Published:Updated:

``2024-க்குள் இந்தியாவின் சாலைகள் அமெரிக்காவைப் போல இருக்கும்..!" - நிதின் கட்கரி உத்தரவாதம்

நிதின் கட்கரி

``2024-ம் ஆண்டுக்குள், அமெரிக்காவிலுள்ள சாலைகளைப் போல இந்தியாவிலுள்ள சாலைகள் இருக்கும். அதற்கு நான் உத்தரவாதம் அளிக்கிறேன்." - நிதின் கட்கரி

``2024-க்குள் இந்தியாவின் சாலைகள் அமெரிக்காவைப் போல இருக்கும்..!" - நிதின் கட்கரி உத்தரவாதம்

``2024-ம் ஆண்டுக்குள், அமெரிக்காவிலுள்ள சாலைகளைப் போல இந்தியாவிலுள்ள சாலைகள் இருக்கும். அதற்கு நான் உத்தரவாதம் அளிக்கிறேன்." - நிதின் கட்கரி

Published:Updated:
நிதின் கட்கரி

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் கடந்த மாதம் 18-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் எதிர்க்கட்சிகளின் பெரும் அமளிகளுக்குப் பிறகு நாடாளுமன்றத்தில், ஒருவழியாகப் பணவீக்கம் தொடர்பாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று முன்தினம் விளக்கமளித்தார். அதைத் தொடர்ந்து நேற்று நடைபெற்ற கூட்டத்தொடரில், சுங்ககச்சவாடி நிலையங்களில் கொண்டு வரப்படவுள்ள புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் சாலை போக்குவரத்து திட்டங்கள் குறித்து மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி பேசினார்.

நிதின் கட்கரி
நிதின் கட்கரி

அப்போது, ``2024-ம் ஆண்டுக்குள் 26 பசுமை விரைவு நெடுஞ்சாலைகளை அரசு அமைக்கும். இது நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களுக்கிடையிலான பயண நேரத்தைக் குறைக்கும். அதுமட்டுமல்லாமல், 2024-ம் ஆண்டுக்குள், அமெரிக்காவிலுள்ள சாலைகளைப் போல இந்தியாவிலுள்ள சாலைகள் இருக்கும். அதற்கு நான் உத்தரவாதம் அளிக்கிறேன்" என நிதின் கட்கரி தெரிவித்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தேசிய நெடுஞ்சாலை
தேசிய நெடுஞ்சாலை
vikatan

அதைத் தொடர்ந்து சுங்கச்சாவடி வரி வசூல் தொழில்நுட்பம் குறித்துப் பேசிய நிதின் கட்கரி, ``சுங்கவரி வசூலிப்பதற்கான இரண்டு புதிய வழிமுறைகளை அரசு பரிசீலனை செய்துவருகிறது. ஒன்று செயற்கைக்கோள் அடிப்படையிலான வழிமுறை. அதாவது வாகனத்திலிருக்கும் ஜி.பி.எஸ் மூலம் வாகன உரிமையாளரின் வங்கிக் கணக்கிலிருந்து நேரடியாகக் கட்டணம் வசூலிக்க இது உதவும்.

சுங்கச்சாவடி
சுங்கச்சாவடி

மற்றொன்று, வாகனத்திலிருக்கும் நம்பர் பிளேட். இதில், கடந்த 2019 முதல் புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய நம்பர் பிளேட்டைத் தொடங்கினோம். இதனுள் கணினிமயமாக்கப்பட்ட மென்பொருள் அமைப்பு இருக்கும். இதன் மூலம் நாங்கள் கட்டணத்தை வசூலிப்போம். மேலும் சுங்கவரி வசூலில், ஃபாஸ்டேக் எனும் எலக்ட்ரானிக் டோல் வசூல் அமைப்பு மிகப்பெரிய பங்களிப்பை அளித்திருக்கிறது. இன்றுவரை சுமார் 5.56 கோடி ஃபாஸ்டேக் வழங்கப்பட்டிருக்கிறது. இந்த ஃபாஸ்டேக் மூலம் தினசரி சராசரியாக ரூ.120 கோடி டோல் வசூல் கிடைக்கிறது" என்று கூறினார்.