Published:Updated:

`நிறைவேற்றப்படாத நீண்டநாள்‌ தேவைகள்‌; 15 தினங்களுக்குள்‌...’ - எம்.எல்.ஏ-க்களுக்கு ஸ்டாலின் கடிதம்

முதல்வர் ஸ்டாலின்

``சட்டமன்றத்‌ தொகுதியில்‌ பல ஆண்டுகளாக நிறைவேற்றப்படாத மக்களுடைய நீண்டநாள்‌ தேவைகள்‌ இந்தப்‌ புதிய முன்னோடி திட்டத்தின்கீழ்‌, உங்கள்‌ மூலமாக நிறைவேறும்‌ என உறுதியாக நான்‌ நம்புகிறேன்‌." - முதல்வர் ஸ்டாலின்

`நிறைவேற்றப்படாத நீண்டநாள்‌ தேவைகள்‌; 15 தினங்களுக்குள்‌...’ - எம்.எல்.ஏ-க்களுக்கு ஸ்டாலின் கடிதம்

``சட்டமன்றத்‌ தொகுதியில்‌ பல ஆண்டுகளாக நிறைவேற்றப்படாத மக்களுடைய நீண்டநாள்‌ தேவைகள்‌ இந்தப்‌ புதிய முன்னோடி திட்டத்தின்கீழ்‌, உங்கள்‌ மூலமாக நிறைவேறும்‌ என உறுதியாக நான்‌ நம்புகிறேன்‌." - முதல்வர் ஸ்டாலின்

Published:Updated:
முதல்வர் ஸ்டாலின்

2021-ல் தமிழ்நாட்டில் ஆட்சிப் பொறுப்பேற்ற திமுக அரசு, `உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ எனும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியிருந்தது. இந்தத் திட்டத்தின் மூலம் மக்கள் தங்களின் தொகுதியிலுள்ள பிரச்னைகள் குறித்து நேரடியாக அரசுக்குத் தெரிவிக்கலாம். மேலும் திமுக அரசின் ஓராண்டு நிறைவையொட்டி, சட்டமன்றத்தில் கடந்த மே மாதம் இந்தத் திட்டத்தை விரிவுபடுத்துவது குறித்த அறிவிப்பையும் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டிருந்தார். மேலும் அதற்காக `இந்த ஆண்டே ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கப்படும்’ என்றும் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

இந்த நிலையில், மாநிலத்தின் அந்தந்தத் தொகுதிகளில் நீண்டகாலமாகத் தீர்க்கப்படாமலிருக்கும் 10 முக்கியப் பிரச்னைகள் குறித்து, மாவட்ட ஆட்சியர்களுக்கு அடுத்த 15 நாள்களுக்குள் கோரிக்கைப் பட்டியல் அனுப்ப வேண்டும் என்று அனைத்து எம்.எல்.ஏ-க்களுக்கும் ஸ்டாலின் கடிதம் எழுதியிருக்கிறார்.

அந்தக் கடிதத்தில், `` தங்களது சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஊரக மற்றும்‌ நகர்ப்புறப் பகுதிகளில்‌, மக்களின்‌ நீண்டகாலமாக நிறைவேற்றப்படாத பத்து முக்கியமான கோரிக்கைகளை, தேவை மற்றும்‌ அவசியத்தின்‌ அடிப்படையில்‌ ஆராய்ந்து, அந்தப்‌ பரிந்துரைப்‌ பட்டியலைத்‌ தொடர்புடைய மாவட்ட ஆட்சித்‌தலைவருக்கு அடுத்த 15 தினங்களுக்குள்‌ அனுப்பிவைக்குமாறு உங்களைக் கேட்டுக்கொள்கிறேன்‌.

முதல்வர் ஸ்டாலின் கடிதம்
முதல்வர் ஸ்டாலின் கடிதம்

சட்டமன்றத்‌ தொகுதியில்‌ பல ஆண்டுகளாக நிறைவேற்றப்படாத மக்களுடைய நீண்டநாள்‌ தேவைகள்‌ இந்தப்‌ புதிய முன்னோடித் திட்டத்தின்கீழ்‌, உங்கள்‌ மூலமாக நிறைவேறும்‌ என உறுதியாக நான்‌ நம்புகிறேன்‌. இது மட்டுமன்றி, மாவட்டங்களிடையே இருக்கக்கூடிய சமூக மற்றும்‌ பொருளாதார ஏற்றத்தாழ்வுகளைச்‌ சீர்செய்து, தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக மாற்றுவதற்கும் இந்தத் திட்டம்‌ மிகுந்த பங்களிக்கும்‌ என்பதிலும்‌ எனக்கு நம்பிக்கை உள்ளது. அதற்கான முழு ஒத்துழைப்பையும்‌ நீங்கள்‌ அளிக்க வேண்டும்‌ என நான்‌ அன்புடன்‌ கேட்டுக்கொள்கிறேன்‌" என ஸ்டாலின் கூறியிருக்கிறார்.