Published:Updated:

Tamil News Today: மும்பையில் இரண்டு நாள்களுக்கு 144 தடை உத்தரவு... ஒமைக்ரான் பரவலைத் தடுக்க நடவடிக்கை!

ஒமைக்ரான் கொரோனா வைரஸ்
Live Update
ஒமைக்ரான் கொரோனா வைரஸ்

11-12-2021 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

11 Dec 2021 8 AM

மும்பையில் 144 தடை உத்தரவு!

உலக நாடுகள் முழுவதும் ஒமைக்ரான் கொரோனா தொற்று பரவல் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், மும்பையில் இரண்டு நாள்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வைரஸ் தொற்று பரவலைத் தடுக்கும்விதமாக இந்த இரண்டு நாள்கள் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் ஒமைக்ரான் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 17-ஆக உள்ளது.