ஆசிரியர் பக்கம்
தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
தொடர்கள்
Published:Updated:

பெண்ணே ரிலாக்ஸ் ப்ளீஸ் 3.0

சுவாமி சுகபோதானந்தா
பிரீமியம் ஸ்டோரி
News
சுவாமி சுகபோதானந்தா

இதோ... மீண்டும் சுவாமி சுகபோதானந்தா உங்கள் மன பாரங்களை இறக்கிவைக்க ஒரு மேடை அமைக்க இருக்கிறார்.

விகடன் குழுமத்திலிருந்து 23 ஆண்டுகளுக்கு முன் அவள் விகடன் ஆரம்பிக்கப்பட்டபோது சுவாமி சுகபோதானந்தாவின் எழுத்தில் `உன் உள்ளம் துள்ளட்டும்' என்ற தொடர் வெளிவந்து, பெண்களின் மன பாரங்களுக்கு மருந்திட்டு, அவர்களை ரிலாக்ஸ்டாக உணர வைத்தது.

பத்தாண்டுகளுக்குப் பிறகு, மீண்டும் அவள் விகடனில் அவர் எழுதிய மற்றொரு தொடரான `பெண்ணே ரிலாக்ஸ் ப்ளீஸ்' பலருக்கு உற்சாகமும், உத்வேகமும் கொடுத்தது. விழும்போது கைகொடுத்தும், எழும்போது தோள்கொடுத்தும், அழும்போது கண்ணீர் துடைத்தும் அது வாசகர்களின் மனதில் பல அற்புதங்களைச் செய்தது.

பெண்ணே ரிலாக்ஸ் ப்ளீஸ் 3.0

இதோ... மீண்டும் சுவாமி சுகபோதானந்தா உங்கள் மன பாரங்களை இறக்கிவைக்க ஒரு மேடை அமைக்க இருக்கிறார். நல்லதோ, கெட்டதோ எதை வேண்டுமானாலும் பகிர்ந்துகொள்ளுங்கள். கேள்வியோ, யோசனையோ... எதை வேண்டு மானாலும் கேளுங்கள். இப்படிக் கேட்கும்போது உங்களின் அடையாளத்தை நீங்கள் வெளிப்படுத்த வேண்டிய கட்டாயமில்லை. அது முக்கியமுமில்லை.

வியாழன்தோறும் விகடன் வலைதளத்தில் பதிவேற விருக்கும் இந்தத் தொடரில் மன பிரச்னைகளுக்கு தீர்வுகள் கிடைக்கும். `பெண்ணே ரிலாக்ஸ் ப்ளீஸ் 3.0' தொடரின் முதல் கட்டுரையை https://bit.ly/3kTeEcF லிங்கில் படிக்கலாம்.