Published:Updated:

அசுரனில் சொல்லப்படும் பஞ்சமி நிலம்!- ஸ்டாலினின் ட்வீட்டும் ராமதாஸின் கேள்வியும்

ஸ்டாலின் ( Twitter/@mkstalin )

`அசுரன்' படம் பார்த்த பல தரப்பினரும் படத்தைப் பாராட்டி வருகின்றனர். தற்போது ஸ்டாலினும் படத்தைப் பார்த்துவிட்டு பாராட்டியுள்ளார்.

அசுரனில் சொல்லப்படும் பஞ்சமி நிலம்!- ஸ்டாலினின் ட்வீட்டும் ராமதாஸின் கேள்வியும்

`அசுரன்' படம் பார்த்த பல தரப்பினரும் படத்தைப் பாராட்டி வருகின்றனர். தற்போது ஸ்டாலினும் படத்தைப் பார்த்துவிட்டு பாராட்டியுள்ளார்.

Published:Updated:
ஸ்டாலின் ( Twitter/@mkstalin )

பன்ச் டயலாக், அதிரடி சண்டை, ஓப்பனிங் சாங் , கட்டாய நகைச்சுவை போன்ற கமர்ஷியல்களில் இருந்து சமீபகாலமாக தமிழ் சினிமாவின் நிறம், மாறத் தொடங்கியிருக்கிறது. தற்போது மக்களின் வாழ்க்கையை அதன் பிரச்னைகளுடன் சித்திரிக்கத் தொடங்கியிருக்கிறது.

அசுரன்
அசுரன்

அப்படி வறுமை நிலையில் உள்ள மக்கள், மிகவும் சாதாரணமாகச் சந்திக்கும் அரசியலைப் பற்றிப் பேசியுள்ளது வெற்றிமாறன் - தனுஷ் கூட்டணியில் உருவான ‘அசுரன்’ படம். `வெக்கை’ நாவலின் கதையை மையமாகவைத்து அதில் பல ஆண்டுக்கால சாதிய வரலாற்றையும் சமீபகால நிகழ்வுகள் ஏற்படுத்தியிருக்கும் மாற்றங்களையும் சேர்த்துச் சொல்லியிருக்கிறது படம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பஞ்சமி நிலத்தை மீட்க தனுஷ் மற்றும் அவரது குடும்பம் எதிர்கொள்ளும் துயரங்களை அந்தக் கால சாயல் மாறாமலும் இறுதியில், `படிப்பு மட்டுமே பிறர் நம்மிடம் இருந்து பறிக்க முடியாத சொத்து’ என்ற வசனத்துடன் அழுத்தமாகப் பதிவு செய்துள்ளார் வெற்றிமாறன்.

இந்தப் படத்தைப் பார்த்த பல அரசியல் தலைவர்களும் பிரபலங்களும் வெற்றி மாறனின் இயக்கத்தையும், தனுஷின் நடிப்பையும் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர். மிகவும் குறுகிய காலத்தில் எடுக்கப்பட்ட தரமான படம் என தனுஷின் ரசிகர்களும் அவரைக் கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில், தி.மு.க தலைவர் மு.க ஸ்டாலினும் `அசுரன்' படம் பார்த்துவிட்டு, இயக்குநரையும், தனுஷையும் பாராட்டியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அவர் தனது ட்விட்டர் பதிவில், ``அசுரன் படம் மட்டுமல்ல பாடம்! பஞ்சமி நில உரிமை மீட்பை மையமாக வைத்து சாதிய சமூகத்தைச் சாடும், சாதி வன்மத்தைக் கேள்வி கேட்கும் துணிச்சல்காரன்! கதை, களம், வசனம் என வென்று காட்டியிருக்கும் வெற்றிமாறனுக்கும், அதில் வாழ்ந்து காட்டியிருக்கும் தனுஷுக்கும் பாராட்டுகள்” என வாழ்த்தியுள்ளார்.

இதற்கு நடிகர் தனுஷ், ``காலம் ஒதுக்கி அசுரனைப் பார்த்ததற்கும் பாராட்டியதற்கும் மிக்க நன்றி ஐயா. பெருமகிழ்ச்சி அடைகிறோம்” என ட்விட் செய்துள்ளார்.

இதற்கிடையில் ஸ்டாலினின் ட்வீட்டை குறிப்பிட்டு, ``ஆஹா.... அற்புதம்... அசுரன் கற்றுத் தந்த பாடத்தை ஏற்று, முரசொலி அலுவலகத்துக்காக வளைக்கப்பட்ட பஞ்சமி நிலங்களை உரியவர்களிடம் மீண்டும் ஒப்படைப்பார் என்று நம்புவோம்!” என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கிண்டலடித்துள்ளார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism