Published:Updated:

``அதிமுக-வில் ஒற்றுமையில்லை” - மனம் திறக்கும் ஆனந்தராஜ்!

ஆனந்தராஜ்!
News
ஆனந்தராஜ்!

ஒரே ஒரு முறை சீட் கேட்டேன். புதுவையில் போட்டியிட வாய்ப்பு கொடுத்தார்கள். அதில் நிறைய பாடங்களைக் கற்றுக்கொண்டேன்; கற்றும் கொடுத்தார்கள்.

Published:Updated:

``அதிமுக-வில் ஒற்றுமையில்லை” - மனம் திறக்கும் ஆனந்தராஜ்!

ஒரே ஒரு முறை சீட் கேட்டேன். புதுவையில் போட்டியிட வாய்ப்பு கொடுத்தார்கள். அதில் நிறைய பாடங்களைக் கற்றுக்கொண்டேன்; கற்றும் கொடுத்தார்கள்.

ஆனந்தராஜ்!
News
ஆனந்தராஜ்!

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் அனல் பறக்கத் தொடங்கிவிட்டால், நடிகர் ஆனந்த்ராஜ் அ.தி.மு.க சார்பாகப் பிரசாரத்துக்குக் கிளம்பிவிடுவார். இந்த முறை எங்கே இருக்கிறார் என்பதை லென்ஸ் வைத்து தேடும் அளவுக்கு அவரை அவரே மறைத்துக்கொண்டிருக்கிறார். ``எங்கே சார் இருக்கீங்க...'' என அழைத்தால், ``வீட்டுக்கு வாங்க... விரிவாகப் பேசலாம்' என முடித்துக்கொண்டார். வள்ளுவர் கோட்டம் அருகேயுள்ள அவரது வீட்டுக்குச் சென்று, அவரைச் சந்தித்தோம்.

``கொரோனா மீண்டும் அதிகரிக்கிறது. பாதுகாப்பாக இருங்கள். கொரோனா எனக்கு வந்து போனதா, என எனக்குத் தெரியாது. எந்தக் கெட்ட பழக்கமும் எனக்கு இல்லை. அதேசமயம் முகக்கவசம் அணிந்து பாதுகாப்பாக இருக்கிறேன். எங்கள் வீட்டில் என் மகள், மருமகன் இருவரும் மருத்துவர்கள். முன்களப் பணியாளர்கள். தயவுசெய்து உங்களையும் குடும்பத்தையும் பாதுகாக்கும் பொறுப்பு உங்களுக்கு இருக்கிறது'' என்று சொல்லி முதல் கேள்வியைக் கேட்கச் சொல்கிறார்.

``நீங்கள் அ.தி.மு.க-வில்தான் இருக்கிறீர்களா?"

``உங்களைப் போன்ற பத்திரிக்கையாளர்கள், பொதுமக்கள்போலச் சற்று அமர்ந்திருந்து இந்தத் தேர்தலை வேடிக்கை பார்க்க விரும்புகிறேன். சில சோகமும் சோர்வும் இன்னும் என்னைவிட்டு மறையவில்லை."

``அப்படியானால் இந்தத் தேர்தலில் அ.தி.மு.க சார்பாக பிரசாரத்துக்குச் செல்லவில்லையா?’’

``நான் சினிமாவை வைத்துக்கொண்டு நிம்மதியாக இருக்கிறேன். பிரசாரத்தை ஏன் மீண்டும் ஞாபகப்படுத்துகிறீர்கள்? (சின்ன இடைவெளிக்குப் பின்) ஆனால், அந்த ஏக்கம் இருக்கிறது. அந்த ஏக்கம் சில நேரங்களில் தூக்கத்தைக்கூட கெடுக்கும் விஷயமாக மாறிவிடும். உண்மையைச் சொன்னால், அரசியல் பிரபலங்கள் போகாத, தலைவர்கள் போகாத இடங்களுக்கெல்லாம் சென்று பிரசாரம் செய்திருக்கிறேன். அதற்காகத்தான் என்னை அம்மா பயன்படுத்தினார்கள். இப்போது நான் அண்ணா தி.மு.க தொண்டர்களோடு தொடர்பில் இருக்கிறேன். தலைவர்களோடு இல்லை. அம்மா தலைமை ஏற்று நடத்திய கட்சிக்கும், இன்று தலைமை ஏற்று நடத்துபவர்களுக்கும் வித்தியாசம் அதிகம்."

ஆனந்த்ராஜ்
ஆனந்த்ராஜ்

``என்ன வித்தியாசத்தை நீங்கள் பார்க்கிறீர்கள்?"

``இது என் சொந்தக் கருத்து. இவர்களுக்குள் ஒற்றுமையில்லை. அம்மா இருந்த வரை கட்சியில் ஒருவர் முடிவு எடுத்தால் போதும். இப்போது ஒருவருக்குப் பிடித்தால் போதும் என்ற காலம் மாறி, ஒருவருக்குப் பிடிக்கவில்லை என்றாலும் இனி கட்சியில் இருக்க முடியாது. இந்த நிலைமை இனி மாறுவது கடினம் என்று நினைக்கிறேன்."

``ஜெயலலிதாவிடம் சீட் கேட்டு இருக்கிறீர்களா?"

``ஒரே ஒரு முறை சீட் கேட்டேன். புதுவையில் கொடுத்தார்கள். அதில் நிறைய பாடங்களைக் கற்றுக்கொண்டேன்; கற்றும் கொடுத்தார்கள். அதன் பிறகு, அவர்களாகவே கூப்பிட்டுக் கொடுத்தால் தவிர நானே கேட்கக் கூடாது என்று முடிவு செய்தேன். விருப்பம் இல்லாமல் இல்லை. அது என்னைத் தேடி வர வேண்டும் என்று நினைக்கிறேன்."

``இந்தக் காலத்தில் நாமே கேட்காமல் நம்மைத் தேடி பதவிகள் வருமா என்ன?"

``நிச்சயம் வரும் சார். நேர்மையாக, உண்மையாக இருந்தால் நிச்சயம் பதவிகள், பட்டங்கள் தேடிவரும்."

``இனி அ.தி.மு.க-வில் பதவிகள் தேடி வருமா என்ன?"

"ஹா ஹா... அ.தி.மு.க-வில் இனி அது கஷ்டம்தான். நாட்டுக்குச் சுதந்திரம் வாங்கிக் கொடுத்தவர்களையே எல்லாருக்கும் பிடிக்குமா என்று கேட்டால் இல்லை என்பதுதான் பதில். என்னைக் கட்சிக்குள் எத்தனை பேருக்கு பிடிக்குமோ, பிடிக்காதோ..."

``எப்போதும் இல்லாத அளவுக்கு இந்தத் தேர்தலில் திரைத்துறையினர் போட்டி போடுகிறார்கள். அவர்களுக்கு நீங்கள் சொல்வது என்ன?"

``வாழ்த்துகள்தான் சொல்ல முடியும். மக்கள் ஆதரவு இருந்தால் வெற்றி பெறட்டும். அவ்வளவுதான்."

``மாநிலங்களவை எம்.பி-யாக இருக்கும் வைத்திலிங்கத்துக்கும், கே.பி.முனுசாமிக்கும் இந்தத் தேர்தலில் போட்டியிட சீட் கொடுத்ததை எப்படிப் பார்க்கிறீர்கள்?"

``ஜெயலலிதா உங்கள் பிராசாரத்தைக் கேட்டு என்ன சொல்லயிருக்கிறார்?"

``உங்கள் முதல் பிரசாரம் எது?"

``மறக்க முடியாத தேர்தல் பிரசாரம் எது?"

``கட்சிகள் இப்போது டிஜிட்டல் பிரசாரங்களை முன்னெடுக்கிறார்கள். அது எடுபடுமா?"

``வாக்குறுதிகளை அள்ளி வீசுகிறார்கள்... அதை நிறைவேற்றவில்லை என்றால் என்ன செய்வது?" போன்ற பல கேள்விகளுக்கும் விரிவாக பதில் சொல்லியிருக்கிறார் ஆனந்தராஜ். அதை முழுமையாக கீழேயுள்ள வீடியோவில் பாருங்கள்...