Published:Updated:

Election Updates: குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ1,000; ஆண்டுக்கு 10 லட்சம் புதிய வேலை வாய்ப்புகள் - ஸ்டாலின் வாக்குறுதி

தி.மு.க மாநாடு
தி.மு.க மாநாடு

தமிழகத் தேர்தல் தொடர்பான செய்திகள் மற்றும் லேட்டஸ்ட் செய்திகளின் தொகுப்பு..!

07 Mar 2021 8 PM

குடும்பத்   தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய்! 

திருச்சி சிறுகனூரில், தி.மு.க பொதுக்கூட்டத்தில், விடியலுக்கான முழக்கம் என்ற தலைப்பில் அடுத்த 10 ஆண்டுகளுக்கான தொலை நோக்குத் திட்டங்களை வெளியிட்டார் ஸ்டாலின். 7 துறைகள் 7 உறுதிமொழிகள் என்று அவர் அறிவித்த திட்டங்களின் முக்கியப் பட்டியல் பின்வருமாறு.

1. குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதம் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கப்படும்

2. பட்டியலினத்தவர், பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்டோர் கல்வித்தொகை இருமடங்கு உயர்த்தி வழங்கப்படும்.

3. மனிதக் கழிவுகளை மனிதரே அகற்றும் இழிவை முற்றிலுமாக ஒழிப்போம்.

4. அனைவருக்கும் உயர்தரக் கல்வி, உயர்தர மருத்துவம்

5. கல்வி சுகாதாரத்துக்குச் செலவிடப்பட்டு வரும் நிதி மூன்று மடங்கு உயர்த்தப்படும்

5. அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் முன்மாதிரிப் பள்ளிகளும், மருத்துவமனைகளும் அமைக்கப்படும்

6. மருத்துவர்கள், செவிலியர்கள், துணை மருத்துவர்கள், பிற தொழிற்கல்வி பட்டதாரிகளின் எண்ணிக்கை இரட்டிப்பாக்கப்படும்.

7. ஒவ்வொரு ஆண்டும் 10 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.

8. அடுத்த 10 ஆண்டுகளில் ரூ 35 லட்சம் கோடியைத் தாண்டும் இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சி எட்டப்படும்.

9. வறுமையில் வாடும் 1 கோடி பேரை மீட்டு வறுமைக் கோட்டிற்கு இல்லாத தமிழகம் உருவாக்கப்படும்

07 Mar 2021 8 PM

நாம்   தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிவிப்பு

நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிவிப்பு பொதுக் கூட்டம் இன்று சென்னையில் நடந்தது. திருவொற்றியூர் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடுகிறார். ஒரே மேடையில் 234 வேட்பாளர்களையும் அறிமுகம் செய்து உரையாற்றினார் சீமான்.

07 Mar 2021 6 PM

தி.மு.க பொதுக்கூட்டம்   தொடங்கியது

திருச்சி சிறுகனூரில் தி.மு.க-வின் மாபெரும் பொதுக் கூட்டம் தொடங்கி நடந்து வருகிறது. பல்லாயிரக் கணக்கான கட்சித் தொண்டர்கள் பொதுக் கூட்டத்திற்கு வருகை தந்துள்ளனர். முன்னதாக, பொதுக் கூட்டத்திற்கு வந்த ஸ்டாலின், 90 அடி உயர கம்பத்தில் தி.மு.க கொடியை ஏற்றித் தொடங்கி வைத்தார். இன்றைய பொதுக் கூட்டத்தில், 10 ஆண்டுகளுக்கான தொலை நோக்கு திட்டங்களை தி.மு.க தலைவர் ஸ்டாலின் அறிவிக்க இருக்கிறார். மேலும், முதற்கட்டமாக 10 வேட்பாளர்களின் பட்டியலும் வெளியிடப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

07 Mar 2021 10 AM

தி.மு.க -காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு கையெழுத்தானுது

நீண்ட இழுபறிக்கு பிறகு தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கான தொகுதிப் பங்கீடு அண்ணா அறிவாலயத்தில் இன்று கையெழுத்தானது. காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகளும், கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. முன்னதாக காங்கிரஸ் கட்சி, கடந்த தேர்தலில் போட்டியிட்ட 41 தொகுதிகளுக்கும் அதிகமான தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று கேட்டது. ஆனால், காங்கிரஸ் அதிரும் அளவுக்கு குறைந்த எண்ணிக்கையை தி.மு.க கூறவே, அதிருப்தியில் இருந்தது காங்கிரஸ். ஆலோசனை கூட்டத்தில் கே.எஸ்.அழகிரி கண்ணீர் விடும் அளவுக்குச் சென்றது விவகாரம். இந்நிலையில், இன்று இந்த தொகுதி பங்கீடு கையெழுத்தாகியிருக்கிறது.

கே. எஸ். அழகிரி பத்திரிகையாளர் சந்ததிப்பு

அடுத்த கட்டுரைக்கு