Published:Updated:

ரெளடிகளின் கூடாரமாகும் சேலம் அ.தி.மு.க!

ரெளடிகளின் கூடாரம்
பிரீமியம் ஸ்டோரி
News
ரெளடிகளின் கூடாரம்

சேலம் மாநகர மாவட்ட அ.தி.மு.க செயலாளர் வெங்கடாசலத்திடம் இதுகுறித்துக் கேட்டோம்.

‘‘சேலம் தி.மு.க-வில் களையெடுப்பு நடத்தி கட்சியை பலப்படுத்த காய் நகர்த்தி வருகின்றனர். ஆனால் சேலம் அ.தி.மு.க-விலோ, குற்றப்பின்னணி உள்ள பிரபல ரௌடிகளை கூட்டம் கூட்டமாகச் சேர்ந்துவருகின்றனர். அவர்களுக்கு அ.தி.மு.க நிர்வாகிகள் மலர்கொத்து கொடுத்து வரவேற்பது பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது’’ - இப்படியான புலம்பல்கள் சேலம் அ.தி.மு.க தொண்டர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

‘‘கடந்த காலத்தில் சேலம் தி.மு.க, ரௌடிகளின் கூடாரமாக இருந்தது. பனமரத்துப்பட்டி ராஜேந்திரன் சேலம் மத்திய மாவட்டச் செயலாளராக ஆன பிறகு, கட்சியிலிருந்து ரௌடிகளை ஓரங்கட்டினார். கடந்த உள்ளாட்சித் தேர்தலில் `ரௌடிகளுக்கும், அவர்களின் கூட்டாளிகளுக்கும், உறவினர்களுக்கும் சீட் வழங்க முடியாது!’ என்று பகிரங்கமாகவே தெரிவித்தார். இதனால் அதிருப்தியில் இருந்த ரௌடிகள் கைது நடவடிக்கை யிலிருந்து தப்பிக்கவும், தங்கள் மீதுள்ள வழக்குகளை வாபஸ் பெறவும், நகராட்சி, மாநகராட்சித் தேர்தலில் சீட் பெறவும் அடியாட்கள் சகிதமாக அ.தி.மு.க-வுக்குத் தாவுகின்றனர்’’ என்கின்றனர் விவரமறிந்த வட்டாரத்தினர்.

வெங்கடாசலம், ராஜேந்திரன், செந்தில்குமார்
வெங்கடாசலம், ராஜேந்திரன், செந்தில்குமார்

சேலம் அ.தி.மு.க மூத்த நிர்வாகிகளிடம் பேசிய போது, ‘‘ஜெயலலிதாவுக்கு, ரெளடியிசம் சுத்தமாகப் பிடிக்காது. அவர் இருந்தவரை கட்சி நிர்வாகிகள் மறைமுகமாகக்கூட ரௌடிகளிடம் தொடர்பு வைத்துக்கொள்ள முடியாது. ஆனால், கடந்த இரு ஆண்டுகளாக ரௌடிகளின் கூடாரமாக மாறிவிட்டது சேலம் அ.தி.மு.க. உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பு எடப்பாடி பழனிசாமி ஆத்தூரில் பிரபல ரௌடிகளான புங்கைவாடி சுப்ரமணிக்கும், கல்லா நத்தம் சுரேஷுக்கும் உறுப்பினர் அட்டை கொடுத்து கட்சியில் சேர்த்தார். புங்கைவாடி சுப்ரமணி, பெத்தநாயக்கன்பாளையம் சேர்மன் துரைசாமி கொலை வழக்கில் பிரபலமானவர். கல்லாநத்தம் சுரேஷ், தனக்குப் போட்டியாக சந்துக்கடை நடத்திய பழங்குடி இனத்தவரை கொன்ற வழக்கில் பிரபலமானவர். இவர்கள்மீது கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை, ஆள் கடத்தல், வழிப்பறி, கள்ளச்சாராயம் மற்றும் குண்டாஸ் உட்பட 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் இருக்கின்றன.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

இப்படிப்பட்டவர்களை முதல்வரே கட்சியில் சேர்த்ததால், சேலம் மாநகர மாவட்டச் செயலாளர் வெங்கடாசலமும் தன் பங்குக்கு ரௌடிகளை கட்சியில் சேர்த்துள்ளார். தனியார் டி.வி உரிமையாளரைக் கடத்திய வழக்கில் தமிழகம் முழுவதும் அறியப்பட்டவர் ரௌடி ‘வளத்தி’குமார். இவர்மீது கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை, ஆள் கடத்தல், அரிசிக் கடத்தல் மற்றும் குண்டாஸ் உட்பட 33 வழக்குகள் இருக்கின்றன. சமீபத்தில்தான் மேளதாளம் முழங்க, படை பரிவாரங்களுடன் அங்கம்மாள் காலனியில் உள்ள அ.தி.மு.க அலுவலகத்துக்கு வந்து கட்சியில் இணைந்தார். அவருக்கு வெங்கடாசலம் மலர்கொத்து கொடுத்து வரவேற்றார்.

ரெளடிகளின் கூடாரமாகும் சேலம் 
அ.தி.மு.க!

‘வெட்டு’ ஜவஹர், ‘ஜிம்’ ராமு, ‘பஸ் ஸ்டாண்டு’ அருள்ராம், அஸ்தம்பட்டி தி.மு.க வார்டு செயலாளர் சோலைராஜா கொலை வழக்கில் தொடர்புடைய கரிகாலன் மற்றும் ஷிக்கந்தர், அழகு நிலையத்தில் புகுந்து பாலியல் வன்கொடுமை செய்த சித்தேஸ்வரன், எலும்பன் கார்த்திக், கூலிப்படையைச் சேர்ந்த பிரதீப், பாலு என வீச்சரிவாள், வெட்டுக் கத்தியுடன் சுற்றித் திரியும் சேலத்தின் பெரும்பாலான ரௌடிகளை, கூலிப்படைக்கு ஆட்களை எடுப்பதுபோல் அ.தி.மு.க-வுக்கு எடுத்துள் ளார்கள். இவர்கள் ஒவ்வொருவர்மீதும் 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் இருக்கின்றன’’ என்றனர் அச்சத்துடன்.

சேலம் மாநகர மாவட்ட அ.தி.மு.க செயலாளர் வெங்கடாசலத்திடம் இதுகுறித்துக் கேட்டோம்.

‘‘நாங்கள் மாவட்ட நுண்ணறிவுப் பிரிவு காவலர்களிடம் விசாரித்தோம். ‘அவர்கள்மீது பழைய வழக்குகள்தான் இருக்கின்றன; புதிய வழக்குகள் இல்லை’ என்று தெரியவந்ததால், ‘குற்றச்செயலில் ஈடுபடக் கூடாது’ என்ற நிபந்தனையுடன் கட்சியில் சேர்த்திருக்கிறோம். ‘தி.மு.க-வில் ரௌடித்தனம் செய்து செய்து எங்கள் வாழ்க்கை வீணாகிவிட்டது. இனி, அ.தி.மு.க-வுக்காக வாழ்நாள் முழுக்க உழைப்போம்’ என்று அவர்கள் உறுதியளித்ததால், கட்சியில் உறுப்பினர் ஆக்கினோம்’’ என்றார்.

சேலம் மத்திய மாவட்ட தி.மு.க செயலாளர் பனமரத்துப்பட்டி ராஜேந்திரன், ‘‘ஒரு காலத்தில், சில ரௌடிகள் எங்கள் கட்சியில் இருந்தது உண்மைதான். நான் பதவியேற்ற பிறகு அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. ‘பொதுமக்களுக்கு இடையூறு செய்தால் நடவடிக்கை எடுப்பேன்’ என்று எச்சரித்தேன். இருந்தும், அவர்கள் தொடர்ந்து சமூகவிரோதச் செயலில் ஈடுபடுவதாகக் காவல்துறை கூறியதையடுத்து, கட்சியிலிருந்து நீக்கிவிட்டோம்’’ என்றார்.

சேலம் காவல்துறை ஆணையாளர் செந்தில்குமாரிடம் பேசியபோது, ‘‘ரௌடிகள் அரசியல் கட்சியில் சேருவது பற்றி நாங்கள் கருத்து சொல்ல முடியாது. அதேவேளையில், குற்றச்செயலில் யார் ஈடுபட்டாலும் அவர்கள்மீது நடவடிக்கை எடுப்போம்’’ என்றார் உறுதியாக.