Published:Updated:

Tamil News Today: ` வழிபாட்டுத் தலங்களில் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபட அனுமதி!’ - புதிய தளர்வுகள்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
மீனாட்சியம்மன் கோயில்
மீனாட்சியம்மன் கோயில் ( என்.ஜி.மணிகண்டன் )

14-10-2021 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

14 Oct 2021 4 PM

வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபட அனுமதி

தமிழகத்தில் கொரோனா பரவலுக்குப் பிறகு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவல் தமிழகத்தில் தொடர்ந்து கட்டுக்குள் இருக்கும் நிலையில், தற்போது தமிழக அரசு சார்பில் மேலும் சில தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், அனைத்து வகையான கடைகள், உணவகங்கள் இரவு 11 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்திருக்கிறது.

உணவகம்
உணவகம்

தமிழகத்தில் தனியார் நிறுவனங்கள் நடத்தும் பொருட்காட்சிகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனினும் அரசியல் கூட்டம், திருவிழாக்கள், சமுதாய மற்றும் கலாசார நிகழ்ச்சிகளுக்கான தடை தொடரும் என இன்றைய தமிழக அரசின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கோயில்களில் பக்தர்கள் வழிபட தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. முன்னதாக வெள்ளி, சனி, ஞாயிறுகளில் அதிக அளவில் கூட்டம் கூடுவதால் வழிபாட்டுத் தலங்களில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

மழலையர் மற்றும் நர்சரி பள்ளிகள் திறப்பதற்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. மேலும், ஞாயிற்றுக்கிழமைகளில் கடற்கரைகளுக்கு மக்களுக்குச் செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஞாயிற்றுக்கிழமைகளிலும் மக்கள் இனி கடற்கரைக்குச் செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

14 Oct 2021 9 AM

ஒரே நேரத்தில் இரண்டு காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி!

கனமழை
கனமழை

வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகியுள்ள நிலையில், `அரபிக்கடலிலும் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியிருக்கிறது’ என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. அக்டோபர் 10-ம் தேதியே உருவாகும் என கூறப்பட்ட நிலையில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி தாமதமாக உருவாகியிருக்கிறது என்றும், வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் ஆந்திரா-ஒடிசா நோக்கிச் செல்லும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. மேலும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியால் மூன்று நாள்களுக்கு தமிழகம், கேரளா, கர்நாடகாவில் மிக கனமழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு