Published:Updated:

தமிழக அரசின் ஊழியர்களுக்குப் பழைய பென்ஷன் கிடைக்குமா?

பென்ஷன்
பிரீமியம் ஸ்டோரி
News
பென்ஷன்

பென்ஷன்

தமிழக அரசின் ஊழியர்களுக்குப் பழைய பென்ஷன் கிடைக்குமா?

பென்ஷன்

Published:Updated:
பென்ஷன்
பிரீமியம் ஸ்டோரி
News
பென்ஷன்

தமிழக அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய பென்ஷனை நடைமுறைக்குக் கொண்டு வருவதற்கான சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்ய ‘உயர்மட்டக் குழு’ அமைக்கப்பட்ட நாள் முதல் சி.பி.எஸ் (CPS) சந்தாதாரர்களாக உள்ள தமிழக அரசு ஊழியர் கள் பழைய பென்ஷனுக்கான அறிவிப்புக்காகக் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.

இந்த எதிர்பார்ப்பு தற்போது அதிகமாகக் காரணம், சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல்கள், யூகங்கள்தான். இது பற்றிக் கொஞ்சம் விளக்கமாகவே பார்ப்போம்.

ப.முகைதீன் சேக் தாவூது
ப.முகைதீன் சேக் தாவூது

மூன்று விதமான ஓய்வூதியங்கள்...

1. நிர்ணயிக்கப்பட்ட நன்மைதரும் ஓய்வூதியம் (Defined Benefit Pension): இதைத்தான் பழைய பென்ஷன் திட்டம் என்று குறிப்பிடுகிறார்கள். 31.3.2003-க்கு முன்னதாக தமிழக அரசுப் பணியில் சேர்ந்த வர்கள் இதன்கீழ் ஓய்வூதியப் பலன் பெறுவர்.

2. நிர்ணயிக்கப்பட்ட பங்களிப்பு ஓய்வூதியம் (Contributory Pension Scheme): தமிழக அரசுப் பணியில் 1.4.2003-க்குப் பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்கானது இந்த ‘பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம்!’

3. தேசிய ஓய்வூதியத் திட்டம் (National Pension System): 1.1.2004-க்குப் பிறகு பணியில் இணைந்த அகில இந்தியப் பணியாளர்களுக்கு இந்தத் திட்டத்தின்படியே ஓய்வுக்காலப் பயன்கள் கிடைக்கும்.

பழைய பென்ஷன் திட்டம் வந்தால் என்ன நன்மை..?

10 ஆண்டுகள் பணி நிறைவு செய்யும் முன்பே ஓய்வு வயது வந்துவிட்டால், அவர்கள் பணியில் இருந்து ஓய்வு பெறுவர். அவர்களுக்கு ஓய்வூதியம் கிடையாது. ஆனால், பணிக்கால பணிக்கொடையுடன் (Service Gratuity ) ஓய்வுக் கான பணிக்கொடையும் (Retirement Gratuity) கிடைக்கும்.

பணிக்கால பணிக்கொடை என்பது ஊழியர் ஓய்வு பெறும்போது வாங்கிய அடிப் படைச் சம்பளம் + அகவிலைப்படிக்கு சம்பளம் கணக்கிடப்படும். அதாவது, பணி நிறைவு செய்துள்ள ஒவ்வோர் ஆறு மாதத்துக்கும் அரை மாதச் சம்பளம் கிடைக்கும். இத்துடன் தரப்படும் ஓய்வுக்கான பணிக் கொடை என்பது ஒவ்வோர் ஆறு மாதப் பணிக்கும் கால் மாத சம்பளம் என்ற அடிப் படையில் கணக்கிடப்படும்.

10 வருடங்களுக்குக் குறையாமல் பணி நிறைவு செய்து ஓய்வு பெற்றுவிட்டால் ஓய்வூதியப் பலன் உண்டு. அதாவது, அவ்வாறு ஓய்வு பெறும் ஊழியரின் கடைசி சம்பளத்தில் (அல்லது சராசரி சம்பளத்தில்) பணிக்காலத்துக்கு ஏற்ப ஓய்வூதியம், ஓய்வுக்காலப் பணிக்கொடை மற்றும் பென்ஷன் கம்யூடேசன் ஆகியவை கிடைக்கும்.

20 வருடப் பணி நிறைவு செய்தவர் விரும்பினால், விருப்ப ஓய்வு பெறலாம். அதிகபட்சம் 5 வருட வெயிட்டேஜ் (Weightage) சேர்த்து ஓய்வூதியம், பணிக்கொடை, பென்ஷன் கம்யூடேசன் பெறலாம்.

30 வருடப் பணி நிறைவு செய்தவர் தனது கடைசி சம்பளத்தில் (அல்லது சராசரி சம்பளத்தில்) சரிபாதியை அதாவது, 50% சம்பளத்தை ஓய்வூதியமாகப் பெறுவார். முழு ஓய்வூதியம் என்பது சம்பளத்தில் 50% பெறுவதுதான். இவரது அதிகபட்ச பணிக்கொடை 15 மாத சம்பளம் + அகவிலைப்படியாக இருக்கும். பென்ஷன் கம்யூடேசன் கிடைக்கும்.

