Published:Updated:

குடியரசு தின அணிவகுப்பு: பரேட் முதல், நிகழ்ச்சி வரை அனைத்திலும் பெண்கள் - மத்திய அரசு அறிவிப்பு!

குடியரசு தின விழா ஒத்திகை
News
குடியரசு தின விழா ஒத்திகை

அடுத்த ஆண்டு குடியரசு தின விழாவில் அனைத்து நிகழ்ச்சிகளிலும் பெண்கள் மட்டுமே கலந்துகொள்ள முடிவெடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published:Updated:

குடியரசு தின அணிவகுப்பு: பரேட் முதல், நிகழ்ச்சி வரை அனைத்திலும் பெண்கள் - மத்திய அரசு அறிவிப்பு!

அடுத்த ஆண்டு குடியரசு தின விழாவில் அனைத்து நிகழ்ச்சிகளிலும் பெண்கள் மட்டுமே கலந்துகொள்ள முடிவெடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடியரசு தின விழா ஒத்திகை
News
குடியரசு தின விழா ஒத்திகை

ஆண்டுதோறும் ஜனவரி 26 குடியரசு தினத்தன்று புதுடில்லியில் உள்ள ராஜ்பாத் என்று அழைக்கப்படும் கர்தவ்யா பாதையில் பிரமாண்ட அணிவகுப்பு நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம். குடியரசு தின அணிவகுப்பு, இந்தியாவின் ராணுவ வலிமை, கலாசார பன்முகத்தன்மை மற்றும் சாதனைகளை வெளிப்படுத்தும் வகையில் அது இருக்கும். இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானோர் நேரில் கலந்து கொண்டும் லட்சக்கணக்கானோர் இதை தொலைக்காட்சிகளில் பார்த்தும் வருகின்றனர். இது, நாட்டின் சுதந்திரப் போராட்ட வீரர்களை கௌரவிக்கிறது.

குடியரசு தின விழா
குடியரசு தின விழா

சமீபத்திய ஆண்டுகளில் இந்த அணிவகுப்பில் ஆயுதப்படைகள் மற்றும் பிற துறைகளில் உள்ள பெண்களின் பிரதிநிதித்துவம் மற்றும் தலைமைத்துவத்திற்கான முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. பாதுகாப்புப் படைகளும், துணை ராணுவப் பிரிவுகளும் பெண்களை கன்டன்ஜென்ட் கமாண்டர்களாகவும், துணைத் தளபதிகளாகவும் தேர்வு செய்து வருகின்றன.

இந்நிலையில், 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள குடியரசு தின அணிவகுப்பு விழாவில், அணிவகுப்பு முதல் இசைக்குழுக்கள், நிகழ்ச்சிகள் வரை அனைத்திலும் பெண்கள் மட்டுமே பங்கேற்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ராணுவம் மற்றும் பிற துறைகளில் பெண் பிரதிநித்துவம் மற்றும் அதிகாரமளித்தலை மேம்படுத்துவதற்கான ஒரு பெரிய முயற்சியின் ஒரு பகுதியாக இந்த முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆயுதப்படைகள் மற்றும் அரசு துறைகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டு அதைச் செயல்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

டெல்லி குடியரசு தின விழா
டெல்லி குடியரசு தின விழா

2015-ம் ஆண்டில், முதன்முறையாக, மூன்று சேவைகளில் இருந்தும் அனைத்துப் பெண்களும் அணிவகுப்பில் அணிவகுத்துச் சென்றனர். 2019-ம் ஆண்டில், கேப்டன் ஷிகா சுரபி ராணுவத்தின் டேர்டெவில்ஸ் அணியின் ஒரு பகுதியாக பைக் ஸ்டண்ட் செய்த முதல் பெண் அதிகாரி ஆனார். அடுத்த ஆண்டு, கேப்டன் டானியா ஷெர்கில் அனைத்து ஆண்கள் குழுவிற்கு தலைமை தாங்கும் முதல் பெண் அதிகாரி ஆனார். 2021-ம் ஆண்டில், ஃப்ளைட் லெஃப்டினன்ட் பாவனா காந்த் அணிவகுப்பில் பங்கேற்ற முதல் பெண் போர் விமானி ஆனார்.