Published:Updated:

“சிக்கல் ஏற்படும் போது மட்டும் நாங்கள் தேவையா? - கொதிக்கும் பகுதிநேர ஆசிரியர்கள்”

dpi chennai
News
dpi chennai

அரசுக்குச் சிக்கல் ஏற்படும்போது மட்டும் எங்களைப் பயன்படுத்திவிட்டு, பின்னர் ஒதுக்குவது என்ன நியாயம்?

Published:Updated:

“சிக்கல் ஏற்படும் போது மட்டும் நாங்கள் தேவையா? - கொதிக்கும் பகுதிநேர ஆசிரியர்கள்”

அரசுக்குச் சிக்கல் ஏற்படும்போது மட்டும் எங்களைப் பயன்படுத்திவிட்டு, பின்னர் ஒதுக்குவது என்ன நியாயம்?

dpi chennai
News
dpi chennai

தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் 16,549 பகுதிநேர ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். 2011-12-ம் கல்வியாண்டில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் 6, 7 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு உடற்கல்வி, ஓவியம், கணினி, இசை, தையல், தோட்டக்கலை, கட்டடக்கலை, வாழ்வியல்திறன் கல்விப் பாடங்களில் பயிற்சியளிக்க இவர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்களுக்குத் தொகுப்பூதியமாக 5,000 ரூபாய் ஆரம்பத்தில் தரப்பட்டது.

ஜெயலலிதா
ஜெயலலிதா

பலகட்ட போராட்டங்களைத் தொடர்ந்து, 2014-ல் ஜெயலலிதாவால் இரண்டயிரம் ரூபாய் ஊதிய உயர்வு அளிக்கப்பட்டு, சம்பளம் 7,000 ஆனது. 2017-ம் ஆண்டு ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர் வேலைநிறுத்தப் போராட்டத்திற்குச் சிலநாட்களுக்கு முன்பாக 10 சதவீத ஊதியஉயர்வாக 700 ரூபாய் வழங்கபட்டது. இன்றுவரையில், இந்த 7,700 சம்பளத்தில்தான் பகுதிநேர ஆசிரியர்கள் வாழ்க்கையை ஓட்டி வருகிறார்கள்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய தமிழ்நாடு அனைத்துப் பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் சி.செந்தில்குமார், “ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர் வேலைநிறுத்தப் போராட்டத்தின்போது பள்ளிகளைத் திறந்து பகுதிநேர ஆசிரியர்களைப் பயன்படுத்தி முழுநேரமும் நடத்திட அரசு உத்தரவிடுகிறது.

செந்தில்குமார்
செந்தில்குமார்

அரசின் உத்தரவின்படி, நாங்களும் பள்ளிகளைத் திறந்து முழுநேரமும் நடத்துகிறோம். எமிஸ், பவர் பைனான்ஸ், இமெயில், Typing Work உள்ளிட்ட கணினி சம்பந்தபட்ட வேலை மட்டுமின்றி, பள்ளி நேரங்களில் தரப்படும் எல்லா விதமான வேலைகளையும் இந்தத் தொகுப்பூதிய பகுதிநேர ஆசிரியர்கள் பலன் எதுவுமின்றி செவ்வனே செய்கிறார்கள்.

அரசுக்குச் சிக்கல் ஏற்படும்போது மட்டும் எங்களைப் பயன்படுத்திவிட்டு, பின்னர் ஒதுக்குவது என்ன நியாயம்? இதுபோக, பாட ஆசிரியர்கள் பள்ளிக்கு வராத நாள்களிலும், ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ள பள்ளிகளிலும் பகுதிநேர ஆசிரியர்களே வகுப்புகளை நடத்துகின்றனர். ஏறிவிட்ட விலைவாசிக்கு ஏற்றாற்போல ஊதியத்தை வழங்காமல் இருப்பது பகுதிநேர ஆசிரியர்களின் எதிர்காலத்தைப் பாதிக்கின்றது.

அரசுக்குச் சிக்கல் ஏற்படும்போது மட்டும் எங்களைப் பயன்படுத்திவிட்டு, பின்னர் ஒதுக்குவது என்ன நியாயம்?
- செந்தில்குமார்

கோவா மாநிலத்தில் ரூ.15,000, ஆந்திரா மாநிலத்தில் ரூ.14,203 என அதிகபட்ச சம்பளமாக இதே பகுதிநேர ஆசிரியர்களுக்குக் கொடுத்து வருகிறார்கள். எனவே, குறைந்தபட்சம் அதே தொகுப்பூதியத்தைத் தமிழகத்திலும் விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும். பகுதிநேர ஆசிரியர்களின் நியமன அரசாணையில் மே மாதம் சம்பளம் குறித்து எதுவும் ஆணையிடப்படாத நிலையில், கடந்த 8 ஆண்டுகளாக ஒவ்வொருவரும் இழந்துவரும் மே மாதம் சம்பளம் ரூ.53,400-ஐ உடனடியாக வழங்க வேண்டும்.

8 வருட போனஸ் நிலுவைத் தொகையைக் கணக்கிட்டு உடனடியாக வழங்குவதோடு, இறந்துபோன பகுதிநேர ஆசிரியர்களின் குடும்பங்களுக்கு முதல்வர் சிறப்பு நிதியிலிருந்து குடும்ப நலநிதியாக ரூ.2 லட்சம் உடனடியாக வழங்கவேண்டும்.

பள்ளிக் கல்வித்துறை வளாகம்
பள்ளிக் கல்வித்துறை வளாகம்

P.F, E.S.I உடனடியாக அமல்படுத்த வேண்டும். மகளிருக்குச் சம்பளத்துடன் மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும். நிரந்தரம் செய்ய காலதாமதம் ஆகுமெனில், அதுவரை குறைந்தபட்சம் ரூ.15,000 சம்பளத்தை வழங்க அறிவிப்பை அரசு வெளியிட கேட்டுக்கொள்கிறோம்” என்றார்.