அரசு ஊழியர் ஒருவர் 33 வருடப் பணியை நிறைவு செய்துவிட்டால் முழுமையான ஓய்வுக்காலப் பலன் கிடைத்துவிடும். பணிக்கொடை 16.5 மாத சம்பளம் + அகவிலைப்படியாக இருக்கும். முழுமையான பென்ஷன் கம்யூடேஷன் பெறலாம்.

33 ஆண்டுகளுக்கும் அதிகமான பணிநிறைவுடன் ஓய்வு பெற்றாலும் 33 வருடப் பணிக்கான முழுமையான ஓய்வுக்காலப் பலன்தான் கிடைக்கும். என்றாலும், பணிக்காலம் அதிகம் என்பதால், ஓய்வூதியம், பணிக்கொடை, பென்ஷன் கம்யூடேசன் ஆகியவற்றின் பண அளவு அதிகமாக இருக்கும்.

மேற்கண்டவை தவிர, பொது சேமநலநிதி (General Provident fund – GPF) உண்டு. 10% சம்பளத்தை மாதம்தோறும் சேமநலநிதியில் செலுத்தி வரலாம். ஆறு மாதத்துக்கு ஒரு முறை நிதியிலிருந்து பணம் பெறலாம்.

இத்துடன் ஊழியர் இறந்துவிட்டால் ஃபேமிலி பென்ஷன் உண்டு. ஒரே ஓர் ஆண்டு பணி செய்திருந்து இறந்துவிட்டாலும் ஃபேமிலி பென்ஷன் உண்டு. உடல்தகுதிச் சான்று பெற்று பணியில் சேர்ந்தவர் ஒரு வருடப் பணிக்கு முன்பே இறந்து விட்டாலும் ஃபேமிலி பென்ஷன் உண்டு.

பழைய பென்ஷன் திட்டத்தில் இத்தனை நன்மைகள் கிடைப்பதால்தான், தமிழக அரசின் தற்போதைய சி.பி.எஸ் சந்தாதாரர்கள், பழைய பென்ஷனுக்காகக் காத்திருக்கிறார்கள்.

தமிழக அரசின் ஊழியர்களுக்குப் 
பழைய பென்ஷன் கிடைக்குமா?

தற்போதைய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம்...

இந்தத் திட்டத்தின்படி, ஊழியர் தனது மாதாந்தர சம்பளம் மற்றும் அவ்வப்போது பெறுகிற சம்பள நிலுவைத் (Arrears) தொகையில் 10% தொகையைத் திட்டத்தில் செலுத்துகிறார். அரசும் தனது பங்களிப்பாக 10% தொகையை ஊழியரின் சி.பி.எஸ் கணக்கில் செலுத்துகிறது. ஓய்வு வயது வரும் வரை பங்களிப்பு மற்றும் அரசின் இணை பங்களிப்பு தொடர்கிறது. பங்களிப்புக்கு வட்டி கணக்கிடப்படுகிறது.

அதாவது, மத்திய அரசின் நிதி அமைச்சகம் பொது சேம நிதிக்கு (GPF) ஒவ்வொரு காலாண்டிலும் என்ன வட்டி விகிதத்தை நிர்ணயம் செய்கிறதோ, அதே வட்டி பங்களிப்பு சந்தாவுக்குத் தரப்படுகிறது. ஆண்டுதோறும்ஊழியரின் கணக்கில் உள்ள தொகைக்கு அரசு டேட்டா மையம் (Govt Data Centre) கணக்குச் சீட்டு (Account Slip) வழங்குகிறது.

ஓய்வு பெற்றவுடன் ஊழியர் செலுத்திய சந்தா தொகை, அதன் மீதான கூட்டு வட்டி, அரசின் பங்களிப்பு தொகை, அதன் மீதான கூட்டு வட்டி என நான்கு இனங்களின் ஒட்டு மொத்தத் தொகையும் ஊழியரின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப் படுகிறது. இதற்கான ஏற்பளிப்பு கருவூலக் கணக்கு இயக்கத்தால் வழங்கப்படுகிறது. பணி ஓய்வுக்கு முன் சி.பி.எஸ்ஸில் பகுதித் தொகை வழங்கப்படுவது கிடையாது.

பொதுப்பலன்கள்...

ஓய்வு பெற்றதும் (அதிகபட்ச மாக) 11 மாத விடுப்பு சம்பளம், பணியிடை இறந்துபோனால் ரூ.5 லட்சம் குடும்ப பாதுகாப்பு நிதி, இறந்துபோன ஊழியர் குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு அரசுப்பணி சிறப்பு சேமநல நிதி, மருத்துவக் காப்பீடு ஆகியவை பழைய, புதிய பங்களிப்பு திட்டம் ஆகிய இரண்டுக்கும் பொதுவானவை.

