Published:Updated:

`அதிக வாக்குகள் வாங்கிட்டோம்; நாங்க வளர்கிறோம்!' - வேலூர் தேர்தல் தோல்வி குறித்து சீமான்

`மிசோரத்தில் உள்ளதை எடுங்கள். இந்தி மொழிக்கு இருக்கும் சிறப்பு அந்தஸ்தை எடுக்க வேண்டும்.''

சீமான்
சீமான்

''நாம் தமிழர் கட்சியை ஏற்றுக்கொள்வதும் கொள்ளாததும் மக்களின் முடிவு. ஆனால், தொடர்ந்து களத்தில் நிற்பதுதான் எங்களது கொள்கை. அதனால்தான் அனைத்துத் தேர்தலிலும் போட்டியிடுகிறோம்'' என்று வேலூர் தேர்தல் முடிவு பற்றி நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.

சீமான்
சீமான்

மதுரையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய சீமான், ''தி.மு.க, அ.தி.மு.க தேர்தலை எந்த அளவுக்கு நேர்மையாகச் சந்திக்கிறது என்பதை நீங்கள் பார்க்க வேண்டும்.

பல கட்சிகளுடன் கூட்டணி வைத்துக்கொள்கிறது பெரும் பணத்தை முதலீடு செய்கிறது. அதிகமாகப் பணம் கொடுப்பது ஆளுங்கட்சி. குறைவாக பணம் கொடுப்பது எதிர்க்கட்சி என்ற நிலை நீண்ட காலமாக இங்கு உருவாக்கப்பட்டுள்ளது. அது மட்டும் இல்லையென்றால், மக்கள் எங்களுக்கு வாக்களிக்கும் நிலை உருவாகும்.

சீமான்
சீமான்

எங்களைப் பொறுத்தவரையில் கடந்த தேர்தலைவிட அதிகமாக வாக்குகள் வாங்கியிருக்கிறோம் என்றால் வளர்கிறோம் என்றுதான் நாங்கள் பார்க்கிறோம்.

காஷ்மீர் பிரிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களை மன்னிப்பதாக பிரதமர் கூறுவது எதற்காக? ஜனநாயக நாட்டில் கருத்து கூற உரிமை உள்ளபோது எங்களுக்கும் ஒரு கருத்து உள்ளது. அது தேவையற்றது.

சீமான்
சீமான்

சிறப்பு அந்தஸ்தைத் திரும்பப்பெற வேண்டும் என்கிறார்கள். அதைக் கொடுத்தது யாரு? சிறப்பு அந்தஸ்து காஷ்மீரில் மட்டும்தான் உள்ளதா? இன்று மிசோரத்தில் உள்ளதை எடுங்கள். இந்தி மொழிக்கு இருக்கும் சிறப்பு அந்தஸ்தை எடுக்க வேண்டும்'' என்று பி.ஜே.பி. அரசு எடுத்து வரும் பல்வேறு நடவடிக்கைகள் பற்றி தன்னுடைய கருத்தைக் கூறினார்.