Published:Updated:

ம.பி: கோயில் கோபுரத்தில் மோதி விபத்துக்குள்ளான பயிற்சி விமானம்; பைலட் பலி, ஒருவர் படுகாயம்!

விமான விபத்து
News
விமான விபத்து

மத்தியப் பிரதேசத்தில் பயிற்சி விமானம் ஒன்று கோயில் கோபுரத்தில் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:

ம.பி: கோயில் கோபுரத்தில் மோதி விபத்துக்குள்ளான பயிற்சி விமானம்; பைலட் பலி, ஒருவர் படுகாயம்!

மத்தியப் பிரதேசத்தில் பயிற்சி விமானம் ஒன்று கோயில் கோபுரத்தில் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

விமான விபத்து
News
விமான விபத்து

மத்தியப் பிரதேச மாநிலத் தலைநகர் போபாலிலிருந்து 400 கி.மீ தொலைவிலுள்ள ரேவா மாவட்டத்தில் பயிற்சி விமானம் விபத்துக்குள்ளானதில் விமானி உயிரிழந்தார்.

இந்த விபத்து நேற்றிரவு 11.30 மணியளவில் சோர்ஹாட்டா விமான ஓடுபாதையிலிருந்து 3 கி.மீ தொலைவில் நடந்திருக்கிறது. இங்கு சோர்ஹாட்டா விமான ஓடுபாதையில் விமான ஓட்டும் பயிற்சியில் கேப்டன் விஷால் யாதவ் (30), பயிற்சி விமானி அன்ஷுல் யாதவ் ஆகியோர் ஈடுபட்டுவந்தனர்.

இந்தப் பயிற்சி விமானம் தாழ்வாகப் பறந்து சென்றபோது அந்தப் பகுதியிலிருந்த கோயில் கோபுரம் மற்றும் மரத்தின்மீது பலமாக மோதி கீழே விழுந்திருக்கிறது. இதைக்கண்டு, அதிர்ச்சியடைந்த கிராம மக்கள் உடனடியாக போலீஸாருக்குத் தகவல் தெரிவித்திருக்கின்றனர்.

தகவலறிந்து உடனே சம்பவ இடத்துக்கு விரைந்த, ரேவா மாவட்டத்தின் கலெக்டர் மனோஜ் புஷ், காவல்துறை அதிகாரிகள், விபத்தில் சிக்கியிருந்த கேப்டன் விஷால் யாதவ், அன்ஷுல் யாதவ் ஆகிய இருவரையும் மீட்டிருக்கிறார்கள். அதில் கேப்டன் விஷால் யாதவ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

விமான விபத்து
விமான விபத்து
ட்விட்டர்

படுகாயமடைந்த அன்ஷுல் யாதவ், சஞ்சய் காந்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக சோர்ஹாட்டா காவல் நிலையப் பொறுப்பாளர் தெரிவித்திருக்கிறார். இந்த விபத்து குறித்து கூடுதல் விசாரணை நடந்துவருகிறது. இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.