தேசிய பென்ஷன் திட்டம் (என்.பி.எஸ்)

1.1.2004 முதல் மத்திய அரசுப் பணியில் சேர்ந்தவர்களுக்குரியது என்.பி.எஸ் என்று அழைக்கப் படும் தேசிய பென்ஷன் திட்டம். இதன்படி, ஊழியர் தனது பங்களிப்பாக 10% சம்பளத் தைத் தனது என்.பி.எஸ் கணக்கில் செலுத்துவார். மத்திய அரசு தனது பங்களிப்பாக 14% சம்பளத்தை ஊழியரின் என்.பி.எஸ் கணக்கில் செலுத்து கிறது. என்.பி.எஸ்-க்கு வட்டி வளர்ச்சி கிடையாது. ஆனால், சந்தை வளர்ச்சிக்கேற்ப வருமானம் கிடைக்கும்.

ஓய்வு பெறும்போது தனது பங்கு + அரசுப் பங்குடன் சந்தை வளர்ச்சி மூலம் கூட்டு வளர்ச்சி பெற்ற தொகை ஊழியருக்குக் கிடைக்கும். மொத்தத் தொகையில் 60% ரொக்கமாகப் பெறலாம். 40% தொகையை (அன்யூட்டி) பென்ஷனுக்கான திட்டத்தில் விட்டு வைக்க வேண்டும்.

மாதாந்தர அன்யூட்டி தொகை கிடைக்கும். இத்துடன், ஓய்வு பெறும்போது பணிக்கொடை, பணியின்போது உடல் செயல் இழப்பு, மனநிலை பாதிப்பு ஏற்படுமாயின் (இயலாமை) ஓய்வூதியம் பெறலாம்.

ஊழியர் இறந்துவிட்டால் குடும்பத்தினர் பணிக் கொடை பெறலாம். ஃபேமிலி பென்ஷன் பெறலாம்.

பணியாளர் இறந்துபோகும் முன்பே இசைவு (Option) தெரிவித்து இருந்தால், குடும்பத்தினர் பழைய பென்ஷன் திட்டப்படி பலன் பெறலாம். எனினும், இதற்கு சில நிபந்தனைகள் உண்டு.

என்.பி.எஸ்ஸில் என்.பி.எஸ் I மற்றும் என்.பி.எஸ் II என இரு வகை கணக்கு உண்டு. என்.பி.எஸ் I கணக்கு ஓய்வுக்காலப் பணப்பலனுக்குரியது. என்றாலும், 10 ஆண்டுகள் பணி நிறைவு செய்தவர் தனது பணிக்காலத்தில் மூன்று முறை (தனது சேமிப்பில்) 25% பணம் பெறலாம். அதாவது, 5 வருட இடைவெளியில் கணக்கு II என்பது சேமிப்புக் கணக்கு போன்றது. சந்தை வளர்ச்சி சார்ந்தது. பணம் போடலாம். தேவைப்படும்போது எடுக்கலாம்.

அகில இந்தியப் பணியினர்...

தமிழக அரசில் பணிபுரியும் (01.04.2004-க்குப் பிறகு பணிக்கு வந்த) அகில இந்திய பணியாளர்களுக்கு என்.பி.எஸ் சந்தா 10% பிடித்தம் செய்யப்படுகிறது. அரசின் பங்களிப்புடன் திட்டக் கணக்கில் சேர்க்கப் படுகிறது. சி.பி.எஸ் திட்டம் தமிழக அரசில் மட்டுமே செயல்படுகிறது.

பழைய பென்ஷன் அமலாக்கம்...

பழைய பென்ஷன் திட்டம் மீண்டும் நடைமுறைக்கு வந்தால், தற்போது சி.பி.எஸ் திட்டத்தில் செலுத்தப் பட்டுவரும் 10% பங்களிப்புத் தொகை வட்டியுடன் சேர்த்து, ஜி.பி.எஃப் கணக்கில் செலுத்தப்படக்கூடும். இதற்கான ஜி.பி.எஃப் கணக்கு தொடங்கப்படும் முன்பு நடை முறையில் இருந்த, ‘தமிழ்நாடு பங்களிப்பு நிதி பென்ஷன் இன்ஷூரன்ஸ் விதி 1950’ ரத்து செய்யப்பட்டு, அப்போதைய ஊழியர்களுக்கு ஜி.பி.எஃப் மற்றும் பென்ஷன் நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டபோது இத்தகைய நடை முறைதான் கடைப்பிடிக்கப் பட்டது. எனவே, பழைய பென்ஷன் திட்டம் நடைமுறைக்கு வந்தாலும் இதே நடைமுறைதான் கடைப்பிடிக்கப் படக்கூடும்.

மத்திய அரசில் தற்போது சில துறை ஊழியர்களுக்கு என்.பி.எஸ் திட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டு நிபந்தனை யுடன், பழைய பென்ஷன் நடை முறைக்குக் கொண்டுவரப்பட்டு இருக் கிறது. இதே போல, தமிழக அரசு ஊழியர் களுக்கும் கொண்டு வரப்படுமா என்பதைத் தெரிந்து தமிழக அரசு ஊழியர்கள் ஆர்வத்துடன் இருக் கிறார்கள். இது தொடர்பாக தமிழக அரசிடம் இருந்து ஓர் அறிவிப்பு வந்தால் நல்லது என்பதே அவர்களின் எதிர்பார்ப்பு!