Published:Updated:

அசத்தும் ஆவின் வளர்ச்சி... `களையெடுத்த' ஐ.ஏ.எஸ் அதிகாரிக்கு கொலை மிரட்டல்?

வள்ளலார் ஐ.ஏ.எஸ்
வள்ளலார் ஐ.ஏ.எஸ்

``அரசு நிறுவனங்கள் லாபத்தில் இயங்க வேண்டும். அதுதான் மக்களுக்கு நன்மையாக இருக்கும்"

ஊரடங்கு காலத்தில் 28% வளர்ச்சி; இதுவரை இல்லாத வகையில் வீட்டுக்கே பொருள்கள் டெலிவரி; புதிய பொருள்கள் அறிமுகம் செய்வதில் இந்திய அளவில் இரண்டாவது இடம்; அதிக வாடிக்கையாளர்கள் விரும்பும் பொருள்களில் இந்திய அளவில் ஏழாவது இடம்... இப்படி பல சாதனைகளைச் செய்து அசத்தி வருகிறது தமிழக அரசு நிறுவனமான ஆவின்.

ஆவின் நிறுவனத்தின் அதிரடி மாற்றங்களுக்கும் வளர்ச்சிக்கும் முக்கியக் காரணமாகச் சொல்லப்படுபவர் தற்போதைய நிர்வாக இயக்குநராக இருக்கும் வள்ளலார் ஐ.ஏ.எஸ். ``அரசு நிறுவனங்கள் என்றாலே நஷ்டத்தில்தான் இயங்கும் என்பது தவறான கருத்து. செயல்பாடு சிறப்பாக இருந்தால் தனியார் நிறுவனங்களைவிட அரசு நிறுவனங்களை லாபம் உள்ளதாக மாற்ற முடியும்'' என்ற வள்ளலார் ஐ.ஏ.எஸ், ஆவின் நிறுவனத்தின் தற்போதைய செயல்பாடுகள் பற்றிய தகவல்களை நமக்கு அளித்த பேட்டியில் விளக்கமாக எடுத்துச் சொன்னார்.

ஆவின்
ஆவின்

சந்தை நன்றாக இருக்கும்போதே நஷ்டத்தில் இயங்கிய ஆவின், ஊரடங்கு நேரத்தில் லாபம் ஈட்டியிருக்கிறதே... எப்படிச் சாத்தியமானது?

``அரசு நிறுவனங்கள் லாபத்தில் இயங்க வேண்டும். அதுதான் மக்களுக்கு நன்மையாக இருக்கும். அந்த வகையில், ஆவின் நேரடியாகப் பொதுமக்களை நுகர்வோர்களாகப் பெற்ற நிறுவனம். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, கிராமப்புறப் பொருளாதாரத்தின் பெரும்பகுதி பால் உற்பத்தியைச் சார்ந்திருக்கிறது. இரண்டு மாடுகள் வைத்திருக்கும் பல குடும்பங்கள், பால் விற்பனை மூலம் வாழ்க்கை நடத்தி வருகின்றன. இந்த நிலையில் ஊரடங்கு காலத்தில், தனியார் நிறுவனங்கள் பால் கொள்முதலை நிறுத்திக்கொண்டன. இதனால் உற்பத்தியாளர்கள், விற்பனைக்கு வழியில்லாமல் தவித்துக் கொண்டிருந்தார்கள். உடனடியாக அவர்களுக்கு உதவ வேண்டும் என முதலமைச்சர் உத்தரவிட்டார்.

அதன் அடிப்படையில், பால்வளத்துறை மூலம் தமிழகம் முழுவதும் விவசாயிகளிடம் பால் கொள்முதல் செய்தது ஆவின். நியாயமான விலை கொடுக்கிறோம். அதனால் வழக்கத்தைவிட, நாங்கள் செய்யும் கொள்முதல் அளவு அதிகமானது. ஊரடங்கு நேரத்திலும் பால் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் நுகர்வோருக்கு சப்ளை செய்தோம். விற்பனைக்குப் போக மீதமான பாலை மதிப்புக் கூட்டப்பட்ட பொருள்களாக மாற்றிச் சந்தைப்படுத்துகிறோம். உற்பத்தியாளர்கள், நுகர்வோர்கள் இருவருக்கும் சிக்கல் இல்லாத வகையில் நாங்கள் பணியாற்றி வருவதால், ஊரடங்கு நேரத்தில் இருதரப்பினரும் திருப்தியடைந்தனர். எந்தவொரு நிறுவனமாக இருந்தாலும் வாடிக்கையாளர்களைத் திருப்திப்படுத்தினால் போதும், லாபம் தானாகவே பெருகும். அதைத்தான் ஆவின் செய்துவருகிறது. ஊரடங்கு காலத்தில் அர்ப்பணிப்போடு வேலை செய்த எங்கள் ஊழியர்களின் பங்கு மகத்தானது.''

ஆவின்
ஆவின்

> பால் உற்பத்தியாளர்களுக்கு ஆவின் மூலம் என்னென்ன சலுகைகளைத் தருகிறீர்கள்..? / ஊரடங்கு காலத்தில் பல சவால்களைத் தாண்டி எப்படி பிசினஸை அதிகரித்தீர்கள்? / அதிகளவு கொள்முதல் செய்யப்படும் பால் எந்த வகையில் சந்தைப்படுத்தப்படுகிறது? / இந்திய அளவில் அதிக மக்கள் விரும்பும் நிறுவனமாக ஆவின் மாறியது எப்படி? / ஆவின் மேலாண்மை இயக்குநராகப் பொறுப்பேற்ற பிறகு விற்பனை நிர்வாகத்தில் பல மாற்றங்களை செய்திருக்கிறீர்களே..!

- இந்தக் கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்களை முழுமையாக நாணயம் விகடன் இதழில் வாசிக்க க்ளிக் செய்க - https://bit.ly/3h3CfDH

முன்பு நஷ்டம்... இப்போது 28% வளர்ச்சி! - அசத்தும் ஆவின்..! https://bit.ly/3h3CfDH

கொலை மிரட்டலில் வள்ளலார் ஐ.ஏ.எஸ்?

தமிழகத்தில் முக்கியமான துறைகளிலிருக்கும் சில ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்குக் கடுமையான அழுத்தங்கள் தரப்படுகின்றன. ஆட்சி முடிவதற்குக் குறுகிய காலமே உள்ள நிலையில், `கிடைத்தவரை லாபம்' என்று வாரிச்சுருட்ட நினைக்கும் சிலரது அழுத்தங்கள் தாங்காமல் கடும் மன உளைச்சலில் இருக்கிறார்கள் அந்த அதிகாரிகள். அவர்களில் ஒருவரான `ஆவின்' நிர்வாக இயக்குநர் வள்ளலார் ஐ.ஏ.எஸ் அதிகாரிக்குக் கொலை மிரட்டலே விடுக்கப்பட்டிருக்கிறது என்கிற `பகீர்' தகவல் நமக்குக் கிடைத்தது.

ஆவின் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராகப் பொறுப்பேற்ற வள்ளலார், துறையில் நடந்த ஊழல்களைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். அவற்றைக் களைய பல்வேறு அதிரடிகளை அரங்கேற்றத் தொடங்கினார். அதுதான் அவருக்குப் பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தி, கொலை மிரட்டல் வரை கொண்டுவந்துவிட்டிருக்கிறது. இது குறித்து ஆவினில் பணியாற்றும் நேர்மையான அதிகாரிகள் சிலர் நம்மிடம் பேசினார்கள்.

``தவறு செய்பவர்கள்மீது தயவு தாட்சண்யம் இல்லாமல் நடவடிக்கை எடுக்கிறார் எங்கள் எம்.டி. அரசியல்வாதிகள் பலரும் லஞ்சம் வாங்கிக்கொண்டு ஏராளமான ஒப்பந்த ஊழியர்களை நியமித்திருந்தார்கள். அவர்களில் பலர் வேலைக்கே வரமாட்டார்கள். ஆனால், சம்பளம் மட்டும் மாதந்தோறும் சென்றுகொண்டிருந்தது. அந்த வகையில் மாதம் 32 லட்சம் ரூபாய் ஆவினுக்கு நஷ்டம் ஏற்பட்டது. வள்ளலார் வந்ததும், ஒரே மாதத்தில் இவர்களில் பலரை வேலையைவிட்டு அனுப்பிவிட்டார்...

வள்ளலார் ஐ.ஏ.எஸ்
வள்ளலார் ஐ.ஏ.எஸ்

இதுவரை ஆவினில் பால் முகவராக ஆவதற்கு 10,000 ரூபாய் டெபாசிட் கட்ட வேண்டியிருந்தது. கூடவே பலமான சிபாரிசு தேவை. அதையும் உடைத்தார் வள்ளலார். ஆயிரம் ரூபாய் கட்டினாலே முகவர் ஆகிவிடலாம். இதனால், புதிதாக முகவர்கள் உருவானார்கள். ஊரடங்கு நேரத்தில் வாழ்வாதாரம் இழந்து தவித்த ஆட்டோ, டாக்ஸி டிரைவர்களையும் முகவர் ஆக்கினார். அனைத்து மாவட்டங்களிலும் இதற்கு அமோகமான வரவேற்பு கிடைத்தது. ஆவின் விற்பனை கூடிக்கொண்டே சென்றது. தனியார் நிறுவனங்கள் உட்பட பலரது கோபமும் இவர்மீது திரும்பியது" என்றவர்கள் இறுதியாகச் சொன்ன சில விஷயங்கள் `பகீர்' ரகம்.

- இதுதொடர்பான ஜூனியர் விகடன் கவர்ஸ்டோரியை முழுமையாக வாசிக்க க்ளிக் செய்க - https://bit.ly/3g4LaU7 கொலை மிரட்டலில் ஐ.ஏ.எஸ்! - களையெடுத்தது காரணமா? https://bit.ly/3g4LaU7

சிறப்புச் சலுகைகள்:

> ஆனந்த விகடன் தொடங்கி பசுமை விகடன் வரை விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 15 ஆண்டு கால பொக்கிங்களிலும் வலம்வர... ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > https://bit.ly/3h3Rdth

> விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ரூ.149 மதிப்புள்ள ஒரு மாத Vikatan Digital Pack-ஐ முற்றிலும் இலவசமாகப் பெறலாம். விகடன் ஆப் டவுன்லோடு செய்து, இந்தச் சலுகையைப் பெற https://bit.ly/2VRp3JV

அடுத்த கட்டுரைக்கு