Published:Updated:

Tamil News Today: இந்தியாவில் 100-ஐ தாண்டியது ஒமைக்ரான் பாதிப்பு!

ஒமைக்ரான்
Live Update
ஒமைக்ரான் ( pixa bay )

17-12-2021 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

17 Dec 2021 4 PM

இந்தியாவில் 100-ஐ தாண்டியது ஒமைக்ரான் பாதிப்பு!

இந்தியாவில் ஒமைக்ரான் நோய்த்தொற்று பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 101-ஆக அதிகரித்திருப்பதாக மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. வெளிநாடுகளிலிருந்து இந்தியா வந்தவர்களில் இதுவரை 101 பேருக்கு ஒமைக்ரான் நோய்த்தொற்று பாதிப்பு உறுதிசெய்யப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது. அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 32 பேருக்கும், டெல்லியில் 22 பேருக்கும், ராஜஸ்தானில் 17 பேருக்கும் ஒமைக்ரான் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டிருக்கிறது.

ஒமைக்ரான்
ஒமைக்ரான்

நோய்த்தொற்று பரவல் காரணமாக, மக்கள் அத்தியாவசியமற்ற பயணங்களையும், பொது இடங்களில் தேவையின்றி கூடுவதையும் தவிர்க்க வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை வலியுறுத்தியிருக்கிறது.

17 Dec 2021 1 PM

தமிழ்த்தாய் வாழ்த்து மாநிலப் பாடலாக அறிவிப்பு! - அரசாணை வெளியிட்டது தமிழக அரசு

தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை தமிழக அரசின் மாநிலப் பாடலாக அறிவித்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்திருக்கிறார். மேலும், தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் இசைக்கப்படும்போது, அனைவரும் எழுந்து நிற்க வேண்டும் எனவும் தமிழக அரசின் சார்பில் அரசாணை பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

இது தொடர்பான அரசாணையில், கல்வி நிலையங்கள், அரசு அலுவலகங்களில் நிகழ்ச்சிகள் தொடங்கப்படும்போது, தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட வேண்டும் என்றும், அப்போது அனைவரும் அதை வாய்ப்பாடுபோலப் பாட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
17 Dec 2021 12 PM

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நெல்லை: தனியார் பள்ளி கழிவறைச் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் 3 மாணவர்கள் பலி!

நெல்லை பொருட்காட்சித் திடல் அருகிலிருக்கும் சாஃப்டர் மேல்நிலைப்பள்ளியில் இன்று காலை கழிவறைச் சுற்றுச்சுவர் திடீரென இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. அதில், கழிவறைக்குச் சென்றிருந்த ஐந்து மாணவர்கள் விபத்தில் சிக்கினர். அவர்களில் இரண்டு மாணவர்கள் சம்பவ இடத்திலேயே இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தனர். தகவலறிந்து கூடிய சக மாணவர்கள், ஆசிரியர்கள் உடனடியாக போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர்.

Tamil News Today: இந்தியாவில் 100-ஐ தாண்டியது ஒமைக்ரான் பாதிப்பு!

அங்கு விரைந்த போலீஸார், மூன்று மாணவர்களை படுகாயங்களுடன் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இரண்டு மாணவர்கள் இறந்தநிலையில், தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தவர்களில் ஒரு மாணவர் இறந்துவிட்டதால், பலி எண்ணிக்கை 3-ஆக அதிகரித்திருக்கிறது. போலீஸார் தொடர்ந்து இந்த விபத்து தொடர்பாக விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

17 Dec 2021 8 AM

திமுக அரசைக் கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம்!

அதிமுக-வின் உட்கட்சித் தேர்தலில் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் தேர்ந்தெடுக்கப்பட்டனர், ஒருங்கிணைப்பாளர்களாக இருவரும் பொறுப்பேற்ற பிறகு, பெட்ரோல், டீசல் விலை குறைப்பு உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றுவதில் கவனம் செலுத்தாமல் இருக்கிறது என குற்றம்சாட்டியதோடு அதைக் கண்டித்து டிசம்பர் 9-ம் தேதி போராட்டம் நடைபெறும் எனவும் அறிவித்திருந்தனர்.

அதிமுக
அதிமுக

இதற்கிடையே நீலகிரி மாவட்டம் குன்னூரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து சம்பவம் காரணமாக அந்தப் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டு, இன்று நடைபெறவிருக்கிறது. தமிழ்நாடு முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் அந்தந்த மாவட்டச் செயலாளர்கள், மூத்த தலைவர்கள், முன்னாள் எம்.எல்.ஏ-க்கள் எம்.பி-க்கள், முன்னாள் அமைச்சர்கள் தலைமையில் போராட்டங்கள் நடைபெறவிருக்கின்றன.