அலசல்
Published:Updated:

ஒன் பை டூ - எழுவர் விடுதலையில் நாடகமாடுவது யார்?

இராஜீவ் காந்தி - கல்யாணசுந்தரம்
பிரீமியம் ஸ்டோரி
News
இராஜீவ் காந்தி - கல்யாணசுந்தரம்

மத்திய அரசு நீதிமன்றத்தில் ஒரு மாதிரியும், வெளியில் ஒரு மாதிரியும் நிலைப்பாடு எடுக்கிறது.

இராஜீவ் காந்தி, மாநிலச் செய்தித் தொடர்பு இணைச் செயலாளர், தி.மு.க

இராஜீவ் காந்தி
இராஜீவ் காந்தி

“ஏழு தமிழர் விடுதலையில் நாடகமாடுவது மத்திய அரசாங்கம். அதற்குத் துணையாக நிற்பது மாநில அரசாங்கம். மத்திய அரசு நீதிமன்றத்தில் ஒரு மாதிரியும், வெளியில் ஒரு மாதிரியும் நிலைப்பாடு எடுக்கிறது. வெளிப்படையாகச் சொல்ல வேண்டுமென்றால், பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசுக்கு, ராஜீவ் கொலை வழக்கில் பாதிக்கப்பட்டு சிறையிலுள்ள ஏழு பேரையும் விடுதலை செய்வதில் துளியளவும் விருப்பமில்லை. அ.தி.மு.க தலைமையிலான மாநில அரசுக்கு வாக்குவங்கிக்காக, விருப்பம் இருந்தாலும்கூட சட்டரீதியாக, மாநில மக்களுக்காக உறுதியாக நின்று உரிமையைப் பெறும் தெம்பும் திராணியும் இல்லை. காரணம், தி.மு.க ஆளுநரிடம் ஒப்படைத்துள்ள ஊழல் புகாரில் தங்களின் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என்பதற்காகவும், தங்களின் கட்சி, சின்னத்தைக் காப்பாற்றுவதற்காகவும் பணிந்துபோகிறார்கள். `பிரிவு 161-ல் முடிவெடுக்கும் அதிகாரம் மாநில அரசுக்குத்தான் இருக்கிறது’ என உச்ச நீதிமன்றம் தெளிவாகச் சொன்ன பிறகும் அ.தி.மு.க அரசு, மத்திய அரசின் இன்னோர் அரசாகத்தான் செயல்படுகிறது. மாநில அரசின் உரிமைகளுக்காகவோ, சிறைவாசிகளின் உரிமைக்காகவோ இந்த அரசு செயல்படவில்லை. ஆனால், தி.மு.க அன்று நளினி அவர்களின் தூக்கை ரத்து செய்ததுதான் பின்னாளில் மூவர் தூக்கை ரத்து செய்யக் காரணமாக அமைந்தது. இன்று எடுக்கும் பல நடவடிக்கைகளுக்கும் அதுதான் முன்னுதாரணமாக அமைந்தது!’’

கல்யாணசுந்தரம்
கல்யாணசுந்தரம்

கல்யாணசுந்தரம், மாநிலச் செய்தித் தொடர்பாளர், அ.தி.மு.க

“2000-ம் ஆண்டில் கருணாநிதி முதல்வராக இருந்தபோது சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி ஆகிய நான்கு பேரும் தங்களின் தூக்குத் தண்டனையை ரத்து செய்யக் கோரி ஆளுநருக்குக் கருணை மனு அனுப்பினர். அது கருணாநிதி தலைமையிலான கேபினெட்டுக்கு வந்தபோது, `நளினியைத் தவிர மற்ற மூவரையும் தூக்கிடலாம்’ எனக் கையெழுத்திட்டவர் கருணாநிதி. அதைவிட, நளினி அக்காவின் பரோல் மனு மீதான விசாரணையில், ‘நளினியை பரோலில் வெளியில் விட முடியாது, காரணம், அவர்கள் வீடிருக்கும் முகவரி, வி.ஐ.பி-க்கள் வசிக்கும் பகுதி.

ஒன் பை டூ - எழுவர் விடுதலையில் நாடகமாடுவது யார்?

இந்த பயங்கரவாதியை வெளியில்விட்டால், அது மற்றவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்’ என கருணாநிதி தலைமையிலான அரசாங்கம் நீதிமன்றத்தில் பதில் கொடுத்தது. அடுத்ததாக, பத்து வருட காலம் மத்திய அரசாங்கத்தில் பங்கு வகித்தபோதும் தி.மு.க., எழுவர் விடுதலையில் பாராமுகம்தான் காட்டியது. அம்மா, ‘விடுதலை செய்வேன்’ என அறிவித்தபோதும் தடை வாங்கியது அப்போதைய காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசாங்கம்தான். அப்போது, அமைதியாக வேடிக்கை பார்த்தது தி.மு.க. ஆனால், அனைவருக்கும் அதிகமாக பரோல் கொடுக்கக் காரணமாகயிருந்தது, விடுதலை செய்வதற்கான முறையான நடவடிக்கைகளை எடுத்துவருவது எடப்பாடியார் தலைமையிலான தமிழக அரசுதான்!”