Published:Updated:

கோவை: கழிவுநீர் வெளியேற வழியில்லை; 27 ஆண்டுகளாகச் சிரமப்படுகிறோம்! - கலங்கும் மக்கள்

கோவை
News
கோவை

``எங்கள் பிரச்னைகளை யாரும் வந்து கேட்பதில்லை. கழிவுநீர் பூமியில் இறங்கும் வகையில் தொட்டி அமைக்கவும் வழியில்லை. கழிவுநீரை வெளியேற்ற எங்களுக்கு வேறு எந்த வழியும் இல்லை.”

Published:Updated:

கோவை: கழிவுநீர் வெளியேற வழியில்லை; 27 ஆண்டுகளாகச் சிரமப்படுகிறோம்! - கலங்கும் மக்கள்

``எங்கள் பிரச்னைகளை யாரும் வந்து கேட்பதில்லை. கழிவுநீர் பூமியில் இறங்கும் வகையில் தொட்டி அமைக்கவும் வழியில்லை. கழிவுநீரை வெளியேற்ற எங்களுக்கு வேறு எந்த வழியும் இல்லை.”

கோவை
News
கோவை

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. காலை 11:00 மணியளவில் தொடங்கவிருந்த கூட்டத்துக்கு 10:00 மணி முதல் மனுதாரர்கள் வரத் தொடங்கினர். மேயர் கல்பனா, துணை மேயர் வெற்றிச்செல்வன், கோவை மாநகராட்சி ஆணையர் பிரதாப், துணை ஆணையர் ஷர்மிளா மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் குறைகளைக் கேட்டறிந்தனர்.

கோவை
கோவை

கோவை தியாகி குமரன் மார்க்கெட் அனைத்து காய்கனி வியாபாரிகள் சங்கம் சார்பில் கடை வாடகை உயர்வை ரத்துசெய்யக் கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டது. கவுண்டம்பாளையம் எஸ்.பி.நகரில் மாநகராட்சிப் பூங்கா ஆக்கிரமிப்பு செய்யப்பட்டது, உக்கடம் குடோன்களில் பிளாஸ்டிக் எரிக்கப்படுவது, ரிசர்வ் சைட் ஆக்கிரமிப்பு உள்ளிட்ட பல்வேறு மனுக்கள் கொடுக்கப்பட்டன. சொத்து வரி உயர்வு, சாலை வசதி வேண்டி, நகர நில அளவை தொடர்பான கோரிக்கை மனுக்கள், குடிநீர் இணைப்பு, பெயர் மாற்றம், சுகாதாரம், அடிப்படை வசதிகள் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை மனுக்களும் வழங்கப்பட்டன.

கோவை ரத்தினபுரி 32-வது வார்டில் முறையான கழிவுநீர் வாய்க்கால் வசதி வேண்டி மனு கொடுக்க வந்திருந்தவர்களிடம் பேசினோம். “நாங்கள் ரத்தினபுரி தண்டல்ராமன் வீதியில் குடியிருக்கிறோம். கிட்டத்தட்ட 27 வருடங்களாக எங்கள் குடியிருப்பில் இந்தப் பிரச்னை இருக்கிறது. வரி செலுத்த தாமதமானால் மட்டும் உடனே வந்து கேட்கின்றனர். எங்கள் பிரச்னைகளை யாரும் வந்து கேட்பதில்லை. கழிவுநீர் பூமியில் இறங்கும் வகையில் தொட்டி அமைக்கவும் வழியில்லை. கழிவுநீரை வெளியேற்ற எங்களுக்கு வேறு எந்த வழியும் இல்லை. எங்கள் பகுதியில் கழிவுநீர் வாய்க்காலே இல்லை. அதேநேரம், குடியிருப்புக்குச் செல்லும் வழியிலுள்ள சாக்கடைகளும் குப்பைகளால் நிறைந்துள்ளன. எங்கள் குடியிருப்புக்குச் செல்லவும், வெளியேறவும் இதனால் சிரமம் ஏற்படுகிறது. எங்கள் மனுவைப் பரிசீலித்து விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.

கோவை: கழிவுநீர் வெளியேற வழியில்லை; 27 ஆண்டுகளாகச் சிரமப்படுகிறோம்! - கலங்கும் மக்கள்

அதே பகுதியைச் சேர்ந்த அழகர், ``25-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கிறோம். கழிவுநீர் வெளியேற வழியில்லாதது பெரும் சுகாதாரச் சீர்கேடாக இருக்கிறது. மழைக்காலங்களில் தெருவில் நடமாடக் கஷ்டமாக இருக்கிறது. கூடிய விரைவில் தீர்வு வேண்டுகிறோம்” என்றார்.

கோவை: கழிவுநீர் வெளியேற வழியில்லை; 27 ஆண்டுகளாகச் சிரமப்படுகிறோம்! - கலங்கும் மக்கள்

இந்தக் கூட்டத்தில் மொத்தம் 54 மனுக்கள் வழங்கப்பட்டன. 60-க்கும் மேற்பட்ட மக்கள் கூட்டத்தில் கலந்துகொண்டனர். பெருமளவில் முதியோர்களே வந்திருந்தனர். மனுக்களைப் பெற்றுக்கொண்ட மேயர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை உடனே அழைத்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார்.