Published:Updated:

மீண்டெழும் குமரி… நாகர்கோவிலில் ஐம்பெரும் விழா ; நாளை தொடங்குகிறது!

தாமஸ் பிராங்கோ
News
தாமஸ் பிராங்கோ

பாரம்பர்ய உணவு திருவிழாவில் பழங்கஞ்சி, கருவாடு, துவையல், உளுந்து சோறு, கிழங்கும் பன்றிக்கறியும், சுட்ட இறைச்சி, கடற்கரை மக்கள் பயன்படுத்தும் மீன் உணவுகள், மீன் ஊறுகாய்கள் அடங்கிய பாரம்பரிய உணவுகள் இடம்பெறும்.

Published:Updated:

மீண்டெழும் குமரி… நாகர்கோவிலில் ஐம்பெரும் விழா ; நாளை தொடங்குகிறது!

பாரம்பர்ய உணவு திருவிழாவில் பழங்கஞ்சி, கருவாடு, துவையல், உளுந்து சோறு, கிழங்கும் பன்றிக்கறியும், சுட்ட இறைச்சி, கடற்கரை மக்கள் பயன்படுத்தும் மீன் உணவுகள், மீன் ஊறுகாய்கள் அடங்கிய பாரம்பரிய உணவுகள் இடம்பெறும்.

தாமஸ் பிராங்கோ
News
தாமஸ் பிராங்கோ

மீண்டெழும் குமரி அமைப்பு மற்றும் பசுமை விகடன் இணைந்து நடத்தும் ஐம்பெரும் விழா நாகர்கோவிலை அடுத்த சுங்கான்கடை புனித சவேரியார் கத்தோலிக்க பொறியியல் கல்லூரியில் நாளை காலை தொடங்குகிறது. காலை 10 மணிக்கு நடக்கும் தொடக்க விழாவில் புனித சவேரியார் கத்தோலிக்க பொறியியல் கல்லூரி முதல்வர் மரிய வில்லியம் தலைமை வகிக்கிறார். மீண்டெழும் குமரி இயக்க பெருந்தலைவர் தேவசகாயம் அறிமுக உரையாற்றுகிறார். நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் தொடக்கவுரையாற்றுகிறார். கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த், முன்னாள் எம்.எல்.ஏ லீமாறோஸ் ஆகியோர் சிறப்புரையாற்றுகின்றனர். மூன்று நாள் நடக்கும் இந்த ஐம்பெரும் விழாவின் நிறைவு நிகழ்ச்சியில் அமைச்சர் மனோதங்கராஜ் கலந்துகொள்கிறார்.

செய்தியாளர் சந்திப்பில்
செய்தியாளர் சந்திப்பில்

இதுகுறித்து மீண்டெழும் குமரி அமைப்பைச் சேர்ந்த தாமஸ் பிராங்கோ இன்று நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் கூறியதாவது, "பாரம்பர்ய உணவு திருவிழா, நஞ்சில்லா வேளாண் திருவிழா, பனை திருவிழா, அறிவு திருவிழா, கலைத்திருவிழா ஆகிய ஐம்பெரும் விழா மூன்று நாட்கள் நடக்கிறது.

குமரி மாவட்டத்தில் பழைய பாரம்பர்யத்தை நினைவுபடுத்தும் விதமாக 23 ஸ்டால்கள் அமைக்கப்படுகின்றன. சுய உதவிகுழுக்கள், மலைவாழ் மக்கள் இணைந்து இந்த ஸ்டால்களை நடத்துகின்றனர். பாரம்பர்ய உணவு திருவிழாவில் பழங்கஞ்சி, கருவாடு, துவையல், உளுந்து சோறு, கிழங்கும் பன்றிக்கறியும், சுட்ட இறைச்சி, கடற்கரை மக்கள் பயன்படுத்தும் மீன் உணவுகள், மீன் ஊறுகாய்கள் அடங்கிய பாரம்பரிய உணவுகள் இடம்பெறும்.

நஞ்சில்லா வேளாண் திருவிழாவில் இயற்கை அங்காடிகள் கலந்துகொள்கின்றன. பூச்சிக்கொல்லி மருந்துகள் பயன்படுத்தாமல் இயற்கை முறையில் விளைவித்த உணவுகள், பாரம்பர்ய கிழங்குகள், காணி மக்கள் விளைவித்த பொருட்கள் ஆகியவை விற்பனைக்கு வைக்கப்படுகின்றன. நூறுவகையான மூலிகைகள் காட்சிக்கு வைக்கப்படுகின்றன. பனை திருவிழாவில் பனங்கல்கண்டு, கருப்பட்டி போன்ற பனைசார்ந்த உணவு பொருட்கள், பனை சார்ந்த கலைப்பொருட்கள் கண்காட்சி விற்பனைக்கும் வைக்கப்படுகின்றன.

ஐம்பெரும் விழா பற்றி பேசுகிறார் தாமஸ் பிராங்கோ
ஐம்பெரும் விழா பற்றி பேசுகிறார் தாமஸ் பிராங்கோ

அறிவு திருவிழாவில் அறிவியல் சோதனைகள், மாணவர்களின் படைப்புகள் கண்காட்சிக்கு வைக்கப்படும். கலை கலாச்சார விழாவில் பாரம்பர்ய சிலம்பம், வர்ம கலைகள் செய்து காண்பிக்கப்படும். பாரம்பர்ய விளையாட்டு கருவிகள் காட்சிக்கு வைக்கப்படுகின்றன. பாரம்பர்ய விளையாட்டுக்களும் நடத்தப்படுகின்றன. 100 விதமான மூலிகைகள் காட்சிப்படுத்தப்படுகின்றன. மாவட்டத்தின் அழகான பகுதிகளின் போட்டோஸ்கள் காட்சிக்கு வைக்கப்படுகின்றன. இந்த விழாவை ஆண்டுதோறும் நடத்த திட்டமிட்டுள்ளோம்" என்றார். செய்தியாளர் சந்திப்பின்போது புனித சவேரியார் கத்தோலிக்க பொறியியல் கல்லூரி முதல்வர் மரிய வில்லியம், மலர் மகளிர் மேம்பாட்டுகுழு நிர்வாகி ஜான்சிலிபாய், லெமூரியா அடிமுறை பயிற்சி ஒருங்கிணைப்பாளர் செல்வின், கிராம முன்னேற்றசங்க இயக்குநர் நித்திய சகாயம் ஆகியோர் உடன் இருந்தனர். இந்த விழாவுக்கு பசுமை விகடன் இதழ் ஊடக ஆதரவு வழங்கியுள்ளது.