அமெரிக்காவைச் சேர்ந்த சாமுவேல் ராப்பிலீ பேட்மேன் என்பவருக்கு 46 வயது. இவர், பலதாரமணம் செய்துள்ளார். ஒன்று, இரண்டு என இல்லாமல், 20 பெண்களைத் திருமணம் செய்துள்ளார். அதிலும் இப்பெண்களில் பெரும்பாலானவர்கள் 15 வயதுக்கும் கீழ் உள்ளவர்கள். இன்னும் ஒருபடி மேலே சென்று, தன்னுடைய மகளையே இவர் திருமணம் செய்துள்ளார்.

இவர், பலதார மணம் மீது விருப்பம் கொண்ட குழு ஒன்றைத் தொடங்கி உள்ளார். 2019 - ம் ஆண்டில் இவரை, சிறிய குழு ஒன்று பின்பற்றத் தொடங்கியுள்ளது. அதைக் கண்டவர் தன்னை ஒரு தீர்க்கதரிசி என்று பிரகடனபடுத்த தொடங்கி உள்ளார்.
சைபர் கிரைம் அதிகாரிகள், இவரின் இரண்டு வீடுகளில் அதிரடி சோதனைகளை நடத்தினர். அதில் இவர் மைனர் திருமணங்கள் செய்தது மற்றும் பெண்களுடன் உறவு வைத்திருந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன.
ஆனால், இவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்ததற்காகக் குற்றம் சாட்டப்படவில்லை. மாறாக இவரும், இவருடன் சேர்ந்து சில நபர்களும் சிறார்களைக் கடத்த முயன்றுள்ளனர். இவரின் கார், இரண்டு பெண்களோடு சென்றதைத் தொடர்ந்து, இவர் கைது செய்யப்பட்டு, மூன்று குழந்தைகளைத் துஷ்பிரயோகம் செய்த குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டார்.

ஆனால் விரைவிலேயே, ஜாமினில் வெளிவந்துள்ளார். அதன் பின் வேறொரு காரணத்திற்காக கைது செய்யப்பட்டவரின் வீட்டில் சோதனை நடத்தியபோது தான், பல திடுக்கிடும் ஆதாரங்கள் இருந்துள்ளன. அதன்பின், இவர் அரிசோனா சிறையில் அடைக்கப்பட்டார். பலதாரமணம் மீது கொண்ட மோகத்தால், மகளையே தந்தை மணந்த இந்தச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.