Election bannerElection banner
Published:Updated:

`சேவைக்கு கௌரவம்!' - ஃபிளாரன்ஸ் நைட்டிங்கேல் விருது பெறும் இரு புதுச்சேரி செவிலியர்கள்

புதுச்சேரி அரசு
புதுச்சேரி அரசு

புதுச்சேரியைச் சேர்ந்த இரண்டு செவிலியர்களுக்கு சிறப்பாகப் பணியாற்றியதற்காக மத்திய அரசின் ஃபிளாரன்ஸ் நைட்டிங்கேல் விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது.

நாடு முழுவதிலும் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில், சிறப்பாகப் பணியாற்றும் செவிலியர்களைத் தேர்வுசெய்து அவர்களை கௌரவப்படுத்தும் விதமாக ஆண்டுதோறும் ஃபிளாரன்ஸ் நைட்டிங்கேல் விருதை வழங்கி வருகிறது மத்திய அரசின் சுகாதாரத்துறை.

செவிலியர் லதா
செவிலியர் லதா

அதன்படி 2020-ம் ஆண்டுக்கான ஃபிளாரன்ஸ் நைட்டிங்கேல் விருதுக்கு புதுச்சேரி தட்டாஞ்சாவடியைச் சேர்ந்த செவிலியர் அனுராதா மற்றும் நெட்டப்பாக்கம் மேட்டுத்தெருவைச் சேர்ந்த கிராமப்புற செவிலியர் லதா இருவரையும் தேர்வு செய்து அறிவித்திருக்கிறது மத்திய அரசு.

புதுச்சேரி சுகாதாரத்துறையில் கடந்த 25 ஆண்டுகளாகப் பணியாற்றிவரும் அனுராதா, தற்போது கதிர்காமத்தில் இயங்கிவரும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இதயவியல் பிரிவில் செவிலிய அதிகாரியாகப் பணியாற்றி வருகிறார்.

கரையாம்புத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த 23 ஆண்டுகளாகக் கிராமப்புற செவிலியராகப் பணியாற்றி வருகிறார் லதா.

செவிலியர் அனுராதா
செவிலியர் அனுராதா

இவர்கள் இருவரும் தங்களது பணியை சிறப்பாகச் செய்ததுடன், ரத்த தானம், கண்தான விழிப்புணர்வு, கர்ப்பிணிகள் மற்றும் பிரசவித்த தாய்மார்களுக்குத் தேவையான விழிப்புணர்வு உள்ளிட்ட செயல்பாடுகளில் தங்களது பங்களிப்பை சிறப்பாகச் செய்திருப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறது மத்திய அரசின் சுகாதாரத்துறை.

முன்னதாக அனுராதா மற்றும் லதா இருவரின் பெயர் மற்றும் பணித்திறன் அறிக்கையையும் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்திருந்தது புதுச்சேரி சுகாதாரத்துறை. அதைத் தொடர்ந்து தற்போது அனுராதா மற்றும் லதா இருவருக்கும் ஃபிளாரன்ஸ் நைட்டிங்கேல் விருதை அறிவித்திருக்கிறது மத்திய அரசு.

வாழ்த்துகள் இருவருக்கும்!

மத்திய அரசின் பத்ம விருதுகள் அறிவிப்பு - தமிழக சமூகசேவகர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு பத்மஸ்ரீ விருது!   #NowAtVikatan
Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு