Published:Updated:

`தேர்தலைத் தவிர்ப்பது பயத்தைக் காட்டுகிறது!' - தினகரன், கமல் குறித்து அமைச்சர் தங்கமணி

`நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் அ.தி.மு.க 30,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும்' என அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.

Minister Thangamani
Minister Thangamani

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூரில் ரூ.87 லட்சம் மதிப்பிலான கட்டடங்களை மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் தங்கமணி திறந்து வைத்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தங்கமணி, ``நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் 30,000 வாக்குகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க அமோக வெற்றி பெறும்'' என்றார்.

இடைத்தேர்தலில் அ.ம.மு.க மற்றும் மக்கள் நீதி மய்யம் போட்டியிடாதது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, ``இடைத்தேர்தலில் அ.ம.மு.க மற்றும் மக்கள்நீதி மய்யம் போட்டியிடாதது அவர்களின் பயத்தைக் காட்டுகிறது.

``அத்து மீறினால்..!" - நாமக்கல் எம்.பி-யை எச்சரிக்கும் அமைச்சர் தங்கமணி
Minister Thangamani
Minister Thangamani

ஆனால், அ.தி.மு.க எந்தத் தேர்தல் வந்தாலும் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும். கடந்த மூன்று ஆண்டுகளில் தட்கல் முறையில் 40,000 மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு 5,000 மின் இணைப்புகள் வழங்கப்படாமல் உள்ளது, அதை வருகிற அக்டோபர் 1 முதல் உரிய கட்டணம் செலுத்துபவர்களுக்கு மூப்பு அடிப்படையில் மின் இணைப்புகள் வழங்கப்படும்'' எனத் தெரிவித்தார்.

நாங்குநேரி தொகுதியில் பா.ஜ.க போட்டியிட விருப்பம் தெரிவிப்பதாக எழுப்பிய கேள்விக்குத் தங்கமணியிடம் இருந்து பதில் வரவில்லை.