Published:Updated:

நீலகிரி: குப்பைகளை உடனுக்குடன் அகற்ற பேட்டரி ஆட்டோக்கள்; பேரூராட்சிகளில் முதன்முறையாக அறிமுகம்!

பேட்டரி ஆட்டோ
News
பேட்டரி ஆட்டோ

குப்பைகளைச் சேகரிப்பதில் மேலும் தீவிரம்காட்டி, எளிமைப்படுத்தும் வகையில் பேரூராட்சிகளில் பேட்டரியில் இயங்கும் ஆட்டோக்களை முதன்முறையாக அறிமுகம் செய்து அசத்தியிருக்கிறது மாவட்ட நிர்வாகம்.

Published:Updated:

நீலகிரி: குப்பைகளை உடனுக்குடன் அகற்ற பேட்டரி ஆட்டோக்கள்; பேரூராட்சிகளில் முதன்முறையாக அறிமுகம்!

குப்பைகளைச் சேகரிப்பதில் மேலும் தீவிரம்காட்டி, எளிமைப்படுத்தும் வகையில் பேரூராட்சிகளில் பேட்டரியில் இயங்கும் ஆட்டோக்களை முதன்முறையாக அறிமுகம் செய்து அசத்தியிருக்கிறது மாவட்ட நிர்வாகம்.

பேட்டரி ஆட்டோ
News
பேட்டரி ஆட்டோ

சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த நீலகிரியில் கழிவு மேலாண்மை சவால் நிறைந்த பணியாக இருந்துவருகிறது. திறந்தவெளிகளில் கொட்டப்படும் உணவுக்கழிவுகளால் வனவிலங்குகள் ஈர்க்கப்பட்டு கடுமையான பாதிப்புக்குள்ளாகி வருகின்றன. பிளாஸ்டிக் கழிவுகளாலும் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிப்படைகிறது. இதனால், கழிவு மேலாண்மையில் மாவட்ட நிர்வாகம் தீவிரம் காட்டிவருகிறது. உள்ளாட்சி அமைப்புகள் மூலம் வள மீட்பு பூங்காக்களை உருவாக்கி, மக்கும் குப்பைகளிலிருந்து இயற்கை உரங்களைத் தயாரித்து விற்பனை செய்துவருகின்றனர். மேலும் மக்காத குப்பைகளை உருக்கி தார்க் கலவைக்குப் பயன்படுத்திவருகின்றனர்.

பேட்டரி ஆட்டோ
பேட்டரி ஆட்டோ

குப்பைகளைச் சேகரிப்பதில் மேலும் தீவிரம்காட்டி, எளிமைப்படுத்தும் வகையில் பேரூராட்சிகளில் பேட்டரியில் இயங்கும் ஆட்டோக்களை முதன்முறையாக அறிமுகம் செய்து அசத்தியிருக்கிறது மாவட்ட நிர்வாகம். முதற்கட்டமாக ஒன்பது ஆட்டோக்களை அறிமுகம் செய்திருக்கின்றனர்.

இது குறித்து தெரிவித்த அதிகாரிகள், ``மலைப்பிரதேசம் என்பதால் பெரும்பாலான பகுதிகளில் சாலைகள் குறுகலாக இருக்கின்றன. சேகரிக்கும் குப்பைகளை லாரிகளில் ஏற்றுவதற்காக நீண்ட தொலைவுக்கு தூய்மைப் பணியாளரகள் சுமக்க வேண்டியிருக்கிறது. எனவே, குறுகலான சாலைகள் மற்றும் நடைபாதைகளில் பயணத்துக் குப்பைகளைச் சேகரிக்க ஆட்டோக்களை வாங்க முடிவுசெய்தோம்.

பேட்டரி ஆட்டோக்கள்
பேட்டரி ஆட்டோக்கள்

சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில் இயங்கும் பேட்டரி ஆட்டோக்களை வாங்கியிருக்கிறோம். திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின்கீழ் முதற்கட்டமாக பேரூராட்சிகளுக்கு ஒன்பது பேட்டரி ஆட்டோக்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. குப்பைகளைச் சேகரித்து, உடனுக்குடன் லாரிகளில் ஏற்றி வளம் மீட்பு பூங்காவுக்குக் கொண்டு செல்ல முடியும். தூய்மைப் பணியாளர்களின் பணி எளிதாவதுடன், குப்பைகளையும் உடனுக்குடன் அகற்ற உதவியாக இருக்கும்" என்றனர்.