Published:Updated:

`இளைஞரை அறைந்த எஸ்.ஐ; கட்டிப்புரண்டு சண்டை; 4 பிரிவுகளின் கீழ் கைதான இளைஞர்!' - நடந்தது என்ன?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
சப் இன்ஸ்பெக்டரும், இளைஞரும் தாக்கிக்கொள்ளும் காட்சி.
சப் இன்ஸ்பெக்டரும், இளைஞரும் தாக்கிக்கொள்ளும் காட்சி.

ஆபாசமாகப் பேசுதல், கையால் தாக்குதல், அரசுப் பணியைத் தடுத்தல், கொலை மிரட்டல் விடுத்தல் ஆகிய நான்கு பிரிவுகளின்கீழ் இளைஞர் மணிகண்டன் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகேயுள்ள பகுதியில், ஆலங்காயம் காவல் நிலைய சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் உமாபதி இன்று காலை வாகன தணிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக ஓர் இளைஞர் பைக்கில் வந்திருக்கிறார். அவரை எஸ்.ஐ உமாபதி நிறுத்த முயன்றிருக்கிறார். ஆனால், இளைஞரோ பைக்கை நிறுத்தாமல் வேகமாகச் செல்ல முயன்று, எஸ்.ஐ கையில் வைத்திருந்த செல்போனை தட்டிவிட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், கோபமடைந்த எஸ்.ஐ உமாபதி, அந்த இளைஞரை பஜார் பகுதியில் மடக்கிப் பிடித்து, ஆபாசமாகத் திட்டியதுடன் கன்னத்திலும் 'பளார்' என அறைவிட்டிருக்கிறார். பொது இடத்தில் தன்னை அறைந்ததை அவமானகரமாக உணர்ந்த இளைஞர், பதிலுக்கு எஸ்.ஐ உமாபதியை அறைந்திருக்கிறார்.

சப் இன்ஸ்பெக்டரும், இளைஞரும் தாக்கிக்கொள்ளும் காட்சி.
சப் இன்ஸ்பெக்டரும், இளைஞரும் தாக்கிக்கொள்ளும் காட்சி.

பின்னர், எஸ்.ஐ உமாபதியும் இளைஞரும் மாறி மாறி தாக்கிக்கொண்டனர். ஒருகட்டத்தில், இளைஞரைத் தாக்கிக் கீழே தள்ளிய எஸ்.ஐ உமாபதி, அருகிலிருந்த ஒரு நபரை அழைத்து வீடியோ எடுக்கும்படி கூறினார். அப்போது அவரின் சட்டையை இழுத்துப் பிடித்தபடி இளைஞர் மேலே எழ முயன்றார். பஜார் பகுதி என்பதால் கூட்டம் கூடியது. போலீஸ்காரரும் இளைஞரும் அடித்துக்கொள்வதைப் பொதுமக்கள் தங்களது செல்போன்களில் படமாகவும், வீடியோவாகவும் பதிவு செய்து, சமூக வலைதளங்கில் பகிர்ந்தார்கள். இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகின்றன.

Vikatan

இந்த நிலையில், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த கூடுதல் போலீஸார், அந்த இளைஞரைப் பிடித்து காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். விசாரணையில், ஆலங்காயம் அருகிலிருக்கும் காவலூர் கிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் (25) என்பது தெரியவந்தது. பெங்களூரில் வேலைச செய்துவந்த மணிகண்டன், தீபாவளி பண்டிகையைக் கொண்டாடுவதற்காக ஊருக்கு வந்திருக்கிறார். இன்று காலை பைக்கில், ஆலங்காயம் பகுதிக்கு வந்து வீட்டுக்குத் தேவையான பொருள்களை வாங்கியிருக்கிறார்.

கைதுசெய்யப்பட்ட மணிகண்டன்
கைதுசெய்யப்பட்ட மணிகண்டன்

வீடு திரும்பியபோதுதான் எஸ்.ஐ உமாபதியுடன் அவருக்குத் தகராறு ஏற்பட்டது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, ஆபாசமாகப் பேசுதல், கையால் தாக்குதல், அரசுப் பணியைத் தடுத்தல், கொலை மிரட்டல் விடுத்தல் ஆகிய நான்கு பிரிவுகளின்கீழ் மணிகண்டன் மீது வழக்கு பதிவு செய்த போலீஸார், அவரைக் கைதுசெய்து விசாரணை நடத்திவருகிறார்கள். அதேசமயம், முதலில் கைநீட்டி கன்னத்தில் அறைந்தது எஸ்.ஐ உமாபதிதான் என்பதால் இளைஞருக்கு ஆதரவாகவும், காவல்துறையினருக்கு எதிராகவும் கண்டனக் குரல்களும் ஒலிக்கத் தொடங்கியிருக்கின்றன.

இதற்கிடையே, பொது இடத்தில் இளைஞரைத் தாக்கியது தொடர்பாகச் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் உமாபதி மீதும் துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படவிருப்பதாக, காவல்துறை உயரதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு