Published:Updated:

Election Updates: விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு!

விடுதலைச் சிறுத்தைகள் தொகுதி உடன்படிக்கை
Live Update
விடுதலைச் சிறுத்தைகள் தொகுதி உடன்படிக்கை

தமிழகத் தேர்தல் தொடர்பான செய்திகள் மற்றும் லேட்டஸ்ட் செய்திகளின் தொகுப்பு..!

04 Mar 2021 1 PM

விடுதலைச் சிறுத்தைகளுக்கு 6  தொகுதிகள்

நீண்ட இழுபறிக்குப் பிறகு தி.மு.க கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகளுக்கான தொகுதிப் பங்கீடு உடன்படிக்கை கையெழுத்தானது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தி.மு.க கூட்டணியில் ஆறு இடங்களில் போட்டியிடவிருக்கிறது. முன்னதாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு மூன்று தொகுதிகளையும், மனித நேய மக்கள் கட்சிக்கு இரண்டு தொகுதிகளையும் ஒதுக்கியிருந்தது தி.மு.க.

Election Updates: விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 6  தொகுதிகள் ஒதுக்கீடு!
04 Mar 2021 12 PM
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சசிகலாவின் முடிவை வரவேற்கிறோம் - பா.ஜ.க

`அரசியலிலிருந்து ஒதுங்கியிருப்பதாக சசிகலா அறிவித்ததை வரவேற்கிறோம்’ என்று பா.ஜ.க மேலிடப் பொறுப்பாளர், சி.டி.ரவி தெரிவித்திருக்கிறார். தி.நகரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``ஒருங்கிணைந்த அ.தி.மு.க என்பதே ஜெயலலிதாவின் கனவு. அந்தக் கனவை அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி நிறைவேற்றும். தினகரனும் ஜெயலலிதாவின் கனவை நிறைவேற்றுவார் என்று நம்புகிறோம்” என்றார்.

04 Mar 2021 10 AM

கூட்டணியில் தொடர் இழுபறி..!

தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதல் கட்சிகள் தங்கள் கூட்டணியை இறுதிசெய்யும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுவருகின்றன. அ.தி.மு.க., தி.மு.க இரண்டு பிரதான கட்சிகளிலும் இன்னும் கூட்டணி இறுதி செய்யப்படாத இழுபறி நிலையே நீடிக்கிறது.

அண்ணா அறிவாலயம்
அண்ணா அறிவாலயம்

தி.மு.க-வில் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையில் தொடர்ந்து இழுபறிநிலை நீடிக்கும் நிலையில், காங்கிரஸ் இன்று முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டிருக்கிறது. அதே போன்று இரண்டாம்கட்ட பேச்சுவார்த்தைக்கு தி.மு.க அழைப்பு விடுத்திருக்கும் நிலையில், தொல் திருமாவளவன் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகளுடன் இன்று காலை அவசர ஆலோசனை நடத்திவருகிறார். தி.மு.க கூட்டணியில் கம்யூனிஸ்ட் கட்சிகளும் தொடர்ந்து அதிருப்தியை வெளியிட்டுவருகின்றன. ம.தி.மு.க-வும் இரட்டை இலக்கில் தொகுதிகள் கேட்பதால் இன்னும் தொகுதிப் பங்கீடு இறுதிநிலையை எட்டாமல் இழுபறி நிலையிலேயே இருக்கிறது. இந்தநிலையில், தி.மு.க கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியுடன் இன்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுவருகிறது.

`வாய்ப்பு கிடைக்காதவர்கள் சோர்வடைய வேண்டாம்!’

Election Updates: விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 6  தொகுதிகள் ஒதுக்கீடு!

அ.தி.மு.க-வில் இன்று காலை வேட்பாளர் நேர்காணல் தொடங்கியது. சுமார் 8,000 நபர்கள் விருப்பமனு அளித்திருந்த நிலையில் இன்று நேர்காணல் நடைபெறுகிறது. சசிகலா அரசியலிலிருந்து விலகுவதாக அறிவித்திருக்கும் நிலையில், அ.தி.மு.க கூட்டணிக்குள் அ.ம.மு.க வருமா என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது. அ.தி.மு.க கூட்டணியைப் பொறுத்தவரை பா.ம.க-வுடனான தொகுதிப் பங்கீடு முடிவுக்கு வந்திருக்கிறது. பா.ஜ.க-வுடனும் தே.மு.தி.க-வுடனும் இழுபறிநிலையே நீடிக்கிறது. இரண்டு நாள்களில் கூட்டணிக்கான தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட்டு, பிரசாரப் பணிகள் தொடங்கும் என அ.தி.மு.க தரப்பினர் தெரிவிக்கின்றனர்.

இந்தநிலையில், `இந்தத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காதவர்கள் சோர்வடைய வேண்டாம்’ எனவும், `இங்கு வாய்ப்பு கிடைகாதவர்களுக்கு உள்ளாட்சித் தேர்தலில் நிச்சயம் வாய்ப்பு வழங்கப்படும்’ என்றும் அ.தி.மு.க துணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி பழனிசாமி விருப்ப மனு அளித்தவர்கள் மத்தியில் பேசுகையில் தெரிவித்தார்.