Published:Updated:

``குடிசை வீட்டுலதான் இருக்கோம்; சொந்த வீடு கிடைக்கும்னு..!" 'ஜெய் பீம்' பார்வதி குடும்பத்தினர்

பார்வதி குடும்பத்தினருடன் நடிகர் லாரன்ஸ்...
News
பார்வதி குடும்பத்தினருடன் நடிகர் லாரன்ஸ்...

'ஜெய் பீம்' படம் வெளியான பிறகு, மொத்த மீடியா வெளிச்சமும் பார்வதிமீது திரும்பியது. அவருக்கு வீடு கட்டிக்கொடுக்க முன்வந்த நடிகர் லாரன்ஸ், அதற்கான தொகையைக் கொடுத்திருக்கிறார். பார்வதிக்கு வீடு கட்டிக்கொடுப்பதாகச் சொன்ன தமிழக அரசின் அறிவிப்பு என்னவானது?

நடிகர் சூர்யா நடித்துத் தயாரித்த 'ஜெய் பீம்' திரைப்படம், கடந்த ஆண்டில் பெரும் வரவேற்பைப் பெற்றது. உண்மை சம்பவத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட அந்தப் படத்தில், கதையைத் தாங்கி நிற்கும் செங்கேணி கதாபாத்திரம், பார்வதி என்பவரின் வாழ்க்கைத் தழுவல்தான். 'ஜெய் பீம்' படம் வெளியான பிறகு, மொத்த மீடியா வெளிச்சமும் பார்வதியின்மீது திரும்பியது. அப்போது அவரைச் சந்தித்த நடிகர் லாரன்ஸ், ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவி செய்ததுடன், பார்வதிக்கு வீடு கட்டிக்கொடுக்கவும் முன்வந்தார்.

பார்வதி குடும்பத்தினர்...
பார்வதி குடும்பத்தினர்...

வறுமையிலிருக்கும் பார்வதிக்கு வீடு கட்டிக்கொடுப்பதாகத் தமிழக அரசும் அறிவித்தது. இதனால், வீடு கட்டிக்கொடுக்கும் தனது திட்டத்தை மாற்றிக்கொண்ட லாரன்ஸ், அதற்காக ஒதுக்கிய தொகையை, பார்வதி குடும்பத்தினருக்குச் சமீபத்தில் கொடுத்திருக்கிறார். அந்தத் திரைப்படம் வெளியாகிப் பல மாதங்களாகியும், பார்வதி தன் மகள் குடும்பத்தினருடன் இன்னும் வாடகை வீட்டில்தான் வசிக்கிறார். இதுகுறித்து பார்வதியைத் தொடர்புகொண்டோம். அவர் சார்பில், பார்வதியின் மருமகன் சரவணன் பேசினார்.

"என் அத்தைக்கு (பார்வதி) மூணு பசங்க, ஒரு பொண்ணு. ஒரு பையன் இறந்துட்டாரு. ரெண்டு மகன்களும் கடலூர் மாவட்டத்துல இருக்காங்க. அத்தையின் மக சின்னப்பொண்ணு என் மனைவி. சென்னை, முகலிவாக்கத்துல ரொம்ப காலமா வாடகை வீட்டுலதான் இருக்கோம். இந்தக் குடிசை வீட்டுல, எங்களோடுதான் அத்தையும் வசிக்கிறாங்க.

பார்வதி குடும்பத்தினர்...
பார்வதி குடும்பத்தினர்...

'ஜெய் பீம்' படம் பார்த்தவங்களுக்கு, என் அத்தை பட்ட கஷ்டங்கள் நல்லா புரிஞ்சிருக்கும். படம் ரிலீஸானதும், எங்க வறுமைநிலையைப் புரிஞ்சுகிட்டு, அத்தைக்கு நடிகர் சூர்யா சார் 15 லட்சம் ரூபா நிதியுதவி செஞ்சார். அந்தப் பணத்தை பேங்க்ல டெபாசிட் பண்ணியிருக்கோம். அதுல கிடைக்கிற வட்டிப் பணத்துல தன் தேவைகளை அத்தை பார்த்துக்கிறாங்க. நடிகர் லாரன்ஸ் சாரும், அதேநேரத்துலதான் எங்க வீட்டுக்கு வந்துப் பேசினார்.

தமிழ்நாடு கவர்ன்மென்ட் அத்தைக்கு வீடு கட்டிக்கொடுக்கிறதா சொன்னதால, லாரன்ஸ் சார் எங்களுக்கு நிதியுதவி செய்ய நினைச்சார். அதுக்காக, எங்க மொத்தக் குடும்பத்தையும் சில தினங்களுக்கு முன்பு நேர்ல வரச் சொல்லியிருந்தார். அத்தைக்கும், அவரோட மூணு பிள்ளைகளுக்கும் தலா ஒரு லட்சம் ரூபா கொடுத்தார். எங்க நிலைமைக்கு அந்தத் தொகை ரொம்பவே உதவியா இருக்கும்" என்றவர், தமிழக அரசு வீடு கட்டிக்கொடுப்பதாகச் சொன்ன விஷயத்துக்கு வந்தார்.

பார்வதி குடும்பத்தினருடன் நடிகர் லாரன்ஸ்...
பார்வதி குடும்பத்தினருடன் நடிகர் லாரன்ஸ்...

"கவர்ன்மென்ட் தரப்புல எங்களுக்கு வீடு கட்டிக்கொடுக்கிறதா தகவல் வந்தப்போ, ரொம்பவே சந்தோஷப்பட்டோம். அதுக்கப்புறமா, அந்த விஷயமா இதுவரைக்கும் யாருமே எங்ககிட்ட பேசலை. எங்க கஷ்டத்தைத் தெரிஞ்சுகிட்டு உதவ நினைச்ச முதல்வர் ஸ்டாலின் சார், தான் சொன்னதுபோலவே எங்களுக்கு வீடு கட்டிக்கொடுப்பார்னு உறுதியா நம்புறோம்" என்று முடித்தார்.