Published:Updated:

விஐபி, அரசியல்வாதிகளுக்கென புல்லட் புரூஃப் நேரு ஜாக்கெட் அறிமுகம் செய்த டிசிஎல்- விலை என்ன தெரியுமா?

புல்லட் புரூஃப் நேரு ஜாக்கெட் ( twitter )

2.5 கிலோ எடைகொண்ட இந்த ஜாக்கெட்டின் விலை ரூ.35,000-தான். இது முழுக்க முழுக்க வி.வி.ஐ.பி-க்கள் மற்றும் அரசியல்வாதிகளுக்கான பாதுகாப்பு உடையாக இருக்கும்.

விஐபி, அரசியல்வாதிகளுக்கென புல்லட் புரூஃப் நேரு ஜாக்கெட் அறிமுகம் செய்த டிசிஎல்- விலை என்ன தெரியுமா?

2.5 கிலோ எடைகொண்ட இந்த ஜாக்கெட்டின் விலை ரூ.35,000-தான். இது முழுக்க முழுக்க வி.வி.ஐ.பி-க்கள் மற்றும் அரசியல்வாதிகளுக்கான பாதுகாப்பு உடையாக இருக்கும்.

Published:Updated:
புல்லட் புரூஃப் நேரு ஜாக்கெட் ( twitter )

ட்ரூப் கம்ஃபோர்ட்ஸ் லிமிடெட் எனும் அரசு பொதுத்துறை நிறுவனமான டி.சி.எல்., வி.வி.ஐ.பி மற்றும் அரசியல்வாதிகளுக்கென குறைந்த விலையில் புல்லட் புரூஃப் நேரு ஜாக்கெட்டை அறிமுகப்படுத்தியிருக்கிறது.

டெல்லியில் நேற்று நடைபெற்ற சர்வதேச போலீஸ் எக்ஸ்போ 2022 நிகழ்ச்சியில் இந்த புதிய புல்லட் புரூஃப் நேரு ஜாக்கெட்டை, டி.சி.எல் நிறுவனம் காட்சிப்படுத்தியது. மேலும் இதன் விலை ரூ.35,000 என்றும், இந்த ஜாக்கெட்டின் எடை 2.5 கிலோ என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

TCL - ட்ரூப் கம்ஃபோர்ட்ஸ் லிமிடெட்
TCL - ட்ரூப் கம்ஃபோர்ட்ஸ் லிமிடெட்

இந்தப் புதிய புல்லட் புரூஃப் நேரு ஜாக்கெட் பற்றி டி.சி.எல்-ன் உதவி மேலாளர் குல்தீப் குமார் கூறுகையில், ``பொதுவாக நேரு ஜாக்கெட், குர்தா அல்லது சஃபாரி உடைகளை அணிய விரும்பும் அரசியல்வாதிகளுக்கென, குறைந்த விலையில் எளிதில் அணியக்கூடிய எடை குறைந்த அளவில் தோட்டாக்கள் துளைக்காத ஜாக்கெட்டை உருவாக்கி சோதனை செய்திருக்கிறோம். 2.5 கிலோ எடைகொண்ட இந்த ஜாக்கெட்டின் விலை ரூ.35,000-தான். இது முழுக்க முழுக்க வி.வி.ஐ.பி-க்கள் மற்றும் அரசியல்வாதிகளுக்கான பாதுகாப்பு உடையாக இருக்கும். மேலும் இந்த புல்லட் புரூஃப் ஜாக்கெட், அரசியல்வாதிகளின் தேவைகளுக்கு ஏற்ப பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

புல்லட் புரூஃப் நேரு ஜாக்கெட்
புல்லட் புரூஃப் நேரு ஜாக்கெட்

இந்த ஜாக்கெட், குறிப்பிட்ட வரம்புக்குள், அதாவது குறைவான தூரத்திலிருந்து தாக்கும் 9 MM போன்ற சிறிய அளவிலான கைத்துப்பாக்கிகளிலிருந்து பாதுகாப்பை வழங்கும். துவைக்கக்கூடிய வகையில் தயாரிக்கப்பட்டிருக்கும் இந்த ஜாக்கெட் மூன்று வண்ணங்களில் கிடைக்கிறது. இதை அணியும்போது, உடுத்துவதற்கு வசதியாக இருப்பதாகவும், பாதுகாப்பாக இருப்பதாகவும் உணரவைக்கும். இந்த ஜாக்கெட்டின் செயல்திறன், சண்டிகரிலுள்ள டெர்மினல் பாலிஸ்டிக்ஸ் ஆராய்ச்சி ஆய்வகத்தில் (டிபிஆர்எல்) பரிசோதிக்கப்பட்டது" எனத் தெரிவித்தார்.