Published:Updated:

`கஷ்டமாகத்தான் இருக்கும்; போரடிக்கும்... வேறு வழியில்லை’- மகாராஷ்ட்ரா மக்களுக்கு தாக்கரே வேண்டுகோள்

உத்தவ் தாக்கரே
உத்தவ் தாக்கரே

முன்னாள் அதிகாரிகளின் உதவி மகாராஷ்ட்ராவுக்குத் தேவைப்படுகிறது. செவிலியர்கள், வார்டுகளில் பணியாற்றியவர்கள் அரசுக்கு உதவி செய்ய முன் வர வேண்டும் என உத்தவ் தாக்கரே வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கொரோனா வைரஸ் லாக் டவுன் உங்களுக்கு மிகவும் சிரமமாக இருக்கும் எனத் தெரியும். ஆனால், கொரோனாவை வெல்ல நமக்கு வேறு வழியில்லை மக்கள் வீட்டில்தான் இருக்க வேண்டும் என மகாராஷ்ட்ரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே கூறியுள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் 5,194 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மகாராஷ்ட்ரா மாநிலத்தில் மட்டும் 1,000-க்கும் அதிகமானவர்கள் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு மட்டும் 64 மரணங்கள் நிகழ்ந்துள்ளன.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

மாநிலத்தில் கொரோனா நோய்த் தொற்றைத் தடுப்பதற்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தனியாக மருத்துவமனைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. காய்ச்சல் அறிகுறிகள் உள்ளவர்கள் பொது மருத்துவமனைகளுக்குச் செல்லாமல் தனியாக ஏற்படுத்தப்பட்டுள்ள மருத்துவமனைகளுக்குச் சென்று சிகிச்சை எடுத்துக்கொள்ளுங்கள் என மாநில அரசின் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா வைரஸுக்கு எதிராகப் போராட்டத்தில் ஒத்துழைக்குமாறு ஓய்வு பெற்ற அதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

`ஊரடங்கை உடனடியாகத் திரும்பப் பெறும் முடிவு இல்லை?’ - அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் மோடி

காணொலிக்காட்சி மூலம் மாநில மக்களிடம் பேசிய உத்தவ் தாக்கரே `வீட்டில் அடைந்து இருப்பதால் மக்களுக்கு பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன. வீட்டிலே இருப்பதால் உங்களுக்கு சலிப்பு ஏற்படும். மன்னித்துவிடுங்கள் எங்களுக்கு வேறுவழியில்லை. கொரோனாவை வெல்ல வேண்டுமென்றால் வீட்டிலிருந்துதான் ஆக வேண்டும். மாநிலம் முழுவதும் காய்ச்சலுக்கான மருத்துவமனைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

உத்தவ் தாக்கரே
உத்தவ் தாக்கரே

உங்களுக்கு காய்ச்சல் அறிகுறி தென்பட்டால் வழக்கமாகச் செல்லும் மருத்துவமனைகளுக்குச் செல்வதைத் தவிர்த்துவிடுங்கள். காய்ச்சலுக்காக அரசாங்கத்தால் ஏற்படுத்தப்பட்டுள்ள மருத்துவமனைகளுக்குச் செல்லுங்கள். பல்வேறு வசதிகள் அங்கு ஏற்படுத்தப்பட்டுள்ளன. வைரஸ் பரவாமல் இருப்பதற்காகத்தான் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

`எதிர்காலத்திலும் ஹைட்ராக்சிக்குளோரோயின் தட்டுப்பாடு இருக்காது!' - மத்திய அரசு விளக்கம்

முன்னாள் அதிகாரிகளின் உதவி மகாராஷ்ட்ராவுக்கு தேவைப்படுகிறது. செவிலியர்கள் மற்றும் வார்டுகளில் பணியாற்றியவர்கள் அரசுக்கு உதவி செய்ய முன் வர வேண்டும். நாளுக்கு நாள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதேவேளையில் அதிகப்படியான மாதிரிகள் சோதனை செய்யப்படுகின்றன. வீடு வீடாகச் சென்று சோதனை மேற்கொள்ளப்படுகிறது. மும்பையில் நிலைமை சற்று மோசமடைந்து வருகிறது. மும்பை மற்றும் புனேவில் சோதனைகளை அதிகப்படுத்தியுள்ளோம். தரமான பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் வென்டிலேட்டர்களை வாங்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

உத்தவ் தாக்கரே
உத்தவ் தாக்கரே

மக்கள் வீட்டிலே அடைந்து இருப்பதால் சலிப்பாக இருக்கும். நீங்கள் உண்ணும் உணவுகளில் எந்தக் கட்டுப்பாடும் விதிக்கப்போவதில்லை. ஆனால், என்ன உணவை உட்கொள்கிறோம் என்பதை அறிந்து உண்ணுங்கள். வீட்டிலே இருங்கள், ஆரோக்கியமாக இருங்கள். கொரோனாவுக்கு எதிரான போரில் வெற்றி பெற வேண்டும். அத்தியாவசிய பொருள்கள் வாங்குவதற்கு வெளியே வரும்போது கட்டாயம் மாஸ்க் அணிந்து வெளியே வாருங்கள். உங்களுடைய பாதுகாப்புக்காகத்தான் இதைக் கூறுகிறோம். நீங்கள் எங்களுக்கு ஒத்துழைப்பு தாருங்கள்’ எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு