Published:Updated:

``பெட்ரோல், டீசலை கேன்களில் வழங்க வேண்டும்...'' கோரிக்கை வைக்கும் டான்ஸ்டியா; காரணம் என்ன?

பெட்ரோல்
News
பெட்ரோல்

சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் 6 மணி நேர மின்சாரத்தைத் தவிர்த்து, மற்ற நேரத்தில் டீசல் இன்ஜின் அல்லது டீசல் ஜெனரேட்டர்கள் மூலமாகவே இயந்திரங்கள் இயக்கப்படுகின்றன.

`சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்களுக்கு பெட்ரோல் மற்றும் டீசலை கேன்களில் வழங்க வேண்டும்' என டான்ஸ்டியா (Tanstia) தமிழக அரசுக்குக் கோரிக்கை வைத்துள்ளது.

பெட்ரோல்
பெட்ரோல்

தமிழகத்தில் கேன்கள் மூலமாக பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை செய்யக் கூடாது எனச் சட்ட ஒழுங்கு ஆணையானது நடைமுறையில் உள்ளது. இது சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்களை பாதிக்கும் எனத் தெரிவித்து, கேன்கள் மூலம் சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்களுக்கு பெட்ரோல் மற்றும் டீசல் வழங்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார், டான்ஸ்டியா தலைவர் க.மாரியப்பன்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ``மாவட்டத்தின் பல பகுதிகளில், கிராமங்களில் செயல்படும் சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் 6 மணி நேர மின்சாரத் தைத் தவிர்த்து, மற்ற நேரத்தில் டீசல் இன்ஜின் அல்லது டீசல் ஜெனரேட்டர்கள் மூலமாகவே இயந்திரங்கள் இயக்கப்படுகின்றன.

ஆதார் அட்டை
ஆதார் அட்டை

எனவே, சிறு மற்றும் குறு தொழிலை நடத்துபவரின் ஆதார் கார்டு, உதயம் பதிவு எண் சான்றிதழ் வைத்தோ, மாவட்ட தொழில் மைய அலுவலகம் அல்லது மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மூலமாக ஆய்வு செய்தோ, இந்த நிறுவனங்கள் இயங்குவதற்குத் தேவையான டீசலை வாங்க தமிழக முதல்வர் வழிவகை செய்ய வேண்டும்'' எனக் கோரிக்கை வைத்துள்ளார்.