Election bannerElection banner
Published:Updated:

`ரெம்டெசிவிர்' மருந்து தட்டுப்பாடு... அதிகரிக்கும் கொரோனா... பரிதவிக்கும் தமிழகம்!

Remdesivir
Remdesivir ( Zsolt Czegledi/MTI via AP )

இந்த மருந்துக்கு நாடு முழுவதிலும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் மருந்து கிடைக்காத நிலை உருவாகியிருக்கிறது.

தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாவது அலை வேகமாகப் பரவி வரும் நிலையில், தினமும் 10,000-க்கும் மேற்பட்டோர் தொற்றினால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். குறிப்பாக சென்னையில் மட்டும் தினசரி தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 4,000-ஐ நெருங்கிக் கொண்டிருக்கிறது.

கொரோனா சிகிச்சை
கொரோனா சிகிச்சை
AP
ரெம்டெசிவிர் தட்டுப்பாடு... இறப்பு விகிதம் அதிகரிக்கும் அபாயம்... என்ன செய்கிறது அரசு?

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகளுக்குப் பல்வேறு நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகள் வழங்கப்பட்டாலும் ஆபத்தான நிலையில் உள்ள கொரோனா நோயாளிகளைக் காப்பாற்றுவதற்கு `ரெம்டெசிவிர்’ ஊசி மருந்து செலுத்தப்படுகிறது. நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே இருப்பதால், இந்த மருந்துக்கு நாடு முழுவதிலும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் மருந்து கிடைக்காத நிலை உருவாகியிருக்கிறது.

இந்நிலையில், இந்த மருந்துக்கான தேவை அதிகரித்திருக்கும் நிலையில், இதன் விலையை பல மருந்து நிறுவனங்கள் 6,000 - 10,000 ரூபாய் வரை அதிகரித்து விற்க ஆரம்பித்திருப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. உயிர்காக்கும் இந்த விஷயத்தில், மத்திய அரசாங்கம் உடனடியாக தலையிட வேண்டும் என்றும், தமிழகம், புதுச்சேரி, மகாராஷ்டிரா மாநிலங்கள் தங்களுக்கு ரெம்டெசிவிர் ஊசி மருந்தை அனுப்பி வைக்குமாறும் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தன. அந்தக் கோரிக்கைகள் வலுப்பெற்ற நிலையில், ரெம்டெசிவிர் மருந்தின் உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசர கால நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இது தொடர்பாக மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை மந்திரி மன்சுக் எல்.மான்டவியா தனது டிவிட்டர் பக்கத்தில், ``கடிலா ஹெல்த்கேர் நிறுவனம், டாக்டர் ரெட்டீஸ் லேப் நிறுவனம், சிப்லா, மைலன், சைன்ஜின் இன்டர்நேஷனல், ஹீட்டரோ ஹெல்த்கேர் ஆகிய மருந்து நிறுவனங்கள் ரெம்டெசிவிர் மருந்து விலையைக் குறைத்திருக்கின்றன. இந்நிலையில், கொரோனா தொற்று சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் ரெம்டெசிவிர் மருந்துக்கான இறக்குமதி வரியும் ரத்து செய்யப்படுகிறது" என அவர் தெரிவித்துள்ளார்.

கொரோனா நோயாளிகள்
கொரோனா நோயாளிகள்
Representational Image
`ரெம்டெசிவிர் மருந்தைப் பதுக்கினாரா முன்னாள் முதல்வர் பட்னாவிஸ்?! - மகாராஷ்டிரா அரசியலில் பரபரப்பு

அதே போல, ரெம்டெசிவிர் மருந்தின் தட்டுப்பாடு குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் பதிவிட்டுள்ள டிவிட்டர் குறிப்பில், ``ரெம்டெசிவிர் மருந்தின் உற்பத்தியை அதிகரிக்க 20 மருந்து தயாரிப்பு நிறுவனங்களுக்கு துரிதகதியில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மருந்தின் சில்லறை விற்பனைக்கும், ஏற்றுமதிக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆக்ஸிஜன் வசதியைத் தடையின்றி கொடுக்கவும், கோவாக்சின் தடுப்பூசியின் உற்பத்தியை வருகிற செப்டம்பர் மாதத்திற்குள் 10 மடங்காக அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என தெரிவித்துள்ளார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு