Published:Updated:

கொதிக்காமல் ரசிக்கும் தொண்டர்கள்... அரசியல்வாதிகளுக்கு 'அப்புச்சி' ஒரு பாடம். எப்படி?

p chidambaram
p chidambaram

"சீனாத்தானா தரப்பினரை, மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான காங்கிரஸ்காரர்களுக்கு ஆகாது. சீனாத்தானா பவரில் இருந்தபோது, வாரம் ஒருமுறை அல்லது இருமுறை சிவகங்கைக்கு விசிட் அடிப்பார்

ஆகஸ்ட் 22-ம் தேதி, காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவரான ப.சிதம்பரம் கைதுசெய்யப்பட்டார். அன்று இரவு, கைது நடவடிக்கையை எதிர்த்து அவரது சொந்த ஊரான காரைக்குடியில் ஆர்ப்பாட்டம் செய்தவர்கள்... அதிகமில்லை ஜென்டில்மேன், வெறும் ஒன்பது பேர் மட்டுமே. மறுநாள் போராட்டம் நடந்தது தனிக்கதை. பொதுவாக தமிழக அரசியலில் வட்டச் செயலாளருக்கு ஒரு பிரச்னை என்றாலே நூற்றுக்கணக்கில் தொண்டர்கள் திரள்வார்கள். ஆனால், ஒரு தேசிய கட்சியில் பிரதமர் வேட்பாளருக்கு அடுத்த நிலையில் இருப்பதாகக் கருதப்படும் ப.சிதம்பரத்துக்கு ஏன் இந்த நிலை? விரிவாக படிக்க க்ளிக் செய்க... http://bit.ly/2Zs15s0

நாட்டின் அதிகாரம்மிக்க நிதித்துறை மற்றும் உள்துறை அமைச்சராக இருந்தவர். 'பொருளாதார மேதை' என்று வர்ணிக்கப்பட்டவர். எல்லாவற்றுக்கும் மேலாக காங்கிரஸின் தேசிய தலைமையில் முடிவெடுக்கும் இடத்தில் இருப்பவர். இவ்வளவு இருந்தும், அவரின் கைதுக்கு சொந்த மாவட்டத்தில்கூட ரியாக்‌ஷன் பெரியதாக ஒன்றுமில்லை!

p chidambaram
p chidambaram

சிவகங்கை மாவட்டத்தின் சீனியர் காங்கிரஸ்காரர்களிடம் பேசினோம். "சீனாத்தானா தரப்பினரை, மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான காங்கிரஸ்காரர்களுக்கு ஆகாது. சீனாத்தானா பவரில் இருந்தபோது, வாரம் ஒருமுறை அல்லது இருமுறை சிவகங்கைக்கு விசிட் அடிப்பார். அது மக்களையோ தொண்டர்களையோ சந்திக்க அல்ல... வங்கி அல்லது ஏ.டி.எம் திறப்பு விழாவுக்காகத்தான் பெரும்பாலும் இருக்கும். நிகழ்ச்சிக்கு வருபவர், அதிகாரிகளிடம் மட்டும் பேசுவார். கட்சி நிர்வாகிகளை ஏறெடுத்தும் பார்க்க மாட்டார். கட்சியினர் ஏதாவது சொல்ல வேண்டுமென்றால், அவரின் உதவியாளர் சுந்தரம் மூலமாக மட்டுமே சொல்ல முடியும். எப்போதுமே காரைக்குடியில் உள்ள எம்.பி அலுவலகத்திலும், சென்னையில் உள்ள கார்த்தி அலுவலகத்திலும் கூட்டம் நிரம்பியிருக்கும். அவையெல்லாம் கட்சிக்காரர்களின் கூட்டமல்ல; தொழிலதிபர்கள், மீடியேட்டர்களின் கூட்டம்.

இப்படி தவறானவர்களும் பணக்காரர்களும் சீனாத்தானாவின் பெயரைச் சொல்லி வளர்ந்த நிலையில், கட்சிக்காரர்கள் உதவிக்காக ஏதேனும் கேட்டால் ஒரு துரும்பைக்கூட கிள்ளிப்போட வில்லை. தொண்டர்களுக்கு அவர் நன்மை செய்திருந்தால் கைதுசெய்யப்பட்டபோது, அனுதாபப்பட்டு ரோட்டுக்கு வந்திருப்பார்கள். என்ன செய்வது... கணக்கில் வல்லவரான சீனாத்தானா, காலம் எப்போதும் ஒரே மாதிரியாக இருக்கும் என்று தப்புக்கணக்குப் போட்டுவிட்டார். மற்றவர்களைவிட காங்கிரஸ்காரர்கள்தான் அவர் மீதான வழக்குகளைப் பார்த்து ரசித்துவருகிறார்கள்" என்றார்கள்.

p chidambaram
p chidambaram

ப.சிதம்பரம் எப்போதுமே 'எலீட்' தலைவராக மட்டுமே அறியப்பட்டிருக்கிறார். அதனாலேயே அவர் கைதுசெய்யப்பட்டபோது சொந்த மாவட்டத்தில்கூட தொண்டர்கள் இறங்கி வரவில்லை. அரசியல்வாதிகளுக்கு 'அப்புச்சி' ஒரு பாடம்!

மேலும், "பெரிய அப்புச்சியைவிட சின்ன அப்புச்சி சிவகங்கைக்கு வந்துவிட்டால், அவருடையை ரவுசு தாங்காது" என்றார்கள். - அப்படி என்னதான் செய்வார் கார்த்தி சிதம்பரம்? ப.சிதம்பரத்தின் எந்த அரசியல் செயல்பாடுகள் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தின? ப.சிதம்பரம் தரப்பு என்ன சொல்கிறது? > ஜூனியர் விகடன் ஸ்பெஷல் ஸ்டோரியை விரிவாக வாசிக்க >

https://www.vikatan.com/government-and-politics/controversy/an-insight-into-the-happenings-surrounding-p-chidambarams-arrest

அடுத்த கட்டுரைக்கு