Published:Updated:

ஐந்தாண்டுகளில் விளம்பரத்துக்காகச் செலவழித்தது எவ்வளவு?! - மத்திய அமைச்சர் தகவல்

மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர்

2017 முதல் கடந்த ஐந்து ஆண்டுகளில் விளம்பரங்களுக்காக மட்டும் மத்திய அரசு எத்தனை கோடி செலவிட்டிருக்கிறது என்பது பற்றி, தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் ராஜ்ய சபாவில் நேற்று தெரிவித்திருக்கிறார்.

ஐந்தாண்டுகளில் விளம்பரத்துக்காகச் செலவழித்தது எவ்வளவு?! - மத்திய அமைச்சர் தகவல்

2017 முதல் கடந்த ஐந்து ஆண்டுகளில் விளம்பரங்களுக்காக மட்டும் மத்திய அரசு எத்தனை கோடி செலவிட்டிருக்கிறது என்பது பற்றி, தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் ராஜ்ய சபாவில் நேற்று தெரிவித்திருக்கிறார்.

Published:Updated:
மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர்

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் கடந்த 18-ம் தேதி தொடங்கி நடைபெற்றுவருகிறது. இதில், நாடாளுமன்றத்தில் அவைக்கு இடையூறாக அமளியில் ஈடுபட்டதாக இதுவரை 27 எம்.பி-க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கின்றனர். மேலும், எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக, இரு அவைகளும் தினமும் சில மணி நேரம் ஒத்திவைக்கப்படுகின்றன. இருப்பினும் அவ்வப்போது எம்.பி-க்கள் எழுப்பும் கேள்விகளுக்கு அந்தந்த துறைசார்ந்த அமைச்சர்கள் பதிலளித்துவருகின்றனர்.

நாடாளுமன்றம்
நாடாளுமன்றம்

இந்த நிலையில், 2017 முதல் கடந்த ஐந்து ஆண்டுகளில் விளம்பரங்களுக்காக மட்டும் மத்திய அரசு எத்தனை கோடி செலவிட்டிருக்கிறது என்பது பற்றி, தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் ராஜ்ய சபாவில் நேற்று தெரிவித்திருக்கிறார்.

அது குறித்த எழுத்துபூர்வ பதிலில், ``2017 முதல் கடந்த ஐந்தாண்டு காலத்தில், அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களில் விளம்பரங்களுக்காக ரூ. 3,339.49 கோடியை மத்திய அரசு செலவிட்டிருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மத்திய அமைச்சர் அனுராக் தாகூர்
மத்திய அமைச்சர் அனுராக் தாகூர்

சரியாக, 2017-18 முதல் இந்த ஆண்டு ஜூலை 12-ம் தேதி வரை ரூ.1,756.48 கோடி அச்சு ஊடக விளம்பரங்களுக்குச் செலவு செய்யப்பட்டிருக்கிறது. அதேபோல் மின்னணு ஊடக விளம்பரங்களுக்காக ரூ.1,583.01 கோடி செலவிடப்பட்டிருக்கிறது.

மேலும் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் மூலம், வெளிநாட்டு ஊடகங்களில் விளம்பரங்களுக்காக அரசின் எந்த அமைச்சகத்தாலோ அல்லது வேறெந்த துறையாலோ எந்தச் செலவும் செய்யப்படவில்லை" என்று அனுராக் தாக்கூர் கூறியிருக்கிறார்.