Election bannerElection banner
Published:Updated:

கொடநாடு வழக்கு: `முதல்வர் பழனிசாமி, சசிகலா உட்பட 9 பேரை விசாரிக்க வேண்டும்!’ - எதிர்த்தரப்பு மனு

கொடநாடு எஸ்டேட்
கொடநாடு எஸ்டேட்

``தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சசிகலா, சுதாகரன், இளவரசி, நீலகிரி மாவட்ட முன்னாள் ஆட்சியர் சங்கர் உள்ளிட்ட 9 நபர்களிடமும் சாட்சியாக விசாரணை மேற்கொள்ள வேண்டும்.’’

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அவருடைய தோழி சசிகலாவுக்குச் சொந்தமான கொடநாடு எஸ்டேட் பங்களாவில் கடந்த 201-ம் ஆண்டு நள்ளிரவில் நடந்த கொலை, கொள்ளை வழக்கு நீலகிரி மாவட்டம், ஊட்டியிலுள்ள மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்றுவருகிறது.

கொடநாடு
கொடநாடு

இந்த வழக்கில் தொடர்புடையவர்களாக சயான், வாளையார் மனோஜ் உள்ளிட்ட 10 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு வழக்கு விசாரணை நடைபெற்றுவருகிறது. தற்போது சாட்சி விசாரணை மேற்கொள்ளப்பட்டுவருகிறது.

இந்தநிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா உள்ளிட்ட 9 பேரை நீதிமன்றத்துக்கு அழைத்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என எதிர்த்தரப்பு வழக்கறிஞர்கள் பரபரப்பு மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

முனிரத்தினம்
முனிரத்தினம்

இந்த விவகாரம் குறித்து நம்மிடம் பேசிய எதிர்த்தரப்பு வழக்கறிஞர்களில் ஒருவரான முனிரத்தினம், ``கொடநாடு பங்களாவில் நடந்த மர்மத்தை வெளிக்கொண்டுவர வேண்டுமானால் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சசிகலா, சுதாகரன், இளவரசி, நீலகிரி மாவட்ட முன்னாள் ஆட்சியர் சங்கர், முன்னாள் காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா, கொடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜர், அதிமுக-வைச் சேர்ந்த சஜ்ஜீவன் மற்றும் அவரது சகோதரர் சுனில் ஆகிய 9 நபர்களிடமும் சாட்சிகளாக விசாரணை மேற்கொள்ள வேண்டும் என நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருக்கிறோம். இந்த மனு தொடர்பாக வரும் 29-ம் தேதி விசாரணை நடைபெறும்" என்றார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு