Published:Updated:

Explainer: ஏன் போராடுகிறார்கள் பயிற்சி மருத்துவர்கள்?

Doctors Protest
News
Doctors Protest ( Manish Swarup | AP Photo )

முதல் காரணம், கொரோனா. இரண்டாவது காரணம், அரசு இந்த ஆண்டு முதுகலை நீட் கவுன்சிலிங்கில் அமல்படுத்த நினைத்த முன்னேறிய பிரிவினருக்கான 10% இடஒதுக்கீடு (EWS).

Note: The Subject Line நியூஸ்லெட்டரின் Explainer கட்டுரை இது. இதேபோல தினசரி நிகழ்வுகளை எளிமையாக, விரிவாகப் புரிந்துகொள்ள கீழே உங்கள் மெயில் ஐடி-யைக் கொடுத்து சப்ஸ்கிரைப் செய்யுங்கள். தினமும் காலை 7 மணிக்கு அன்றைய முக்கியமான அப்டேட்கள் உங்கள் இன்பாக்ஸிற்கே வந்துசேரும்!

டெல்லியில் பல்வேறு அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் சுமார் 5,000 முதல் 6,000 பயிற்சி மருத்துவர்கள் கடந்த இரண்டு நாள்களாக சாலைகளில் இறங்கி வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதற்கு முன்பு 10 நாள்களுக்கும் மேலாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் முன்பு போராட்டம் நடத்தி வந்தனர். இதில் நேற்று முன்தினம் நடந்த போராட்டத்தின் மீது, டெல்லி காவல்துறையினர் மருத்துவர்களிடம் மிக மோசமாக நடந்துகொள்ளவும், போராட்டம் இன்னும் தீவிரமாகியிருக்கிறது. அங்குள்ள பல அரசு மருத்துவமனைகளில் வழக்கமான சிகிச்சைகள் பாதிக்கப்பட்டிருக்கின்றன. 

  • இதையடுத்து, நேற்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, மருத்துவர்களை போராட்டத்தைக் கைவிடுமாறு கேட்டுக்கொண்டிருக்கிறார். காவல்துறையினர் சார்பில் மன்னிப்பு கேட்கப்படும் எனவும் தெரிவித்திருக்கிறார். ஆனாலும், போராட்டம் முடியவில்லை.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ஏன் போராடுகிறார்கள் பயிற்சி மருத்துவர்கள்?

Doctors Protest
Doctors Protest
Manish Swarup | AP Photo
  • அரசு மருத்துவமனையின் சிகிச்சைப் பிரிவுகளில் முதுகலை மருத்துவ மாணவர்கள் பயிற்சி மருத்துவர்களாக பணியாற்றுவது வழக்கம். முதலாமாண்டு, இரண்டாமாண்டு, மூன்றாமாண்டு என 3 பேட்ச் மருத்துவர்களும் பணியாற்றும் இடத்தில், கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக 2 பேட்ச் மருத்துவர்கள் மட்டுமே பணியாற்றி வந்தார்கள். காரணம், இந்த ஆண்டுக்கான நீட் கவுன்சிலிங் நடத்தப்படவில்லை; எனவே புதிய மாணவர்களும் வரவில்லை. இது தற்போது பணியிலிருக்கும் மாணவர்களுக்கு கூடுதல் பணிச்சுமையானது. 

  • இந்நிலையில், இப்போது இதில் மூன்றாமாண்டு மாணவர்களும் தேர்வுகள் காரணமாக பணியிலிருந்து விலகிவருகின்றனர். இதையடுத்து, 3 பேட்ச் பார்த்த வேலைகளை, ஒரே ஒரு பேட்ச் பயிற்சி மருத்துவர்கள் மட்டுமே பார்க்க நேரிடுகிறது. இதனால், ஒவ்வொருவரும் சுமார் 36 மணி நேரத்திற்கும் மேல், ஒரேடியாக பணி செய்ய நேரிடுவதாகவும், கடந்த இரண்டு வருடங்களாக விடுமுறையே இல்லாமல் பணியாற்றும் தங்களுக்கு இது அதிக மன அழுத்தத்தைக் தருவதாகவும் குமுறுகின்றனர் பயிற்சி மருத்துவர்கள்.

ஏன் மாணவர் சேர்க்கை நடைபெறவில்லை?

முதல் காரணம், கொரோனா. இரண்டாவது காரணம், அரசு இந்த ஆண்டு முதுகலை நீட் கவுன்சிலிங்கில் அமல்படுத்த நினைத்த முன்னேறிய பிரிவினருக்கான 10% இடஒதுக்கீடு (EWS).

  • வழக்கமாக ஆண்டுதோறும் ஜனவரி மாதம் நீட் தேர்வு நடந்து, மார்ச் மாதம் கவுன்சிலிங் முடிந்து, மே / ஜூன் மாதங்களில் புதிய மாணவர்கள் வந்துவிடுவார்கள். ஆனால், இந்த ஆண்டு கொரோனா காரணமாக, நீட் தேர்வு தள்ளிப்போனது. அதன் முடிவுகள் செப்டம்பரில் முடிவுகள் வந்தது. அதற்கடுத்து அக்டோபர் அல்லது நவம்பரில் கவுன்சிலிங் நடைபெற இருந்த நிலையில்தான், அரசின் 10% EWS இடஒதுக்கீடு முடிவு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. 

  • முன்னேறிய பிரிவினரில் ஆண்டு வருமானம் 8 லட்சத்திற்கும் கீழ் உள்ளவர்கள் (பொதுப்பிரிவில் இடம்பெற்றிருப்பவர்கள் மட்டும்) இந்த 10% இடஒதுக்கீட்டில் பயன்பெறத் தகுதியுடையவர்கள் ஆவர். இந்த 8 லட்சம் ரூபாய் என்ற வரம்பை அரசு எப்படி நிர்ணயித்தது எனக் கேள்வி எழுப்பியது உச்சநீதிமன்றம். எனவே இதுதொடர்பாக, 3 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் கேட்டது அரசு.

  • இப்படி ஏற்கெனவே 6 மாதங்கள் நடக்காத மாணவர் சேர்க்கை, மத்திய அரசின் தாமதத்தால் இன்னும் தள்ளிப்போவதால், விரக்தியடைந்தனர் பயிற்சி மருத்துவர்கள். இதனால், கடந்த நவம்பர் மாதம் 27-ம் தேதியே டெல்லியில் சுகாதாரத்துறை அமைச்சகம் முன்பு போராட்டம் நடத்தினர்.

  • அப்போது, அவர்களை சந்தித்துப் பேசிய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர், விரைவில் அரசு சார்பில் 10% EWS இடஒதுக்கீடு குறித்து உச்சநீதிமன்றத்தில் 3 நாள்களில் அறிக்கை தாக்கல் செய்வதாகவும், அதையடுத்து கவுன்சிலிங்கிற்கான பணிகள் தொடங்கப்படும் எனவும் வாக்குறுதியளித்திருக்கிறார். 

  • ஆனால், அரசு அப்படியே பல்டி அடித்து, அறிக்கை தாக்கல் செய்ய 3 வாரம் அவகாசம் அளித்து, ஒரு குழு அமைத்தது. இதையடுத்து டிசம்பர் 6 முதல் மீண்டும் டெல்லியில் போராட்டங்களைத் தொடங்கினர் மருத்துவர்கள். அதுவரை அமைதியாக நடந்துவந்த போராட்டம், நேற்று முன்தினம் மருத்துவர்கள் உச்சநீதிமன்றத்தை நோக்கி பேரணி செல்லத் தொடங்கியபோதுதான், காவல்துறையினரின் நடவடிக்கைகளால் கொதிநிலையைத் தொட்டது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

சுமார் 42,000 மாணவர்கள் நாடு முழுவதும் நீட்டில் தேர்ச்சி பெற்று, தயாராக இருக்கின்றனர். அவர்களை உடனே கவுன்சிலிங் நடத்தி பணியில் சேர்க்கவேண்டும். இல்லையெனில், கொரோனா 3-ம் அலை வரும் என எதிர்பார்க்கப்படும் இந்த சூழலில், நிச்சயம் மருத்துவமனைகள் தாங்காது என்பது பயிற்சி மருத்துவர்களின் குரல்.

ஆனால், விவகாரம் உச்சநீதிமன்றத்தின் முன் இருப்பதால், இப்போதைக்கு எதுவும் செய்யமுடியாது. ஜனவரி 6-ம் தேதி நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தபின்தான், அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடங்கும் என்கிறது மத்திய அரசு.

நேற்றிலிருந்து டெல்லியின் கொரோனா வார்டுகளில் பணியாற்றும் மருத்துவர்களும், போராட்டத்தில் இணைந்திருக்கின்றனர். எனவே அரசு மிகுந்த இக்கட்டான சூழ்நிலையில் நின்றுகொண்டிருக்கிறது.

1. உச்சநீதிமன்றத்தில் உடனடியாக EWS பற்றி அறிக்கை தாக்கல் செய்து, அதற்கு உச்சநீதிமன்றத்தின் அனுமதியைப் பெறுவது அல்லது

2. இந்த ஆண்டு 10% EWS இடஒதுக்கீட்டை அமல்படுத்தாமல் உடனடியாக கவுன்சிலிங்கை மட்டும் நடத்துவது.

இந்த இரண்டும்தான் அரசின் முன் இருக்கும் தீர்வுகள். இவற்றில் எதை தேர்ந்தெடுக்கப்போகிறது என்பதை அரசுதான் உடனடியாக சொல்லவேண்டும்.

Note: The Subject Line நியூஸ்லெட்டரின் Exclusive Explainer கட்டுரை இது. இதேபோல தினசரி நிகழ்வுகளை எளிமையாக, விரிவாகப் புரிந்துகொள்ள கீழே உங்கள் மெயில் ஐடி-யைக் கொடுத்து சப்ஸ்கிரைப் செய்யுங்கள். தினமும் காலை 7 மணிக்கு அன்றைய முக்கியமான அப்டேட்கள் உங்கள் இன்பாக்ஸுக்கே வந்துசேரும்!