Published:Updated:

``நோ பார்க்கிங்கில் நிற்கும் வாகனம்... போட்டோ எடுத்து அனுப்பினால் ரூ.500 சன்மானம்" - நிதின் கட்கரி

மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

``முன்பெல்லாம், அமெரிக்காவில் வேலைக்குச் செல்லும் பெண்கள், சமையல்காரர்கள், கார்களில் வேலைக்குப் போவதைக் கண்டு நாம் ஆச்சர்யப்பட்டோம். விரைவில் இந்தியாவிலும் அந்த நிலை வரும் எனத் தெரிகிறது." - நிதின் கட்கரி

``நோ பார்க்கிங்கில் நிற்கும் வாகனம்... போட்டோ எடுத்து அனுப்பினால் ரூ.500 சன்மானம்" - நிதின் கட்கரி

``முன்பெல்லாம், அமெரிக்காவில் வேலைக்குச் செல்லும் பெண்கள், சமையல்காரர்கள், கார்களில் வேலைக்குப் போவதைக் கண்டு நாம் ஆச்சர்யப்பட்டோம். விரைவில் இந்தியாவிலும் அந்த நிலை வரும் எனத் தெரிகிறது." - நிதின் கட்கரி

Published:Updated:
மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

மத்திய போக்குவரத்துத்துறை அமைச்சரான நிதின் கட்கரி, நோ பார்க்கிங்கில் நிற்கும் வாகனத்தை போட்டோ எடுத்து அனுப்பும் நபருக்கு ரூ.500 சன்மானமாக அளிக்கும் புதிய திட்டத்தைக் கொண்டுவரப்போவதாகக் கூறியிருக்கிறார்.

டெல்லியில் நேற்று நடைபெற்ற 'தொழில்துறை டீகார்பனைசேஷன் உச்சி மாநாடு 2022 (ஐடிஎஸ்-2022)' என்ற நிகழ்ச்சியின் தொடக்கவிழாவில் மத்திய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி கலந்துகொண்டார். அப்போது மேடையில் பேசிய நிதின் கட்கரி, ``தற்போதைய நாள்களில் ஒவ்வொருவரும் சொந்தமாக கார் வைத்திருப்பது என்பது ஒரு தேவையாகிவிட்டது. முன்பெல்லாம், அமெரிக்காவில் வேலைக்குச் செல்லும் பெண்கள், சமையல்காரர்கள் கார்களில் வேலைக்குப் போவதைக் கண்டு நாம் ஆச்சர்யப்பட்டோம். விரைவில் இந்தியாவிலும் அந்த நிலை வரும் எனத் தெரிகிறது.

பார்க்கிங்
பார்க்கிங்
vikatan

இப்போதெல்லாம் நான்கு பேர்கொண்ட குடும்பம்கூட, ஆறு கார்களை வைத்திருக்கிறது. ஆனால், பார்க்கிங் வசதி குறித்து யோசிப்பதில்லை. அவர்களில் பெரும்பாலானோர் தெருக்களில்தான் தங்களின் கார்களை நிறுத்துகிறார்கள். அந்தவகையில் டெல்லிவாசிகள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள், அவர்கள் தங்களின் வாகனங்களை நிறுத்தத்தான் நாங்கள் சாலைகளைப் போட்டிருக்கிறோம் என நினைக்கிறார்களோ என்று தோன்றுகிறது. எனவே இனி நோ பார்க்கிங்கில் நிற்கும் வண்டியை போட்டோ எடுத்து அனுப்பினால், வண்டியின் உரிமையாளருக்கு ரூ.1,000 அபராதமும், அதை போட்டோ எடுத்து அனுப்பியவருக்கு அந்த அபராதத் தொகையிலிருந்து ரூ.500 சன்மானமாகத் தரலாம் எனப் புதிய திட்டத்தைக் கொண்டுவரவிருக்கிறேன். மேலும், இது பார்க்கிங் பிரச்னையைத் தீர்க்க உதவும்" எனக் கூறி சிரித்தார். மேடையில் இவ்வாறு நிதின் கட்கரி கூறியதும் அங்கிருந்தவர்கள் பலர் நிதின் கட்கரியுடன் சேர்ந்து சிரித்தனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism