Published:Updated:

''மூன்று நாட்களாகத் தேடி வீட்டு சாவியைக் கண்டுபிடித்திருக்கிறார்கள்!'' - டாப்ஸி கிண்டல்

சில வாரங்களுக்கு முன் நடந்த விவசாயிகள் போராட்டத்திற்கும் அரசுக்கு எதிரான கருத்துக்களை நடிகை டாப்ஸி மற்றும் இயக்குநர் அனுராக் காஷ்யப் இருவரும் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பாலிவுட் நடிகரான டாப்ஸி (Taapsee) மற்றும் இயக்குநர் அனுராக் காஷ்யப் (Anurag kashyap) இருவருக்கும் சொந்தமான இடங்களில் கடந்த மார்ச் மூன்றாம் தேதியில் இருந்து வருமான வரித்துறை சோதனை நடந்தது. டாப்ஸி மற்றும் காஷ்யப் இருவரும் மத்திய அரசு அறிமுகப்படுத்தும் பல புதிய சட்டங்களுக்கு தங்களுடைய எதிர் கருத்துகளை சமூக வலைதளங்களில் பதிவு செய்து வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சில வாரங்களுக்கு முன் நடந்த விவசாயிகள் போராட்டத்திற்கும் அரசுக்கு எதிரான கருத்துகளை அவர்கள் பதிவிட்டிருந்தனர். அதற்கு எதிர்வினையாகவே இந்த வருமான வரித்துறை சோதனை என்பதாகப் பார்க்கப்படுகிறது. மகாராஷ்டிராவில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அமைச்சர் நவாப் மாலிக்கும், இது கருத்துச் சுதந்திரத்தை ஒடுக்குவதற்கான முயற்சி எனத் தெரிவித்திருக்கிறார்.

மும்பை மின்தடை.. சைபர் தாக்குதலை நடத்தியது சீனாவா?

வருமான வரித்துறை மார்ச் மூன்றாம் தேதியில் இருந்து கடந்த மூன்று நாட்களாக மும்பை மற்றும் புனேவில் டாப்ஸி மற்றும் காஷ்யப் ஆகியோருக்கு சொந்தமான 30 இடங்களில் சோதனை நடத்தியது. அந்த சோதனை இன்று முடிவுக்கு வந்திருக்கிறது. இதனையொட்டி நடிகை டாப்ஸி தன் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் நக்கலாக ஒரு பதிவிட்டிருக்கிறார்.

''மூன்று நாள் தீவிர சோதனைக்குப் பின்னர் முக்கியமான சில விஷயங்களைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். பாரிஸில் எனக்கு சொந்தமாக இருப்பதாக அவர்கள் சொல்லும் வீட்டு பங்களாவிற்கான சாவி. கோடை விடுமுறை வருகிறதல்லாவா?

அடுத்து நான் வேண்டாம் என மறுத்திருந்த 5 கோடி ரூபாய்க்கான ரசீது. எதிர்காலத்தில் என்னை சிக்கவைக்க உதவும் என்கிற நோக்கத்தோடு எடுத்திருக்கிறார்கள். அவ்வளவு மலிவானவள் இல்லை'' என்று எழுதியிருக்கிறார் டாப்ஸி.

டாப்ஸியின் ட்வீட் வந்த சில மணிநேரங்கள் கழித்து மீண்டும் #DoBaaraa படத்தின் ஷூட்டிங்கை தொடங்கிவிட்டதாக டாப்ஸியுடன் இருக்கும் படத்தை பதிவிட்டிருக்கிறார் அனுராக் காஷ்யப்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு