Published:Updated:

#TNBreakfast Scheme: அரசுப் பள்ளி மாணவர்களுக்குக் காலை சிற்றுண்டி- மாணவர்களுடன் உணவருந்திய முதல்வர்!

மாணவர்களுடன் உணவருந்திய முதல்வர் ஸ்டாலின்

தமிழ்நாடு அரசு சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்குக் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

#TNBreakfast Scheme: அரசுப் பள்ளி மாணவர்களுக்குக் காலை சிற்றுண்டி- மாணவர்களுடன் உணவருந்திய முதல்வர்!

தமிழ்நாடு அரசு சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்குக் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

Published:Updated:
மாணவர்களுடன் உணவருந்திய முதல்வர் ஸ்டாலின்

அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்களை ஊக்குவிக்கவும், ஊட்டச்சத்துக் குறைபாட்டினை போக்கவும், கல்வி இடைநிற்றலை தடுக்கவும், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு `காலை சத்தான சிற்றுண்டி வழங்கப்படும்' என தமிழ்நாடு சட்டப்பேரவையில் 7.5.2022 அன்று முதலமைச்சர் ஸ்டாலின் 110 விதியின் கீழ் அறிவிப்பு வெளியிட்டார். இந்தத் திட்டம், அறிவிப்பு நிலையிலேயே பலதரப்பு மக்களிடமிருந்து பெரும் வரவேற்பைப் பெற்றது.

மாணவர்களுடன் உணவருந்திய முதல்வர்
மாணவர்களுடன் உணவருந்திய முதல்வர்

இதனைத் தொடர்ந்து மாநகராட்சி, நகராட்சி, கிராம ஊராட்சி, மலைப்பகுதிகளில் செயல்படும் 1,545 அரசுப் பள்ளிகளில் பயிலும் 1,14,095 மாணவர்களுக்குக் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்துக்கு முதற்கட்டமாக 33.56 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படுவதாக அரசு அறிவிப்பு வெளியானது. மேலும், ``தரமான காலை உணவு, உணவு தயாரிக்கப் பயன்படுத்தும் மூலப் பொருள்கள் இயல்பான நிறம், மனம் உடையதாக இருக்க வேண்டும்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மூலப்பொருள்கள், FSSAI நெறிமுறைகளுக்கு உகந்தவாறு இருக்க வேண்டும். காய்கறிகள் சுத்தமானதாக இருப்பது உறுதிசெய்யப்படவேண்டும். அந்த உணவு குழந்தைகளுக்கு வழங்கப்படுவதற்கு முன்பாக, பள்ளி மேலாண்மைக் குழு தினம்தோறும் உணவின் தரத்தை உறுதி செய்யவேண்டும். உணவு பாதுகாப்புத் துறை அலுவலர்கள், அவ்வப்போது பள்ளிகளில் வழங்கப்படும் உணவின் தரத்தை உறுதி செய்யவேண்டும். உணவு தயாரிக்கத் தேர்வு செய்யப்படும் இடத்தில் மட்டுமே உணவு தயார் செய்யப்படவேண்டும்.

அட்டவணை
அட்டவணை

அரசு வெளியிட்டிருக்கும் அட்டவணையில் உள்ள ஏதேனும் ஒரு சிற்றுண்டி வகையைப் பள்ளியில் அனைத்து வேலை நாள்களிலும் சமைத்து வழங்கவேண்டும். ஒவ்வொரு வாரத்திலும், குறைந்தது இரண்டு தினங்கள் முடிந்தளவு அந்தப் பகுதியில் கிடைக்கும் சிறுதானியங்களைக் கொண்டு சிற்றுண்டிகளை வழங்கவேண்டும்" என்று வழிகாட்டு நெறிமுறைகளில் குறிப்பிடப்பட்டிருந்தது.

முதற்கட்டமாக, மகளிர் சுயஉதவிக் குழுவைப் பயன்படுத்தி, சில மாவட்டங்களில் சோதனை முறையில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டது.

மாணவர்களுடன் உணவருந்திய முதல்வர்
மாணவர்களுடன் உணவருந்திய முதல்வர்

இந்த நிலையில், தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், இன்று (15.09.2022) மதுரை, ஆதிமூலம் மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் மாணவர்களுக்கு உணவு பரிமாறி இந்தத் திட்டத்தைத் தொடங்கிவைத்தார். மேலும், பள்ளி மாணவர்களுடன் முதல்வரும் அமர்ந்து உணவருந்தினார். அப்போது அங்கிருந்த மாணவர்களுக்கு முதல்வர் உணவை ஊட்டிவிட்டார்.

மாணவர்களுடன் உணவருந்திய முதல்வர்
மாணவர்களுடன் உணவருந்திய முதல்வர்

தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களில், இந்தத் திட்டத்தை செயல்படுத்தும் வகையில் ரூ.33.56 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. 417 மாநகராட்சி பள்ளிகளில் 43,681 மாணவர்கள், 163 நகராட்சி பள்ளிகளில் 17,427 மாணவர்கள், 728 வட்டார மற்றும் கிராம ஊராட்சி பள்ளிகளில் 42,826 மாணவர்கள், 237 தொலைதூர, மலைப்பிரதேச பள்ளிகளில் 10,161 மாணவர்கள் என மொத்தம் 1,545 பள்ளிகளில் தொடங்கப்பட்டிருக்கும் இந்தத் திட்டத்தின் மூலம் 1,14,095 மாணவர்கள் பயன்பெறுவார்கள்.

மாணவ, மாணவியர் பசியின்றி பள்ளிக்கு வருதல், ஊட்டச்சத்துக் குறைபாட்டினால் பாதிக்கப்படாமலிருத்தல், ஊட்டச்சத்து நிலையை உயர்த்துதல், பள்ளிகளில் மாணவர்களின் வருகையை அதிகரித்தல், வேலைக்குச் செல்லும் தாய்மார்களின் பணிச்சுமையைக் குறைத்தல் ஆகியவற்றை முக்கிய குறிக்கோள்களாகக் கொண்டு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்படுவதாகக் கூறப்பட்டிருக்கிறது. இந்தத் திட்டத்தின் தொடக்க விழாவில், கோயம்புத்தூர், வடிவேலம்பாளையத்தில் கடந்த 30 ஆண்டுக்காலமாக ஏழை எளியவர்களுக்கு ஒரு ரூபாய்க்கு இட்லி வழங்கிவரும் கமலாத்தாளை கௌரவிக்கும் விதமாக முதலமைச்சர் ஸ்டாலின் பொன்னாடை அணிவித்து அவருக்குச் சிறப்பு செய்தார்.

சமூக சேவகி கமலாத்தாள்
சமூக சேவகி கமலாத்தாள்

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தினை சிறப்பாகச் செயல்படுத்திட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை, ஊரக வளர்ச்சித் துறை, நகர்ப்புற நிர்வாகம், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம், பள்ளிக்கல்வித் துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் மற்றும் உணவுப் பாதுகாப்பு ஆகிய துறைகளின் அலுவலர்களைக் கொண்ட மாநில, மாவட்ட மற்றும் பள்ளி அளவிலான கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு, இந்தத் திட்டம் கண்காணிக்கப்படும் என்று அரசு தரப்பில் கூறப்பட்டிருக்கிறது.