Published:Updated:

சிங்கப்பூர் வேரியன்ட்: `அப்படி ஒன்றே கிடையாது கெஜ்ரிவால்!’ - கண்டித்த சிங்கப்பூர்

அர்விந்த் கெஜ்ரிவால் ( ANI )

`சிங்கப்பூரில் புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸானது கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியா கொரோனாவின் மூன்றாவது அலையை சந்திக்க நேரிடும். இந்த வைரஸானது குழந்தைகளை அதிகளவில் பாதிக்கும் அபாயம் உள்ளதாக அறிவியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்’

சிங்கப்பூர் வேரியன்ட்: `அப்படி ஒன்றே கிடையாது கெஜ்ரிவால்!’ - கண்டித்த சிங்கப்பூர்

`சிங்கப்பூரில் புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸானது கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியா கொரோனாவின் மூன்றாவது அலையை சந்திக்க நேரிடும். இந்த வைரஸானது குழந்தைகளை அதிகளவில் பாதிக்கும் அபாயம் உள்ளதாக அறிவியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்’

Published:Updated:
அர்விந்த் கெஜ்ரிவால் ( ANI )

கொரோனாவின் இரண்டாம் அலை தாக்குதலானது முற்றிலும் எதிர்பாராத வகையில் நாட்டில் அதிகப்படியான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. முதியவர்கள் முதல் இளையவர்கள் வரை இதில் பரவலாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். அமெரிக்கா முதலான நாடுகளில் விரைவாக அனைவருக்கும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு கொரோனாவை கட்டுப்படுத்தியுள்ளனர். ஆனால், இந்தியாவைப் பொறுத்தவரை ஆரம்பத்திலேயே அதிகப்படியான தடுப்பூசிகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டதாலும் மக்கள் தொகை காரணமாகவும் தற்போது சொந்த பய்டன்பாட்டுக்கே தடுப்பூசி தட்டுப்பாட்டால் தள்ளாடி வருவதை பலர் விமர்சித்து வருகின்றனர்.

இந்தியாவில் கொரோனா பரவல்
இந்தியாவில் கொரோனா பரவல்

இந்நிலையில், தற்போது டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பதிவிட்டுள்ள ட்வீட்டால் சர்ச்சை கிளம்பியுள்ளது. அதில், “சிங்கப்பூரில் புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸானது கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியா கொரோனாவின் மூன்றாவது அலையை சந்திக்க நேரிடும். இந்த வைரஸானது குழந்தைகளை அதிகளவில் பாதிக்கும் அபாயம் உள்ளதாக அறிவியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இதன்மூலம் குழந்தைகளுக்கும் கொரோனா தடுப்பூசிகளை செலுத்த முன்னுரிமை அளிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்ககப்பட வேண்டும். இதற்கு, உடனடியாக டெல்லி - சிங்கப்பூர் இடையேயான விமான சேவையை தடை செய்ய வேண்டும்” என்று தெரிவித்திருந்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதை முற்றிலுமாக மறுத்துள்ள சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சர் விவின் பாலகிருஷ்ணன், “அரசியல்வாதிகள் உண்மையான கருத்துகளுக்கு மட்டுமே துணை போக வேண்டும். இது போன்ற வதந்திகளை பரப்பக்கூடாது” என்று கூறியதோடு, தற்போது பரவி வரும் உருமாறிய பி.1.617.2 வைரஸ் எவ்வாறு சிங்கப்பூரில் பரவியது என்பது குறித்த பதிவையும் அதனுடன் இணைத்துள்ளார். பி.1.617.2 வைரஸானது இந்தியாவில் கண்டறியப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பான விளக்கத்தை தெரிவித்துள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெயஷங்கர், “டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வெளியிட்டுள்ள பதிவில், அவர் இந்தியாவின் சார்பாக பேசவில்லை. அவரால் ஏற்பட்ட குழப்பத்தை நான் தெளிவுபடுத்துகிறேன். கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவும் சிங்கப்பூரும் கரம் கோர்த்து ஒருவருக்கு ஒருவர் உதவிகரமாக போராடி வருகிறது. இந்நிலையில், இது போன்ற ஆதாரமற்ற கருத்துக்களைத் தெரிவிப்பதன் மூலம் நமது பல்லாண்டு கால நல்லுறவினை அது சேதப்படுத்தக்கூடும் என்பதை குற்றம் சுமத்துபவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்” என்று சிங்கப்பூர் உடனான உறவை தெளிவுபடுத்தியதோடு, மறைமுகமாக அரவிந்த் கெஜ்ரிவாலை சாடியுள்ளார்.

அரவிந்த் கெஜ்ரிவால்
அரவிந்த் கெஜ்ரிவால்

அதைத் தொடர்ந்து சிங்கப்பூர் அரசாங்கமும் கெஜ்ரிவாலின் கருத்துக்களை கடுமையாக மறுத்துள்ளதோடு, “கெஜ்ரிவால், உருமாறிய வைரஸ் குறித்தும், விமான சேவையை தடை செய்வது குறித்தும் பேசக்கூடிய நபரல்ல. ஏனெனில், இந்த உருமாறிய கொரோனா வைரஸானது இந்தியாவிலிருந்தே எங்கள் நாட்டினருக்கு பரவியுள்ளது” என்று காரமான விமர்சனங்களை வெளிப்படுத்தியுள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism