Published:Updated:

காஷ்மீர் விவகாரம்: பாக். விதித்த வர்த்தகத் தடையால் பாகிஸ்தானுக்கே பாதிப்பு!

ராஜு.கே
கோ.ராமமூர்த்தி

200 சதவிகித இறக்குமதி வரியும் விதித்தது. அப்போதே 92 சதவிகித இறக்குமதி குறைந்துவிட்டது. உண்மையில், பாதிப்பு பாகிஸ்தானுக்கே அதிகம்.

காஷ்மீர்
காஷ்மீர்

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் பிரிவு 370-யை இந்தியா ரத்துசெய்த விவகாரத்தில் தன் ஆதிக்கத்தை நிலைநாட்டுவதற்கு பாகிஸ்தான் எடுத்த நடவடிக்கைகள், அந்த நாட்டுக்கு எதிராகவே திரும்பியுள்ளன. https://bit.ly/2H2sVQb

பாகிஸ்தானின் வர்த்தகத் தடை, இந்தியாவை எந்தவிதத்திலும் பாதிக்காது. ஏனெனில், இந்தியாவின் மொத்த வர்த்தகத்தில், பாகிஸ்தானுடனான வர்த்தகம் ஒரு சதவிகிதத்துக்கும் குறைவே. ஏற்கெனவே இந்தியா, பாகிஸ்தானுக்கு வழங்கிய 'மிகவும் விரும்பப்படும் நாடு' என்ற அந்தஸ்தை, புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு ரத்துசெய்து, 200 சதவிகித இறக்குமதி வரியும் விதித்தது. அப்போதே 92 சதவிகித இறக்குமதி குறைந்துவிட்டது. உண்மையில், பாதிப்பு பாகிஸ்தானுக்கே அதிகம்.

காஷ்மீர்
காஷ்மீர்

பணவீக்கம், நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தானில் விலைவாசி விண்ணைத் தொட்டுள்ளது. இன்று பாகிஸ்தானில் ஒரு லிட்டர் பெட்ரோல் 117.83 ரூபாய்; டீசல் ஒரு லிட்டர் 132.47 ரூபாய்; மண்ணெண்ணெய் 103.84 ரூபாய். காய்கறிகளின் விலை, எப்போதுமில்லாத அளவுக்கு உயர்ந்துவிட்டது. இதனால், பக்ரீத் பண்டிகையில் மக்கள் கடும் சிரமமடைந்தனர்.

காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதிக்கொள்வது தொடர்கதை. காலம் காலமாக பாகிஸ்தான் அரசும் அரசியல் கட்சிகளும் காஷ்மீரை எப்படியும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துவிடுவோம் என்ற மாயையை உருவாக்கிவந்துள்ளன. சொல்லப் போனால், காஷ்மீர் என்பது அவர்களுக்கு ஓட்டு வங்கி. அதைக் காத்துக்கொள்ளவே இந்த தடாலடி நடவடிக்கைகள்.

இரு பக்கங்களும் கூரிய கத்தி போன்றது காஷ்மீர் விவகாரம். எச்சரிக்கையுடன் கையாள வேண்டிய பொறுப்பு, இரு நாடுகளின் தலைவர்களுக்கும் உண்டு!

பாகிஸ்தான் அரசும் அரசியல் கட்சிகளும் காஷ்மீரை எப்படியும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துவிடுவோம் என்ற மாயையை உருவாக்கிவந்துள்ளன.

- காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் பிரிவு 370-யை ரத்துசெய்து, காஷ்மீரை இரண்டாகப் பிரித்த விவகாரத்தில், வல்லரசுகளும் இஸ்லாம் நாடுகளும் மெளனம் சாதிப்பதால் பாகிஸ்தான் தனித்துவிடப்பட்டிருக்கிறது. அதுகுறித்து ஜூனியர் விகடன் இதழில் வெளிவந்துள்ள விரிவான கட்டுரைக்கு > காஷ்மீர் விவகாரம்... தனித்துவிடப்பட்ட பாகிஸ்தான்! https://www.vikatan.com/social-affairs/politics/kashmir-split-issue-isolated-pakistan

> ஆன்லைனில் சந்தா செலுத்த https://store.vikatan.com/