Published:Updated:

`ஸ்டெர்லைட் ஆலையை மூட சிறப்புச் சட்டம்; முதல்வரின் வாக்குறுதி என்னாச்சு?’ - நாம் தமிழர் கட்சி கேள்வி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

`` `ஸ்டெர்லைட் ஆலையை மூட சட்டமன்றத்தில் சிறப்புச் சட்டம் இயற்றப்படும்’ என தேர்தல் பிரசாரத்தில் ஸ்டாலின் சொன்ன வாக்குறுதி என்ன ஆச்சு... சட்டமன்றத்தில் இதுவரை இந்த வாக்குறுதியை நிறைவேற்றாததற்கு என்ன காரணம்?” என நாம் தமிழர் கட்சியினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி, கடந்த 2018-ம் ஆண்டு ஆலையைச் சுற்றியுள்ள கிராம மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்திவந்தனர். இந்தப் போராட்டத்தின் 100-வது நாளான கடந்த 2018, மே 22-ம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கிய மக்களின் பேரணியில் திடீரென கலவரம் வெடித்தது. இதில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில், இரண்டு பெண்கள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதையடுத்து மே 24-ம் தேதி ஆலை சீல் வைத்து மூடப்பட்டது. மீண்டும் ஆலையைத் திறக்க வலியுறுத்தி வேதாந்தா உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு நடந்துவருகிறது.

நாம் தமிழர் கட்சியினர்
நாம் தமிழர் கட்சியினர்

ஆலை மூடப்பட்டு மூன்றாண்டைக் கடந்த நிலையிலும், ஆலையின் மூலம் பயன் பெற்றோர், ஒப்பந்ததாரர்கள் உள்ளிட்டோர் மீண்டும் ஆலையைத் திறக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துவருகின்றனர். அதேபோல, அரசால் கொள்கை முடிவு எடுக்கப்பட்டு, மூடப்பட்ட ஸ்டெர்லைட் நச்சாலையை மீண்டும் திறக்கக் கூடாது என ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்புக் குழுவினரும் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்து வருகின்றனர்.

இந்தநிலையில், `ஸ்டெலைட் ஆலையை நிரந்தரமாக மூட சிறப்புச் சட்டம் இயற்றப்படும் என முதல்வர் ஸ்டாலின் கூறிய வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்’ என நாம்தமிழர் கட்சியினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர் இது தொடர்பாக ஆட்சியரிடம் மனு அளித்தனர். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் மாவட்டச் செயலாளர் வேல்ராஜ், ``முந்தைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக திமுக தலைவரும், தற்போதைய முதல்வருமான ஸ்டாலின் தூத்துக்குடியில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டபோது, `ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட சட்டமன்றத்தில் சிறப்புச் சட்டம் இயற்றப்படும்’ என வாக்குறுதி அளித்தார்.

செய்தியாளர்களைச் சந்தித்த நாம் தமிழர் கட்சியினர்
செய்தியாளர்களைச் சந்தித்த நாம் தமிழர் கட்சியினர்

தி.மு.க ஆட்சிப் பொறுப்பேற்ற முதல் சட்டமன்றக் கூட்டத்தொடரிலேயே ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவது, இந்த மண்ணிலிருந்து அகற்றுவது தொடர்பான சிறப்புச் சட்டத்தை நிறைவேற்றுவார். அதற்கு அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் குரல் எழுப்புவார்கள் என எதிர்பார்த்தோம். ஆனால், ஆட்சிப் பொறுப்பேற்று 100 நாள்களைக் கடந்த நிலையில், இதுவரை சட்டமன்ற கூட்டத்தொடரில் ஸ்டெர்லைட் ஆலையைப் பற்றி எதுவும் பேசாதது வருத்தமளிக்கிறது. நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில், கொடுத்த வாக்குறுதிப்படி ஸ்டெர்லைட் ஆலை குறித்த வாக்குறுதியையும் நிறைவேற்ற வேண்டும்” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு