ஆசிரியர் பக்கம்
லைஃப்ஸ்டைல்
தன்னம்பிக்கை
தொடர்கள்
Published:Updated:

2k kids: நாங்க சோஷியல் மீடியால இல்ல... நம்பலைன்னாலும் அதுதான் நெசம்!

சோஷியல் மீடியா
பிரீமியம் ஸ்டோரி
News
சோஷியல் மீடியா

க.சுதர்சன்

டீன் வயது ஆரம்பிச்சதுமே, ‘அம்மா ப்ளீஸ் ம்மா...’னு கொஞ்சிக் கெஞ்சி சோஷியல் மீடியால அக்கவுன்ட் ஆரம்பிச்சிடுறாங்க பெரும்பாலான பள்ளி மாணவர்கள். ‘`ஆனா சமூக வலைதளங்கள்ல அக்கவுன்ட் இல்லாத கல்லூரி மாணவர்களும் இதே உலகத்துல உங்களோடதான் வாழ்ந்துட்டு இருக்கோம்’’னு சிரிக்குற அருண்குமாரும், ரேவதியும் அதுகுறித்து என்ன சொல்றாங்கனு பார்ப்போம்..!

வேலை இருக்கு பாஸ்!

சென்னையை அடுத்த கோவளத்தைச் சேர்ந்த அருண் குமார் மூன்றாம் ஆண்டு கல்லூரி மாணவர்... ‘`அம்மா கடை வெச்சிருக்காங்க. நானும் கடை வேலைகளைப் பார்த்துக்குவேன் என்பதால, எப்பவும் பிஸியா இருப்பேன். ஓய்வு நேரங்கள்லயும், விடுமுறை நாள்கள்லயும் பொழுதுபோக்குக்கு டிவி, மொபைல் கேம்ஸ் போதும் எனக்கு. சமூக வலைதளம் வேண்டாம். ‘டேய் உலகமே அங்கதான்டா இருக்கு’னு ஃபிரெண்ட்ஸ் சொல்லுவாங்க. ஆர்யன் கான் வழக்குல இருந்து ‘அண்ணாத்த’ டிரெய்லர் வரைக்கும் அங்கதான் சுடச்சுடச் செய்திகளைத் தெரிஞ்சுக்கலாம்னு என்னை உசுப்பேத்துவாங்க. ‘சரி, நான் கொஞ்சம் ஆறின செய்தியையே தெரிஞ்சுக்கி றேனே, என்ன இப்ப?’னு சொல்லிடுவேன்!’’

 அருண்குமார்
அருண்குமார்
 ரேவதி
ரேவதி

உங்க சமூக வலைதள அக்கவுன்ட்ல ப்ரைவஸி பாதுகாப்பு இருக்கா?!

திருச்சியைச் சேர்ந்த ரேவதி, இரண்டாம் ஆண்டு கல்லூரி மாணவி... ‘`என் ஃபிரெண்ட்ஸ் சோஷியல் மீடியாவை, ‘அதுல போனா நேரம் போறதே தெரியமாட்டேங்குது, டைம் எல்லாம் வேஸ்ட்டாயிடுது’னு புலம்பிட்டே பயன்படுத்துறதைப் பார்க்கிறேன். அதனாலேயே நான் அதை அவாய்டு பண்ணிட்டேன். எனக்குத் தேவையான தகவல்களை கூகுள், யூடியூப்னு தேடிக்குவேன். கூடவே, சோஷியல் மீடியால ப்ரைவஸி பாதுகாப்புப் பிரச்னைகள் இருக்குனு தொடர்ந்து நியூஸ் வந்துட்டே இருக்கு. நம்ம டேட்டா விற்கப்படுதுனா, நாம விற்பனைப் பொருள் ஆக்கப்படுறோம்னு அர்த்தம். எனக்கு அந்த ரிஸ்க் வேண்டாம்!”

இன்னொரு முக்கியமான நபரும், சமூக வலை தளத்துல அக்கவுன்ட் இல்லாத தன்னோட அனுப வத்தைச் சொல்ல விரும்புறார். அது நான்தான்!

2k kids: நாங்க சோஷியல் மீடியால இல்ல... நம்பலைன்னாலும் அதுதான் நெசம்!

சோஷியல் மீடியால இல்லைன்னாலே, அவங்க வயசானவங்க, டெக்னாலஜி தெரியாதவங்கனு இங்க முத்திரை குத்திடுறாங்க. நான் காலேஜ் ஸ்டூடன்ட். மொபைல்ல பொழுதுபோக்குக்காக பாட்டுக் கேட்கிறது, ட்யூன் போடுறது, எடிட்டிங் செய்றதுனு எல்லாம் பண்ணுவேன். பட்சே சோஷியல் மீடியா பக்கம் மட்டும் போக மாட்டேன். அங்க நிறைய நண்பர்கள் கிடைப்பாங்கனு சொல்றாங்க. அங்க நிறைய புரொஃபைல்கள் கிடைக்கும்; சில நண்பர் களும் கிடைக்கலாம். எனக்கு நிஜ உலகத்து நண்பர்களே போதும்.

மொத்தத்துல, சமூக வலைதளத்தைப் பயன் படுத்துறதை நாங்க தப்புனு சொல்ல மாட்டோம். ஆனா, அதை பயன்படுத்தாதவங்களை உலகமும் தப்புனு சொல்லக் கூடாது!