Published:Updated:

அபகரிக்கும் ஆந்திரம்... பாலையாகும் பாலாறு... வேடிக்கை பார்க்கும் தமிழ்நாடு!

பாலாறு
பிரீமியம் ஸ்டோரி
News
பாலாறு

‘எங்களுக்கு வாக்களித்தால், தமிழகத்தில் பாலாறும் தேனாறும் ஓடும்’ என்கிறரீதியில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்வார்கள் அரசியல்வாதிகள். ஆனால், தமிழகத்தில் ஏற்கெனவே இருக்கும் ஆறுகளைக்கூட இவர்களால் காப்பாற்ற முடியாது என்பதுதான் நிதர்சனம்.

அபகரிக்கும் ஆந்திரம்... பாலையாகும் பாலாறு... வேடிக்கை பார்க்கும் தமிழ்நாடு!

‘எங்களுக்கு வாக்களித்தால், தமிழகத்தில் பாலாறும் தேனாறும் ஓடும்’ என்கிறரீதியில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்வார்கள் அரசியல்வாதிகள். ஆனால், தமிழகத்தில் ஏற்கெனவே இருக்கும் ஆறுகளைக்கூட இவர்களால் காப்பாற்ற முடியாது என்பதுதான் நிதர்சனம்.

Published:Updated:
பாலாறு
பிரீமியம் ஸ்டோரி
News
பாலாறு

‘பாலாற்றுக்குக் குறுக்கே ஆந்திர அரசு புதிய தடுப்பணைகள் கட்ட திட்டமிட்டுள்ளது. சில தடுப்பணைகளின் உயரத்தை அதிகரிக்கவும் முயற்சிகள் நடக்கின்றன. இதைத் தடுத்து நிறுத்த வேண்டும்’ என்று கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக குரல்கொடுத்து வருகிறார்கள், வட மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள். ஆனால், அது அரசியலாக்கப்பட்டதே தவிர, ஆக்கபூர்வமான நடவடிக்கையும் எதுவும் எடுக்கப்படவில்லை. தற்போது ஆந்திர அரசு, ஆற்றுக்குக் குறுக்கே தடுப்பணைகள் கட்டும் பணிகளைத் தொடங்கியிருப்பதால், நோட்டாவுக்கு வாக்களிக்கப்போவதாக அறிவித்துள்ளனர் வேலூர் பகுதி விவசாயிகள்.

 வெங்கடேசன், அசோகன்
வெங்கடேசன், அசோகன்

பாலாறு, பருவகால ஆறு. மழைக்காலத்தின்போது தண்ணீர் பெருக்கெடுத்து, தமிழகத்தின் வட மாவட்ட மக்களை ஆற்றுப்படுத்தும். அத்துடன், சென்னைப் புறநகர் மக்களின் தாகத்தைத் தீர்ப்பதிலும் முக்கியப் பங்களிக்கிறது. கர்நாடகத்தில் நந்தி மலையில் உற்பத்தியாகும் பாலாறு, ஆந்திரத்தில் 48 கி.மீ தூரம் ஓடி, வாணியம்பாடிக்கு அருகில் உள்ள நாச்சியம்மன் கோயில் அருகே தமிழகத்துக்குள் நுழைகிறது. தொடர்ந்து, காஞ்சிபுரம் மாவட்டத்துக்குள் நுழைந்து, சென்னைக்குத் தெற்கே 100 கி.மீ தூரத்தில் இருக்கும் வாயலூர் என்ற இடத்தில் வங்கக்கடலில் சங்கமமாகிறது. தமிழகத்தில் கிட்டத்தட்ட நான்கு லட்சம் ஏக்கர் பாசன நிலங்கள் இதன் மூலம் பயன்பெறுகின்றன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஆந்திர எல்லைக்குள் ஓடும் பாலாற்றின் குறுக்கே உள்ள 22 தடுப்பணைகளின் உயரத்தை ஐந்து அடி முதல் நாற்பது அடி வரை உயர்த்தும் வகையில் 41.78 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டுமானப் பணிகளை, அந்த மாநில அரசு தொடங்கியிருக்கிறது. 2006-ம் ஆண்டில் சந்திரபாபு நாயுடு ஆந்திர முதல்வராக இருந்தபோது, குப்பம் அடுத்து உள்ள கணேசபுரத்தில் பாலாற்றின் குறுக்கே 320 கோடி ரூபாய் செலவில் அணை கட்டும் திட்டத்தை அறிவித்தார். தமிழகத்தில் அதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அதனால், அந்தத் திட்டத்தை ஆந்திர அரசு கைவிட்டது. ‘பாலாற்றின் குறுக்கே அணை கட்டப்போவதில்லை’ என நீதிமன்றத்தில் ஆந்திர அரசு சொன்னதால், அந்த வழக்கு முடித்துவைக்கப் பட்டது. ஆனால், அணைக்குப் பதிலாக, பாலாற்றின் குறுக்கே 29 இடங்களில் தடுப்பணைகளைக் கட்டியது ஆந்திரம். அதனால், அதிக வெள்ளம் வரும் சமயங்களில் மட்டும்தான் தமிழகத்தின் பாலாற்றில் தண்ணீர் வரும் நிலை. தடுப்பணைகளின் உயரம் அதிகரிக்கப்பட்டால், இனி பெருமழைக்காலங்களில்கூட வெள்ளம் வராது.

அபகரிக்கும் ஆந்திரம்... பாலையாகும் பாலாறு... வேடிக்கை பார்க்கும் தமிழ்நாடு!

இதுகுறித்து பாலாறு பாதுகாப்பு அமைப்பின் தலைவரான வெங்கடேசன், ‘‘அணை கட்டப்போவதில்லை என்று நீதிமன்றத்தில் வாக்குறுதி கொடுத்ததால், சந்திரபாபு நாயுடுவால் அணை கட்ட முடியவில்லை. ஆனால், அதற்குப் பதிலாக 29 தடுப்பணைகளைக் கட்டினார். அடுத்து ஆட்சிக்கு வந்தவுடன், ஏற்கெனவே கட்டிய 29 தடுப்பணைகளில் ஏழு தடுப்பணைகளின் உயரத்தை ஐந்து அடியிலிருந்து இருபது அடியாக உயர்த்தினார். அதனால், அதிக அளவு நீர் தேங்கியது. மீண்டும் 2018-ம் ஆண்டு நவம்பர் மாதம், மீதி 22 தடுப்பணைகளின் உயரத்தையும் உயர்த்துவதற்காக 41.78 கோடி ரூபாயை ஒதுக்கினார். அப்போதே குரல்கொடுத்தோம். ஆனால், தமிழக அரசு கண்டுகொள்ளவில்லை’’ என்றார் வேதனையுடன்.

பாலாற்றின் குறுக்கே கட்டப்படும் தடுப்பணை
பாலாற்றின் குறுக்கே கட்டப்படும் தடுப்பணை

பாலாறு பாதுகாப்பு அமைப்பின் நிர்வாகக் குழு உறுப்பினர் அசோகன், “பாலாற்றின் குறுக்கே ராமகிருஷ்ணாபுரம், கணேசபுரம், சாந்திபுரம், போகிலிரே உள்ளிட்ட பகுதிகளில் தடுப்பணைகளின் உயரத்தை அதிகரிப்பதற்கான பணிகள் நடந்துவருகின்றன. இந்தப் பணிகள் முடிவடைந் தால், தமிழகத்தில் பாலாறு பாயும் பகுதிகள் பாலைவனமாவதை யாராலும் தடுக்க முடியாது’’ என்று எச்சரித்தார்.

ஆந்திர அரசின் தடுப்பணை கட்டுமானப் பணிகளால், கடும் அதிர்ச்சிக் குள்ளாகி இருக்கிறார்கள், விவசாயிகள். ‘பாலாற்றின் குறுக்கே தடுப்பணைகளைக் கட்டுவதையும், தடுப்பணை களின் உயரத்தை அதிகரிப்பதையும் கைவிடும்படி ஆந்திர அரசிடம் தமிழக அரசு வலியுறுத்த வேண்டும். பாலாற்றின் மீதான தமிழகத் தின் உரிமையை நிலைநாட்டச் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்’ என பாலாறு பாசன விவசாயிகள் கோரிக்கை வைத்திருக்கிறார்கள். அத்துடன், பாலாற்றில் தடுப்பணைகள் கட்டுவதை தமிழக அரசியல் கட்சிகள் தடுக்கத் தவறியதால், வேலூர் நாடாளுமன்றத் தேர்தலில் நோட்டாவுக்கு வாக்களிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

பாலாறு பாலைவனமாகும் முன், விழித்துக்கொள்ளுமா தமிழக அரசு?