிலும் மிகுந்த கோபத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது.

கோகுல இந்திராவுக்கு எடப்பாடி செக்; சசிகலாவுக்காகக் காய்நகர்த்தும் டெல்லி அதிகாரி! -கழுகார் அப்டேட்ஸ்

தமிழக அரசு இந்த அறிவிப்பை உடனடியாக வாபஸ் பெற வேண்டும். அது மட்டுமல்லாமல், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கங்களின் நீண்டநாள் கோரிக்கைகளை அவர்களை அழைத்துப் பேசி உடனடியாகத் தீர்வுகாண நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு