Published:Updated:

கழிவுநீர்த் தொட்டி சுத்தம் செய்யும் பணி: `2017-ம் ஆண்டு முதல் 347 பேர் இறந்துள்ளனர்' - மத்திய அரசு

தூய்மைப் பணியாளர்

ஆண்டுவாரியாக, 2017-ல் 92, 2018-ல் 67, 2019-ல் 116, 2020-ல் 19, 2021-ல் 36, 2022-ல் 17 இறப்புகள் பதிவாகியிருப்பதாக வீரேந்திர குமார் கூறினார்.

மனிதக்கழிவுகளை மனிதர்களே அகற்ற தடை மற்றும் அவர்களின் மறுவாழ்வு சட்டம் 2013-ன்படி, சாக்கடைகள் மற்றும் கழிவுநீர்த் தொட்டிகளில், தூய்மைப் பணியாளர்களே இறங்கி சுத்தம் செய்யும் நடைமுறை என்பது நாட்டில் தடைசெய்யப்பட்ட ஒன்று. மேலும், மனித மலத்தைக் கைகளால் சுத்தம் செய்வதற்கும், அதை அப்புறப்படுத்துவதற்கும் எந்தவொரு நபரையும் பயன்படுத்துவதை இந்தச் சட்டம் தடை செய்கிறது.

சாக்கடையில் இறங்கி வேலை செய்யும் பணியாளர்கள்
சாக்கடையில் இறங்கி வேலை செய்யும் பணியாளர்கள்

இருப்பினும், இந்த நாள் வரையிலும், இது போன்ற சுத்தம் செய்யும் பணிகளில், கழிவுநீர்த் தொட்டியில் இறங்கிய தூய்மைப் பணியாளர் உயிரிழப்பு என்ற செய்திகள் ஊடகங்களில் வெளிவந்த வண்ணமே உள்ளன. இந்த நிலையில், இது போன்ற பணியின்போது உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறித்து, சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டுள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சர் வீரேந்திர குமார்
சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சர் வீரேந்திர குமார்

கடந்த திங்கள் கிழமை முதல் நடைபெற்றுவரும் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில், இது குறித்து நேற்று கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது. இதற்கு பதிலளித்த சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சர் வீரேந்திர குமார், 2017-ம் ஆண்டு முதல் இதுவரை 347 பேர், கழிவுநீர்த் தொட்டியைச் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருக்கையில் இறந்திருக்கின்றனர் என்று தெரிவித்தார். மேலும் ஆண்டுவாரியாக, 2017-ல் 92, 2018-ல் 67, 2019-ல் 116, 2020-ல் 19, 2021-ல் 36 மற்றும் 2022-ல் 17 இறப்புகள் பதிவாகியிருப்பதாக வீரேந்திர குமார் கூறினார்.